வடிகட்டி (கதிர் மருத்துவம்)
கதிர் மருத்துவத்தில் வடிகட்டி (filter) என்பது மென் எக்சு கதிர்களைத் தனியாகப் பிரித்து தேவையான கதிர்களை மட்டும் வெளிவிடும் ஓர் அமைப்பு ஆகும்.
எக்சு கதிர் கருவியில் குவியத்தில் தோன்றும் கதிர்கள் பல அலை நீளங்களையும் கொண்டுள்ளன. அலை நீளம் கூடிய கதிர்கள் எவ்விதத்திலும் கதிர் படம் எடுக்கப் பயன்படாது. அது நோயாளிக்கு வீணாகக் கதிர் ஏற்பளவினைக் கொடுக்கும். இந்த மென் கதிர்களை அகற்ற வடிகட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன. பொதுவாக அலுமினியம் தகடுகள் இதற்காக உபயோகப்படுகின்றன. பன்னாட்டுக் கதிரியல் காப்புக் கழகத்தின் (ICRP ) பரிந்துரைப்படி கதிர்வீச்சுக்களுக்கு ஏற்ப பின்வரும் வடிகட்டிகள் பயன்படுத்தப்படவேண்டும்:
- 70 Kv பெறப்படும் கதிர்களுக்கு 1.5 Al தகடு
- 100 Kv இல் பெறப்படும் கதிர்களுக்கு 2.0 Al தகடு
- 100 Kv இற்கு மேல் பெறப்படும் கதிர்களுக்கு 2.5 Al தகடு
மேற்கோள்கள்
- Fundamental physics of radiology- Massey and Meridith
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.