ரெ. சண்முகம்

ரெ. சண்முகம் (டிசம்பர் 14, 1934 - அக்டோபர் 8, 2010) மலேசியாவின் முன்னணிக் கலைஞரும் கவிஞரும் ஆவார். பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், பாடகர், எழுத்தாளர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர்,என்ற பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கினார். மாடலன், தமிழடியான் என்ற புனைபெயர்களும் இவருக்கு உண்டு. மலேசிய வானொலி அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

1920ல் மலேயாவுக்கு வந்த இவரது தகப்பனார் திருச்சியைச் சேர்த்தவர். தாயார் மலேயாவில் பிறந்தவர். 1934-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி கூலிமில் பிறந்த சண்முகம் தனது தொடக்க கால வாழ்க்கையை இசைத்துறையில் கழித்தார். தமிழ்ப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்ற போதும் யாப்பு இலக்கணப் பிழையின்றி கவிதைகள் படைத்தார். இவர் மலேசிய எழுத்தாளர் ரெ. கார்த்திகேசுவின் மூத்த சகோதரர் ஆவார். ரெ. சண்முகத்திற்கு சந்திரா என்ற மனைவியும் மலர்விழி, தர்மவதி என்று இரு மகள்களும் ரவி என்ற மகனும் உள்ளனர்.

எழுதிய நூல்கள்

  • ரெ.ச.இசைப்பாடல்கள்
  • பிரார்த்தனை (கவிதை)
  • நல்லதே செய்வோம் (கட்டுரை)
  • இந்த மேடையில் சில நாடகங்கள் (சுய சரிதை)
  • ரெ. சண்முகம் கதைகள் (2004)

விருதுகள்

மலேசிய அரசு விருதுகள் உட்படப் பல விருதுகள் இவர் பெற்றுள்ளார். மலேசியத் தமிழ் இசைக்கலையில் இவராற்றிய பணிகளுக்காக ‘செவ்விசைச் சித்தர்’ எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.