ரோஜர் டீக்கின்ஸ் (ஒளிப்பதிவாளர்)
ரோஜர் டீக்கின்ஸ் (ஆங்கிலம்: Roger Alexander Deakins) (மே 24, 1949) ஓர் ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். கூன் பிரதர்ஸ் மற்றும் சாம் மெண்டஸ் ஆகியோருடன் இணைந்து இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஒளிப்பதிவாளர்கள் அமைப்பில் (Society of Cinematographers) உறுப்பினராக உள்ளார். தனது வாழ்நாள் சாதனைக்காக அமெரிக்கன் செஸைட்டி ஆஃப் சினிமேட்டோகிராபர்ஸ் விருதை 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.[1] 10 முறை இவரது பெயர் ஆஸ்கர் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவர் ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை. இவர் இங்கிலாந்தில் பிறந்தவர்.
ரோஜர் டீக்கின்ஸ் | |
---|---|
![]() ரோஜர் டீக்கின்ஸ் | |
பிறப்பு | ரோஜர் அலெக்ஸாண்டர் டீக்கின்ஸ் 24 மே 1949 இங்கிலாந்து |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1984 முதல் |
வாழ்க்கைத் துணை | இஸபெல்லா ஜேம்ஸ் பியூர்ஃபே எலிஸ் |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- "Roger Deakins Will Receive The 2011 American Society of Cinematographers (ASC) Lifetime Achievement Award". wearemoviegeeks.com. பார்த்த நாள் December 22, 2010.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.