ரிச்சர்ட் ஸ்டால்மன்

ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Stallman, பி. மார்ச் 16, 1953) என்பவர் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), க்னூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார்.

ரிச்சர்ட் ஸ்டால்மன்
பிறப்பு16 மார்ச் 1953 (age 66)
மன்ஹாட்டன்
படித்த இடங்கள்
  • Harvard School of Engineering and Applied Sciences
பணிநிரலாளர், கணினி விஞ்ஞானி, வலைப்பதிவர், புத்தாக்குனர்
விருதுகள்ACM Software System Award, Honorary doctoral degree of the Pierre and Marie Curie University
இணையத்தளம்https://stallman.org/
கையெழுத்து
ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன்

இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU வழுத்திருத்தி போன்றவை கருதப்படுகின்றன.

க்னூ பொதுமக்கள் உரிமத்தின் ஆக்கியோரும் இவரே.

தொண்ணூறுகளிலிருந்து தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளிலும், கட்டற்ற மென்பொருள் தத்துவ ஆக்கம், பரவலாக்கம் , ஆலோசனை வழங்கல் போன்ற விடயங்களிலும் தன்னுடைய பெரும்பகுதி நேரத்தினைச் செலவிட்டு வருகிறார். இவர் உரையாற்றுவதற்காக வழங்கப்படும் பணமே இவரது சொந்த வருமானமாக இருக்கிறது.

வாழ்க்கை வரலாறு

ஸ்டால்மன் நியூயோர்க் நகரில் பிறந்தார். முதன்முதலாகத் தனது முதுநிலை உயர்பாடசாலையில் கற்கும்போது 1969-ம் ஆண்டளவில் கணினி ஒன்றினைப் பயன்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றார். உயர்பாடசாலை பட்டமளிப்புக்குப் பின் ஒரு கோடைகாலத்தில் தனது முதல் நிரலாக்கமான PL/I கணி மொழிக்கான Preprocessor ஒன்றினை IBM 360 கணினியில் எழுதி முடித்தார்.அதேவேளை, ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின்(Rockefeller University) உயிரியல் ஆய்வுக்கூடத்தில் தன்னார்வ ஆய்வுகூட உதவியாளராகப் பணியாற்றினார்.ஜூன் 1971 அளவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவனாக இருந்த சமயம் MIT செயற்கை அறிவு ஆய்வுக்கூடத்தில் நிரலாளரானார். ஃப்ரி ஆஸ் இன் ஃப்ரிடம்(Free as in Freedom) எனும் ஆங்கில நூல் இவரின் வாழ்க்கை வரலாறை அறிய உதவும் முக்கிய நூலாகும்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.