லாங் பீச் (கலிபோர்னியா)

லாங் பீச் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். லாசு ஏஞ்சல்சு வட்டத்தில் பசிபிக் கடற்கரையோரமாக இந்த நகரம் அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி மக்கள் தொகை 462257. கலிபோர்னியா மாநிலத்தில் மக்கள் தொகை நெருக்கத்தில் ஏழாவது இடத்தில் உள்ளது. [1]

அமைவிடம்

லாசு ஏஞ்சல்சின் கவுன்டியின் தென்கிழக்கிலும் ஆரஞ்சு கவுன்டியின் எல்லையிலும் லாங் பீச் நகரம் உள்ளது. லாசு ஏஞ்சல்சு நகருக்கும் லாங் பீச் நகருக்கும் இடையில் உள்ள தொலைவு 35 கிலோ மீட்டர் ஆகும். அண்மையில் சூழ்ந்துள்ள சில ஊர்களை ஊள்ளடக்கிய லாங் பீச்சின் பரப்பளவு ஏறத்தாழ 51 சதுரக் கிலோ மைல்கள் ஆகும்.

தட்பவெப்ப நிலை

பெரும்பாலும் மத்தியத் தரைக்கடல் தட்பவெப்ப நிலை நிலவுகிறது. பகல் பொழுது நீண்டும், கோடைக்காலத்தில் இரவில் பனிப்பொழிவும் குளிரும் உள்ளன. தென் கலிபோர்னியாவில் உள்ள பிற இடங்கள் போல இங்கும் குளிர் காலத்தில் மழை பெய்கிறது.

தொழில் நகரம்

லாங் பீச் துறைமுகம் அமெரிக்காவில் பெரியதாகக் கருதப்படுகிறது. துறைமுகத்தில் கன்டயினர்கள் வணிகம், கப்பல் போக்குவரத்து வணிகம், எண்ணெய்க் கிணறுகள் அவற்றைச் சார்ந்த தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. வானூர்திப் பாகங்கள், தானியங்கிகளின் பாகங்கள் ஆகியவற்றின் உற்பத்திகள் நடைபெறுகின்றன. இவையன்றியும் பெட்ரோலிய வேதியல் பொருள்கள் ஆக்கமும், இல்ல அலங்காரப் பொருள்கள் செய்வதும் நடக்கின்றன.

கல்வி நிலையங்கள்

பொதுப் பள்ளிகளும் தனியார்ப் பள்ளிகளும் இங்கு உள்ளன. கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், லாங் பீச் சிட்டி கல்லூரி, டெவ்ரி பல்கலைக்கழகம், பசிபிக் கடற்கரைப் பல்கலைக்கழகச் சட்டப்பள்ளி என்று பல உயர்நிலைக் கல்வி நிலையங்கள் உள்ளன.[2]

போக்குவரத்து ஏந்துகள்

லாங் பீச் நகரில் பேருந்துகள், தொடர்வண்டிகள், தனியார் மகிழுந்துகள் எனப் பல போக்குவரத்து வசதிகள் உள்ளன. லாங் பீச் வானூர்தி நிலையம் உள்ளது. பன்னாட்டுப் பயணங்களுக்கு லாசு ஏஞ்சல்சு பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.

சுற்றுலா இடங்கள்

  • பசிபிக் ஆக்குவாரியம்
  • காட்டலினா எக்சுபிரஸ்
  • லாங் பீச் வாட்டர் பிரண்ட்
  • நேபிள்ஸ் ஐலண்ட்
  • எல் டொராடோ நேச்சர் சென்டர்
  • ரோசிஸ் டாக் பீச்
  • வால்டர் பிரமிட்
  • லாங் பீச் கலை அருங்காட்சியகம்
  • தி மேரி குயீன்

[3]

சான்றாவணம்

      This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.