வலஞ்சுழி

இடஞ்சுழி (Anticlockwise) என்பது கடிகாரத்தின் முட்கள் சுழலும் திசைக்கு எதிரான திசையில் சுழல்வதாகும். மாறாக கடிகாரத்தின் முட்கள் சுழலும் திசையில் சுழல்வது வலஞ்சுழி (Clockwise ) யாகும். சாதாரண தராசில் வலஞ்சுழி சுழல்திறனும் (Moment ) இடஞ்சுழி சுழல்திறனும் சமமாகும்.

வலஞ்சுழி திசை
இடஞ்சுழி திசை

வரலாறு

ஒரு சுழற்சியின் இயக்கம் இடஞ்சுழியா அல்லது வலஞ்சுழியா எனக் கூறுவதற்கு, முதலில் இந்த சுழற்சியை காண்பவர் எந்த சமதள பரப்பில் இருந்து அதை காண்கிறார் என்று கூற வேண்டும். உதாரணதிற்கு வடக்கு துருவத்திலிருந்து கவனித்தால், பூமி வலஞ்சுழி திசையில் சுற்றுவதுப் போல தோன்றும், கிழக்கு துருவத்திலிருந்துப் பார்த்தால் இடஞ்சுழி திசை போல் தோன்றும்.

வழக்கமாக கடிகாரங்களிலுள்ள கைகள் வலஞ்சுழி திசையில் சுற்றும். இதற்கு காரணம், சூரிய கடிகாரம் மட்டமான தரையில் வைத்தால் அப்படித்தான் இயங்கும். கடிகாரங்களை முதன் முதலில் வடிவமைததவர்கள் வடக்கு துருவத்தில் வாழும் மக்கள். அங்கு, பூமி வலஞ்சுழி திசையில் சுற்றுவதால், சூரியனின் ஒளிக்கு ஏற்ப அதன் நிழலும் வலஞ்சுழி திசையில் சுற்றும். சூரிய கடிகாரத்தை மையமாக கொண்டு கடிகாரங்கள் வடிவமைத்ததால்தான், கடிகாரத்திலுள்ள கைகளும் வலஞ்சுழி திசையில் சுற்றுகின்றன.

அன்றாட வாழ்வில்

அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களான, திருகாணி, புட்டி மூடிகள் மற்றும் ஜாடி மூடிகள் இந்த சுழி திசையை கொண்டுள்ளது. பொதுவாக வலஞ்சுழி திசையில் திருகினால் இருக்கமாகும், மாறாக இடஞ்சுழி திசையில் திருகினால் திறக்கும். இப்படி அமையப் பெற்றதின் காரணம், வலது கை பழக்கமுடையவர்களுக்கு எளிதாக ஆனால், சில பயன்பாட்டிற்காக எதிர்மறையாகவும் அமைந்திருக்கும்.

கணிதத்தில்

கணிதத்தில் ஒரு முக்கியமான பிரிவு, கோணவியல் (trigonometry). சமதளப் பரப்பில் கோணங்களை அளவிட இடஞ்சுழி திசையையே வழக்கமாக பயன்படுத்துவார்கள்.

விளையாட்டில்

அடிபந்தாட்டம் விளயாட்டில், மட்டையாடுபவர் ஓட்டம் எடுக்கையில் அடித்தளங்களை நோக்கி, இடஞ்சுழி திசையில் ஓடுவார்கள்.

அறிவியலில்

எலக்ட்ரான்கள் தற்சுழற்சிப் பெற்று இருக்கின்றன. இவைகளின் சுழல் உந்தம், ±½ என்று கொடுக்கப்படுகிறது. இது அவைகள் வலஞ்சுழியாக சுழல்கிறதா அல்லது இடஞ்சுழியாகச் சுழல்கிறதா என்பதனைப் பொறுத்து இருக்கிறது. இதேபோல் காந்த ஒத்ததிர்வு படிமயியலில் (MRI) கருத்துகள்களின் தற்சுழற்சி கவனமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.