லிசா கெரார்டு
லிசா கெரார்டு (Lisa Gerrard, பிறப்பு ஏப்ரல் 12, 1961) ஆத்திரேலிய இசைக்கலைஞரும், பாடகரும் ஆவார்.தனது முந்தைய கூட்டாளி பிரென்டன் பெர்ரியுடன் உருவாக்கிய டெட் கேன் டான்சு என்ற இசைக்குழுவின் அங்கமாக பிரபலமானார்.
லிசா கெரார்டு | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | லிசா கெரார்டு |
பிறப்பு | ஏப்ரல் 12, 1961 |
பிறப்பிடம் | மெல்பேர்ண், ஆத்திரேலியா |
இசை வடிவங்கள் | கோதிக் ராக், நவீனம், சுற்றுப்புற இசை, எதீரல் வேவ் |
தொழில்(கள்) | பாடகர் Musician Composer |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு யாங்கின் அக்கார்டியன் |
இசைத்துறையில் | 1981 - இன்றுவரை |
இணைந்த செயற்பாடுகள் | டெட் கேன் டான்சு (இறந்தவரும் ஆடலாம்) |
இணையதளம் | லிசா கெரார்டு |
2000ஆம் ஆண்டில் வெளியானத் திரைப்படம் கிளாடியேட்டரில் லிசா அன்சு சிம்மருடன் இணைந்து பாடிய பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும் அகாதமி விருதுக்கான பரிந்துரையும் பெற்றது.
குரல் வளம்
கெரார்டின் குரல் சுருதி குறைந்த கட்டையில் (contralto) E3-F5 வீச்சில் உள்ளது.[1](பொதுவாக பாடகர்கள் Dயில் பாடுவார்கள்).இவரது குரல் ஆழமாக, கனமாக தனிப்பட்டு உள்ளதாக வர்ணிக்கப்படுகிறது.[2][3][4]
அதேநேரம் மேல் ஸ்தாயியில் பாடக்கூடியத் திறனையும் பெற்றுள்ளார். த ஹோஸ்ட் ஆஃப் செரஃபிம், எலஜி, ஸ்பேஸ் வீவர், கம் திஸ் வே மற்றும் ஒன் பெர்ஃபெக்ட் சன்ரைஸ் போன்ற பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன.[5][6]
இவர் தமது பாடல்களை அவரே உருவாக்கிய மொழிவடிவத்தில் பாடுகிறார்.

மேற்கோள்கள்
- Lisa Gerrard
- Original Soundtrack. "A Customer's review of Gladiator: Music from the Motion Picture". Amazon.co.uk. பார்த்த நாள் 2011-10-04.
- "Music: The Mirror Pool (Cassette) by Lisa Gerrard (Artist)". Tower.com (1995-08-22). பார்த்த நாள் 2011-10-04.
- "Lisa Gerrard On Tour". Synthtopia (2007-05-19). பார்த்த நாள் 2011-10-04.
- Elegy
- The Host of Seraphim