ரிஷி குமார் சுக்லா

ரிஷி குமார் சுக்லா (Rishi Kumar Shukla) (பிறப்பு 23 ஆகத்து 1960) ஒரு இந்திய காவல்துறை அலுவலரும் நடுவண் புலனாய்வுச் செயலக இயக்குநரும் ஆவார். இவர் இரண்டாண்டு காலப் பதவியின் பொறுப்பினை 2019 பெப்ரவரி 2 ஆம் நாள் பதவியேற்றுக் கொண்டார்.[1][2] இவர் இந்தியாவின் குவாலியரில் பிறந்தவர் ஆவார்.

ரிஷி குமார் சுக்லா
நடுவண் புலனாய்வுச் செயலக இயக்குநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 பெப்ரவரி 2019
நியமித்தவர் நரேந்திர மோடி
முன்னவர் எம். நாகேஷ்வர ராவ்
மத்தியப்பிரதேசத்தின் காவல் துறை தலைமை இயக்குநர்
பதவியில்
1 சூலை 2016  1 பெப்ரவரி 2019
நியமித்தவர் நரேந்திர மோடி
தனிநபர் தகவல்
பிறப்பு 23 ஆகத்து 1960
(வயது 58)

கல்வி

சுக்லா தத்துவவியலில் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[3]

தொழில் வாழ்க்கை

சுக்லா 1983 ஆம் ஆண்டில் இந்தியக் காவல் பணி பயிற்சி முடித்த அலுவலர் ஆவார். சர்தார் வல்லபபாய் படேல் தேசிய காவல் கழகத்தில் பயிற்சி முடித்த பிறகு மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சிவ்புரி, டாமோ, ராய்ப்பூர் மற்றும் மண்டோசோர் மாவட்டங்களில் பணிபுரிந்தார். இவர் அமெரிக்காவில் நெருக்கடி கையாள்கை மற்றும் ஒப்பந்தப் பேச்சு ஆகியவை தொடர்பாக அமெரிக்காவில் பயிற்சி பெற்றார். புலனாய்வுக் கழகத்தில் உணர்வுரீதியான பல வழக்குகளைக் கையாள்வதில் தொடர்பு கொண்டார்.[3]

நடுவண் புலனாய்வுக் கழகத்தில் இயக்குநராக பணி நியமனம் ஆகும் முன்பாக, மத்தியப்பிரதேசத்தின் காவல்துறை தலைமை இயக்குநராகவும், போபாலில் உள்ள மத்தியப்பிரதேசத்தின் காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார்.[1][4]

மேற்கோள்கள்

  1. "IPS officer Rishi Kumar Shukla appointed new CBI director" (2 February 2019).
  2. "Rishi Kumar Shukla, MP cadre IPS, appointed as new CBI chief" (en-IN) (2 February 2019).
  3. "Who is Rishi Kumar Shukla? All you need to know about the newly appointed CBI Director".
  4. "All You Need To Know About New CBI Director Rishi Kumar Shukla: 5 Points".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.