வந்தே மாதரம் (திரைப்படம்)

வந்தே மாதரம் (Vandae Maatharam) டி. அரவிந்த் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். மலையாளத்திலும், தமிழிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது. பின்னர், தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. மம்மூட்டி, அர்ஜுன், ஷ்ரதா ஆர்யா, ராஜ்கபூர், நாசர், ஜெய் ஆகாஷ், ஜெகதீஷ் தீபக் ஜேத்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹென்றி தயாரிப்பில், டி, இமான் இசையில், 10 செப்டம்பர் 2010 அன்று வெளிநாடுகளிலும், 17 செப்டம்பர் 2010 அன்று இந்தியாவிலும் வெளியானது.[1]

நடிகர்கள்

மம்மூட்டி, அர்ஜுன், ஷ்ரதா ஆர்யா, ராஜ்கபூர், நாசர், ஜெய் ஆகாஷ், ஜெகதீஷ் தீபக் ஜேத்தி, ரியாஸ் கான், ஜெயப்ரகாஷ், மோகன் ஷர்மா, ரச்சனா மௌர்யா, டெய்சி ஷா.

கதைச்சுருக்கம்

கோபி கிருஷ்ணனும் (மம்மூட்டி) அன்வர் ஹுசைனும் மிகவும் கண்டிப்பான காவல் அதிகாரிகள். உழவர்களின் பிரச்சனைகளையும், அது தொடர்புடைய சமூக வன்முறைகளையும் ஆராய்ந்து, அதை சரிசெய்ய இருவரும் முயற்சி செய்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகள் அவர்களுக்கு பல இடையூறுகளை செய்கின்றன. விமானத்துறையில் பணிபுரிகிறார் கோபாலகிருஷ்ணனின் மனைவி நந்தினி (சிநேகா). அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பது பெரிய துயரமாக இருந்து வந்தது.

அந்த இரு காவல் அதிகாரிகளும் எவ்வாறு பயகரவாதிகளை முறியடித்து நாட்டை காத்தனர் என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

டி. இமான் இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் ஆவார். வைரமுத்து, ஸ்நேஹன், நந்தலாலா மற்றும் விவேகா ஆகியோர் தமிழில் பாடல்களை எழுதினர். வைரமுத்து எழுதிய தேசபக்தி நிறைந்த பாடலை பத்து பாடகர்கள் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு

2007 ஆம் ஆண்டு நடுவில் படப்பிடிப்பு துவங்கியது.[2] கார்த்தி என்ற இயக்குனரை வைத்து படம் துவங்கப்பட்டாலும், பின்னர் டி. அரவிந்த் என்ற புதுமுக இயக்குனரை வைத்து தயாரித்தார் ஹென்றி.[3]

வெளியீடு

இந்தப் படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியது. இந்திய தணிக்கை குழு இப்படத்திற்கு "யு" சான்றிதழ் வழங்கியது.

வரவேற்பு

ஐந்திற்கு இரண்டு மதிப்பெண்கள் பெற்று, திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னமும் படம் நன்றாக இருந்திருக்கும் என்ற விமர்சனத்தைப் பெற்றது.[4]

வெளி-இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "http://www.thaindian.com".
  2. "http://www.sify.com".
  3. "http://www.indiaglitz.com".
  4. "http://sify.com".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.