வலிநீக்கி

வலிநீக்கி (analgesic) என்பது, உணர்விழப்பை ஏற்படுத்தாமல் வலி உணர்வைப் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறுவகையான மருந்து வகைகளுள் ஏதாவது ஒன்றைக் குறிக்கும். வலிநீக்கி மருந்துகள், புறநரம்பு மண்டலம் மற்றும் மையநரம்பு மண்டலம் ஆகியவற்றில், பல்வேறு விதங்களில் செயற்படுகின்றன. இவற்றுள், பாராசித்தமோல், சலிசைலேட்டுகள் போன்ற இயக்க ஊக்கிகள் அல்லாத ஆழற்பகை மருந்துகள் (nonsteroidal anti-inflammatory drugs), மார்பைன் (morphine) போன்ற போதையூட்டி மருந்துகள், ட்ராமடோல் (tramadol) போன்ற போதையூட்டி இயல்புகள் கொண்ட செயற்கை மருந்துகள் என்பன அடங்கும். பொதுவாக வலிநீக்கிகளாகக் கருதப்படாத மூவளைய ஏக்கப்பகை மருந்துகள் (tricyclic antidepressants), மற்றும் வலிப்பு அடக்கிகள் (anticonvulsants) போன்ற மருந்துகளும், நரம்புநோய் நோய்குறித் தொகுப்பு (neuropathic pain syndromes) தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.