றிச்சர்ட் பிரான்சன்

றிச்சர்ட் பிரான்சன் (ஆங்கிலம்:Richard Branson பிறப்பு ஜூலை 18, 1950) உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். ஆங்கிலேயரான இவர் வேர்ஜின் குழுமத்தின் தலைவர். இந்த வேர்ஜின் குழுமத்தின் கீழ் 400 நிறுவனங்கள் உள்ளன. இவருக்கு 1999 இல் சேர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது 16 ஆம் வயதில் தனது முதல் தொழிலாக ஸ்டுடண்ட் (Student) எனும் பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார்.[1] ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் மதிப்பீட்டின் படி 2012 ஆம் ஆண்டில் இவரது சொத்தின் மதிப்பு 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் பணக்காரர்கள் வரிசையில் இவர் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.[2]

றிச்சர்ட் பிரான்சன்
பிறப்பு18 சூலை 1950 (age 69)
Blackheath
பணிதொழில் முனைவோர், வானோடி, எழுத்தாளர், investor, television producer, தயாரிப்பாளர்
விருதுகள்Knight Bachelor
இணையத்தளம்https://www.virgin.com/richard-branson
கையெழுத்து
றிச்சர்ட் பிரான்சன்

மேற்கோள்கள்

  1. Hawn, Carleen (1 August 2006). "Branson's Next Big Bet". CNN. http://money.cnn.com/magazines/business2/business2_archive/2006/08/01/8382250/. பார்த்த நாள்: 22 May 2010.
  2. "Richard Branson". Forbes. March 2012. http://www.forbes.com/profile/richard-branson. பார்த்த நாள்: 2 February 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.