லைட்டிகான்
லைட்டிகான் (Litigon) என்பது ஆண் சிங்கத்திற்கும் பெண் டைகானுக்கும் கலப்பினத்தின் மூலமாக பிறந்த ஒரு பூனை இனத்தைச் சேர்ந்த பேரின ஆசிய சிங்கம் போன்ற தோற்றம் உடைய விலங்காகும்.[1]
லைட்டிகான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
குடும்பம்: | பூனைக் குடும்பம் |
பேரினம்: | பாந்தெரா |
இனம்: | (பாந்தெரா புலி♂ × பாந்தெரா சிங்கம்♀)♀ × Panthera leo♂ |
வரலாறு
1971ம் ஆண்டு முதன் முறையாக இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா அருகில் உள்ள அலிபூர் விலங்குக் காட்சிச்சாலையில் ஒரு பெண் லைட்டிகான் பிறந்தது. இதற்கு ருத்ராணி (Rudrani) என்று பெயர். தேபாபிரதா என்ற ஆசிய சிங்கம் மூலம் இது பிறந்தது. இது ஒரு அரிய வகை இரண்டாவது கலப்பினம் என்று பெயர் பெற்றது. அதன் பின்னர் ருத்ராணி ஏழு லைட்டிகான்களை பெற்றெடுத்தது. இந்த வகைகளில் 1991ம் ஆண்டு இறந்த கூபனகனின் (Cubanacan) எடை சுமார் 363 கி.கி ஆகும். இதன் உயரம் 1.32 மீட்டர்கள். இதன் ஒட்டு மொத்த நீளம் 3.5 மீட்டர்கள் (11 அடி) ஆகும்.
மேற்கோள்
- Singh, Atiya (25 April 1985). "Okapis and litigons in London and Calcutta". New Scientist (1453): 7.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.