லூயி ஜாக் தெனார்

லூயி ஜாக் தெனார் (Louis Jacques Thénard மே 4, 1777 - 21 ஜூன் 1857) ஒரு பிரெஞ்சு வேதியியலாளர்.

லூயி ஜாக் தெனார்
லூயி ஜாக் தெனார்
பிறப்பு4 மே 1777
லா லூப்டியே, சாம்பெயின்
இறப்பு21 சூன் 1857
பாரிஸ்
தேசியம்பிரான்சியர்
துறைவேதியியல்
ஆய்வு நெறியாளர்லூயி நிக்கோலா வாகியுலின்

இவரது தந்தை ஒரு ஏழை விவசாயி ஆவார். தெனார்டை சென் அகாதமியில் சேர்த்து பயிற்றுவிக்க வேண்டும் என எண்ணியிருந்தார். பதினாறாவது வயதில் மருந்தியல் படிப்பு படிக்க இவரை பாரிஸ் நகருக்கு அனுப்பினார். அங்கு அவர் அந்துவான் பிரான்சுவா போர்கிராய் மற்றும் லூயிஸ் நிக்கோலா வாகியுலின் ஆகிய அறிஞர்களின் விரிவுரைகளைக் கேட்டார். வாகியுலின் அவர்களின் சகோதரிகளின் கோரிக்கைகள் காரணமாக இருபது பிராங்குகள் மாதாந்திர கட்டணம் செலுத்த முடியவில்லை என்றாலும் வாகியுலின் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்து கொள்வதில் எளிமையாக இவருக்கு வெற்றிகிட்டியது.[1] அதனால் இவரது முன்னேற்றம் விரைவாக நிகழ்ந்தது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் விரிவுரை மேசையை அவர் கைப்பிடித்தார். இவரது திறமையான நடவடிக்கைகளில் திருப்தியடைந்த அந்துவான் பிரான்சுவா போர்கிராய் மற்றும் லூயி நிக்கோலா வாகியுலின் ஆகிய இரு அறிஞர்களும் 1797 ஆம் ஆண்டு வேதியியல் ஆசிரியராக இவருக்கு பணி நியமனம் வழங்கினர்.

மேற்கோள்கள்

  1.   "Baron Louis-Jacques Thénard". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.