ரோகன் போபண்ணா

ரோகன் போபண்ணா (Rohan Bopanna, கன்னடம்: ರೋಹನ್ ಬೋಪಣ್ಣ) (பிறப்பு மார்ச் 4, 1980) இந்திய டென்னிசு விளையாட்டு வீரர் ஆவார். ஒற்றையர் ஆட்டங்களில் உலகளவில் இவரது மிக உயரிய தரவரிசையெண் 2007இல் 213 ஆக இருந்தது. இரட்டையர் ஆட்டங்களில் உலகில் மிக உயரிய தரவெண்ணாக சூலை 22, 2013இல் 3யை எட்டினார். அண்மையில், பெரும்பாலான போட்டிகளில் இரட்டையர் ஆட்டங்களில் மட்டுமே பங்கெடுக்கின்றார். இந்திய டேவிசுக் கோப்பை அணியில் 2002இலிருந்து தொடர்ந்து இடம் பெற்றுள்ளார்.[2] 2010இல், யூ. எசு. ஓப்பனில் ஐசம்-உல்-அக் குரேசியுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் இரண்டாமிடத்தை எட்டினார்.[3]

ரோகன் போபண்ணா
நாடு இந்தியா
வசிப்பிடம்பெங்களூர், இந்தியா
பிறந்த திகதி4 மார்ச்சு 1980 (1980-03-04)
பிறந்த இடம்
உயரம்1.90 m (6 ft 3 in)
நிறை
தொழில்ரீதியாக விளையாடியது2003
விளையாட்டுகள்
வெற்றிப் பணம்US$ 2,896,162[1]
ஒற்றையர்
சாதனை:14–33
பெற்ற பட்டங்கள்:0
அதி கூடிய தரவரிசை:No. 213 (23 சூலை 2007)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்Q2 (2006, 2007, 2008)
பிரெஞ்சு ஓப்பன்Q1 (2006)
விம்பிள்டன்Q2 (2006)
அமெரிக்க ஓப்பன்Q2 (2007)
இரட்டையர்
சாதனைகள்:263–188[1]
பெற்ற பட்டங்கள்:14
அதிகூடிய தரவரிசை:No. 3 (22 சூலை 2013)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்3R (2008, 2011, 2012, 2014)
பிரெஞ்சு ஓப்பன்QF (2011, 2016)
விம்பிள்டன்SF (2013, 2015)
அமெரிக்க ஓப்பன்F (2010)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 1 பெப்ரவரி 2016.

இரட்டையர் ஆட்டக்காரர்களில் தற்போது உலகில் பத்தாவது இடத்தில் உள்ளார்.[4] போபண்ணா தமது 11வது அகவையிலேயே விளையாடத் தொடங்கினார். இரட்டையர் ஆட்டங்களில் தமது வாழ்நாளின் மிக உயரிய தரவரிசையெண்ணை சூலை 22, 2013இல் அடைந்தார்; தொழில்முறை டென்னிசு விளையாட்டளர்களின் சங்கம் இவருக்கு தரவெண் 3 வழங்கியது. இவரும் பாக்கிதானிய விளையாட்டாளர் குரேசியும் 2007 இல் இணைந்து பல வெற்றிகளை ஈட்டினர். இதனால் இவர்களுக்கு இந்தோபாக் எக்சுபிரசு என்ற செல்லப்பெயர் ஏற்பட்டது. 2010 இல் இந்த இணையர் விம்பிள்டன் காலிறுதி, யூ.எசு. ஓப்பனில் இரண்டாமிடம், மற்றும் ஐந்து ஏடிபி கோப்பைகளை வென்றனர். ஜோகன்னசுபெர்கு ஓபனையும் வென்றனர். 2010 ஆம் ஆண்டு டேவிசு கோப்பை போட்டியில் இந்தியா பிரேசிலை வெல்வதற்கு போபண்ணா பெரும் பங்காற்றினார். இதனால் 1988க்குப் பிறகு இந்தியா முதன்முறையாக உலக குழு போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.[5]

மேற்சான்றுகள்

  1. "Rohan Bopanna". ATP World Tour. பார்த்த நாள் 2012-06-21.
  2. "Scorecards - 2010". Davis Cup. பார்த்த நாள் 2011-11-12.
  3. "Year by Year". US Open. பார்த்த நாள் 2011-11-12.
  4. "Emirates ATP Doubles Rankings". 23 March 2014. http://www.atpworldtour.com/Rankings/Doubles.aspx.
  5. "Davis Cup: Somdev, Bopanna lead India to World Group". பார்த்த நாள் 20 September 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.