ரூபன் (படத்தொகுப்பாளர்)

ரூபன் என்றழைக்கப்படும் லிவிங்ஸ்டன் அந்தோனி ரூபன் (Livingston Antony Ruben, பிறப்பு: நவம்பர் 15, 1986) இந்திய படத்தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைபடத்துறையில் பணியாற்றிவருகிறார்.[1]

ரூபன்
பிறப்புலிவிங்ஸ்டன் அந்தோணி ரூபென்
நவம்பர் 15, 1986 (1986-11-15)
கும்பகோணம், தமிழ் நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்அந்தோணி.எல். ரூபென்
பணிபடத்தொகுப்பாளர்

தொழில்

தனது பட்டப்படிப்பு லயோலா கல்லூரி சென்னையில் முடித்தபின் இயக்குனர் கெளதம் மேனன் அவர்களின் உதவியாளராக சேர்ந்தார். பிரபல படத்தொகுப்பாளர் அந்தோணியுடன் துணை படத்தொகுப்பாளராக இணைந்தார். ரூபென் அவர்கள் அந்தோணியின் மேற்பார்வையில் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா முதலிய திரைப்படங்களில் பணியாற்றினார். திரைப்படங்களின் முன்னோட்டக்காட்சிகள் தயாரிக்கும் போது தோரணை (2009), அவன் இவன் (2011) மற்றும் வெடி (2011) ஆகியவற்றில் பணிபுரியும் போது ​​ருபென் ஒரு திரைபடத் தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.[2]

கண்டேன் 2011ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமான இப்படத்தில் தன் முழு பங்களிப்பை வெளிப்படுத்தினார். எல்ரெட் குமாரின் முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012) படத்தில் முக்கியமாக ஒருமுறை என்ற பாடலை சிறப்பாக ஒளிப்பதிவு செய்தார்.[2] இவரின் ஒளிப்பதிவு பணியின் சிறப்பான நேர்மறை விமர்சனம் ராஜா ராணி (2013) திரைப்படத்திற்கு கிடைத்தது. ஒளிப்பதிவாளர் அந்தோணியின் பெயரும் தன் பெயரும் ஒன்றாக இருப்பதால் தவறுகளை தவிர்க்க தனது பெயரை ரூபென் என வைத்துக்கொண்டார்.[3]

திரைப்பட வரலாறு

தொகுப்பாளராக பணி புரிந்த படங்கள்

ஆண்டுதிரைப்படம்மொழிஇயக்கம்
2011கண்டேன்தமிழ்ஏ.சி.முகில்
2012முப்பொழுதும் உன் கற்பனைகள்தமிழ்எல்டர்டு குமார்
2012எடிகரிகேகன்னடம்டி.சுமனகிட்டூர்
2013சமர்தமிழ்திரு
2013ராஜா ராணிதமிழ்அட்லி
2014நான் சிகப்பு மனிதன்தமிழ்திரு
2014ஜீவாதமிழ்சுசிந்தரன்
2015டார்லிங்தமிழ்சாம் ஆண்டன்
2015இனிமே இப்படிதான்தமிழ்முருகானந்த்
2015திரிஷா இல்லைனா நயன்தாராதமிழ்ஆதிக் ரவிச்சந்திரன்
2015வேதாளம்தமிழ்சிவா
2016வில் அம்புதமிழ்ரமேஷ் சுப்ரமணியன்
2016தெறிதமிழ்அட்லி
2016எனக்கு இன்னொரு பேர் இருக்குதமிழ்சாம் ஆண்டன்
2016வீர சிவாஜிதமிழ்கணேஷ் விநாயக்
2016ரெமோதமிழ்பாக்கியராஜ் கண்ணன்
2016ஜக்குவார்தெலுங்கு,கன்னடம்மகாதேவ்
2017விவேகம்தமிழ்சிவா
2017அன்பானவன் அசராதவன் அடங்காதவன்தமிழ்ஆதிக் ரவிச்சந்திரன்
2017மெர்சல்தமிழ்அட்லி
2017ஸ்கெட்ச்தமிழ்விஜய் சந்தர்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.