லும்பினித் தோட்டம்


லும்பினித் தோட்டம் (Lumbini Gardens) என்பது இந்திய நாட்டின் கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகவரா ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு பொதுத் தோட்டமாகும். நேபாள நாட்டில் புத்தர் பிறந்த இடமாகக் கருதப்படும் லும்பினியை நினைவு கூறும் விதமாக இப்பெயர் இந்திய அரசாங்கத்தால் சூட்டப்பட்டுள்ளது.[1] சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இங்கு ஒரு படகுத் துறையும், 12500 சதுர அடிகள் பரப்பளவுள்ள ஒரு செயற்கைக் கடற்கரையும், குழந்தைகளுக்கான நீச்சல் குளமொன்றும் அமைக்கப்பட்டுள்ளன.[2]

லும்பினித் தோட்டத்தில் ஒரு சிலை

மேற்கோள்கள்

  1. "Lumbini Gardens in Bangalore". http://www.bengaloorutourism.com/lumbini-gardens.php.
  2. "Lumbini Gardens". Must See India. பார்த்த நாள் 2 February 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.