லீலா சேத்

லீலா சேத் ( Leila Seth, 20 அக்தோபர் 1930--5 மே 2017  தில்லி உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதியாகப் பதவி வகித்தவர். இமாச்சல பிரதேச உயர்நீதி மன்றத்தின் முதல் முதன்மை நீதிபதியாகவும் இருந்தவர்.[1]

லீலா சேத்

வாழ்வும் பணிகளும்

லக்னோவில் பிறந்த லீலா சேத் திருமணம் ஆனதும் தம் கணவருடன் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு சட்டம் பயின்று லண்டன் சட்டத் தேர்வில் வெற்றி பெற்று முதலில் வந்தார்.

இந்தியாவில் அசோக் குமார் சென் என்னும் வழக்கறிஞரிடம் இளையராகப் பணி செய்தார். வரிகள் சம்பந்தமான வழக்குகள், திருமண முறிவுகள் தொடர்பான குற்றவியல் வழக்குகள் போன்றவற்றை நடத்தினார். பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் வாரிசு உரிமைகள் சட்டத் திருத்தம் உண்டாகப் பங்களிப்புச் செய்தார். பொது உரிமையியல் சட்டம்  என்னும் கருத்தாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தார். பெண்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து தம் கருத்துகளைச் சொல்லி வந்தார். 15 ஆவது சட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

லீலா  சேத்துக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் ஒரு மகனான விக்ரம் சேத் என்பவர் ஆங்கிலப் புதின ஆசிரியர் ஆவார். லீலா சேத்  தன் வரலாறு நூல் உள்பட மூன்று நூல்கள் எழுதியுள்ளார்.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.