லாங்யியர் கணவாய்
லாங்யியர் கணவாய்[1][2] (Longyear Valley) கணவாய் என்பது நோர்வேயின் சிவல்பார்ட்டில் அமைந்திருக்கும் கணவாய் மற்றும் பள்ளத்தாக்கு ஆகும். இக்கணவாய் ஸ்பேர்கன் தீவில் அமைந்துள்ள அட்வென்ட்ஃப்ஜோர்தன் குடாவில் அமைந்திருக்கின்றது. இக்கணவாயானது பிளட்டபேர்கட் (Platåberget) மற்றும் குருவ்ஜெவ்ஜெலட் ஆகிய மலைகளின் இடையே அமைந்துள்ளது.[3] ஜோன் முன்ரோ லாங்யியர் எனும் அமெரிக்கக் கைத்தொழிலாளரின் பெயரில் உருவாகிய லாங்யியர்பியன் நகரமானது இக்கணவாயின் கீழ்ப்பகுதிகளிலேயே அமைந்துள்ளது. லாங்யியர் ஆறும் இக்கணவாயின் ஊடாகவே பாய்கின்றது.[4]

கணவாயில் லாங்யியர் ஆறு பாயும் காட்சி
மேற்கோள்கள்
- Capelotti, P. J. 2000. The Svalbard Archipelago: American Military and Political Geographies of Spitsbergen and Other Norwegian Polar Territories, 1941–1950. Jefferson, NC: McFarland & Company, p. 32.
- Remmert, Hermann. 1980. Arctic Animal Ecology. Berlin: Springer, p. 16.
- DePasqual, Seth. 2012. Winning Coal at 78° North: Mining, Contingency and the Chaîne Opératoire in Old Longyear City. In: Louwrens Hacquebord (ed.), Lashipa: History of Large Scale Resource Exploitation in Polar Areras, pp. 71–82. Groningen: University of Groningen, p. 75.
- "Longyeardalen". Norwegian Polar Institute. மூல முகவரியிலிருந்து 7 April 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 April 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.