வலை வழங்கி
வலை வழங்கி (web server) என்பது அடிப்படை தகவல்தொடர்பு நெறிமுறையான மீயுரை பரிமாற்ற நெறிமுறையை பயன்படுத்தி கோரிக்கைகளை செயல்படுத்தும் ஒரு கணினி அமைப்பு ஆகும். இது உலகளாவிய வலையில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. வலை வழங்கி என்ற பதம் மொத்த கணினி அமைப்பையோ அல்லது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மேற்பார்வை செய்யும் மென்பொருளையோ குறிக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது. [1]

டெல் பவர்எட்ச் வலை வழங்கியின் முன்புற மற்றும் உட்புற தோற்றம்.

உயர் போக்குவரத்து வலைத்தளத்தில் பல வலை வழங்கிகள் பயன்படுத்தப்படலாம். இங்கு நான்கு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சன் ஃபயர் X4200 வலை வழங்கிகள் ஒன்றாக நிறுவப்பட்டுள்ளன.
வலை வழங்கியின் மிக பொதுவான பயன்பாடு வலைத்தளங்களை (அவை சம்மந்தப்பட்ட கோப்புகளை) சேமித்து, பயனர்களுக்கு வழங்குவதாகும். அதன் மற்ற பயன்பாடுகள் விளையாட்டு, தரவு சேகரிப்பு, நிறுவன செயலிகளை இயக்குதல், மின்னஞ்சல் கையாளுதல், கோப்புப் பரிமாற்ற நெறிமுறை, மற்றும் பல வலை சார்ந்த பயன்பாடுகள்
மேலும் பார்க்க
சான்றுகள்
- "What is web server?'". webdevelopersnotes (2010-11-23). பார்த்த நாள் 2014-12-20.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.