வனத்து சின்னப்பர்

புனித வனத்து சின்னப்பர் (Paul of Thebes, காப்டிக்: ⲘⲉⲧⲢⲉⲙ̀ⲛⲭⲏⲙⲓ; 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), முதல் கிறிஸ்தவ வனவாசி ஆவார்.

புனித வனத்து சின்னப்பர்
புனித வனத்து சின்னப்பர்
முதல் வனவாசி
பிறப்புகிபி 228
எகிப்து
இறப்புகிபி 341
தெபிஸ், எகிப்து
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம்
கிழக்கு மரபு
முக்கிய திருத்தலங்கள்புனித வனத்து சின்னப்பர் மடம், எகிப்து மற்றும் (இந்தியாவில்) (தமிழ்நாடு)மாநிலம் விமுப்புரம் மாவட்டம் (கல்பட்டு)கிராமதிலும், திருச்சி மறைமாவட்டம், ப. உடையாப்பட்டி பங்கிலும் இந்த புனிதர் திருத்தலம் உள்ளது. இப்படிக்கு எஸ்.ஜோசப் ரெஜிஸ்.கல்பட்டு.
திருவிழாஜனவரி 15 - கத்தோலிக்கம்
ஜனவரி 5 அல்லது ஜனவரி 15 - கிழக்கு மரபு
சித்தரிக்கப்படும் வகைஇரண்டு சிங்கம், ஈஞ்சு (ஈச) மரம் , காகம்
பாதுகாவல்சென் ஃபேபுலோ நகர், பிலிப்பைன்ஸ்

தேசியுஸ் அரசன் வேத கலகத்தை தொடங்கிய போது, இவர் காட்டுக்கு ஓடிப்போனார். அங்கே ஒரு மலைக் குகையில் வாழ்ந்து வந்தார். அப்போது இவருக்கு வயது இருபத்திரண்டு. 42 ஆண்டுகளாக அக்குகைக்கு அருகே இருந்த ஈஞ்சு மரக்கனியை உண்டு, அருகிலிருந்த அருவியில் நீர் அருந்தி வாழ்ந்துவந்தார். அதன் பின்பு ஒரு காகம் கொண்டுவந்த ரொட்டியை தினமும் உண்டு வாழ்ந்தார்.

புனித ஜெரோம் தனது வித்தே பத்ரும் (Vitae Patrum) என்னும் நூலில் புனித வனத்து சின்னப்பரின் 113-ஆம் அகவையில் அவரை சந்தித்ததையும், ஒரு பகல், ஒரு இரவு உரையாடியதையும் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த முறை சந்திக்க சென்ற போது, இவர் இறந்து போயிருந்ததாகவும், இரு சிங்கங்களின் துணையோடு இவரை புதைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இரண்டு சிங்கம், ஈஞ்சு (ஈச) மரம் மற்றும் காகம் இவரது சின்னமாக கருதப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.