லெவிக்கள்
லெவிக்கள் - விளக்கம்
ஆறுகளில் லெவிக்களின் செயல்பாடு
லெவிக்கள் எனப்படுபவை ஆறுகளின் நீரோட்ட வேகம் குறையும்போது கடத்தி வரப்படும் பாறைத்துகள்கள் அனைத்தையும் கடத்த முடிவதில்லை. எனவே இவற்றுள் ஒரு பகுதி ஆற்றுப்படுகையில் படிந்து விடுகிறது. இத்தகைய பாறைப் பொருட்கள் படிந்து கொண்டே ரும்போது காலப்போக்கில் நீர் மட்டம் உயரும். வெள்ளத்தின் போது ஆற்றில் அடித்து வரப்படும் மணல், வண்டல், சேறு போன்றவை வெள்ளச் சமவெளியில் படிகின்றன. வெள்ளம் காரணமாக பள்ளத்தாக்குகளில் நீர் நிரம்பி வழியும் போது அதன் வேகம் தடைப்பட்டு விடுவதால் கடத்தப்படும் பருப்பொருட்கள், நுண்ணிய பொருட்கள் ஆகியவை கரைகளிலேயே படிந்து விடுகின்றன. ஒவ்வொரு முறை வெள்ளம் ஏற்படும்போது கரைகளில் படிவு சேர்கின்ற காரணத்தால் ஆற்றின் இரு புறங்களிலும் கரைகள் தானாகவே வளர்ந்து சுற்றுப்புற மட்டத்தைக் காட்டிலும் உயரமாகக் காணப்படும். இவ்வாறு ஏற்படுத்தப்படும் கரைகளுக்கு லெவிக்கள் என்ற பெயர்.
ஆறுகளில் லெவிக்களின் செயல்பாடு
லெவிக்கள் பல அடி யஉரத்திற்கு வளர்கின்றன. இத்தகைய லெவிக்கள் ஆற்றின் மட்டத்தையும், சுற்றுப் புறத்திலுள்ள வெள்ளச் சமவெளியைக் காட்டிலும் உயரமாக உள்ளன. இத்தகைய லெவிக்களுக்கு இரண்டு புறங்களிலும் நிலமானது சரிவாகக் காணப்படுகிறது. இந்தச் சரிவுகளில் நீர் தங்கி பின்னர் இது சதுப்பு நிலமாக மாறக்கூடும். மழைக்காலத்தில் வெள்ள நீர் பாதிப்பு எற்படாமல் தடுக்க லெவிக்கள் பாதுகாக்கின்றன. ஆனால் மிக அதிக வெள்ளத்தின்போது லெவிக்கள் உடைந்து விடுகின்றன. இதற்கு உதாரணமாக வட சீனாவில் அமைந்துள்ள ஹுவோங்கோ நதியைக் கூறலாம். இந்த ஆற்றின் கரையானது சுற்றுப்புறத்தை விட உயரமாக அமைந்துள்ளதால் அடிக்கடி வெள்ளச் சேதத்தை ஏற்படுத்துகிறது. லெவிக்கள் அமைந்துள்ள நதிகளின் வண்டல் படிவு வழியே நீர்க்கசிவு ஏற்படுவதால் துணை ஆறுகள் தோன்றுகின்றன. இத்துணை ஆறுகள் முதன்மை ஆற்றுக்க இணையாகப் பயணித்து சாதகமான சூழலில் முதன்மை ஆற்றுடன் கலக்கின்றன. இந்தத் துணை ஆறுகள் யாஸூ என்று அழைக்கப்படுகின்றன.
துணை நூல் புப்புறவியல் அனந்தபத்மநாபன். என்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.