ரிச்சர்ட் ஆல்புரூக்

ரிச்சர்ட் சார்லசு ஆல்பர்ட் ஆல்புரூக் (Richard Charles Albert Holbrooke) (ஏப்ரல் 24, 1941  திசம்பர் 13, 2010) அமெரிக்காவின் ஓர் தலைசிறந்த வெளியுறவு அதிகாரியும் இதழியல் ஆசிரியரும் நூலாசிரியரும் விரிவுரையாளரும் அமைதிப்படை அதிகாரியும் முதலீட்டாளரும் ஆவார். உலகின் இருவேறு பகுதிகளுக்கு வெளியுறவுத் துணைச்செயலராகப் பணியாற்றிய ஒரே அமெரிக்க அதிகாரி என்ற பெருமை இவருக்குண்டு. 1977ஆம் ஆண்டு முதல் 1981 வரை கிழக்காசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான துணைச்செயலராகவும் 1994ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஐரோப்பிய மற்றும் கனடிய பகுதிகளுக்கான துணைச்செயலராகவும் பணியாற்றினார். தற்போதைய பராக் ஒபாமா அரசில் ஆப்கானித்தான்,பாக்கித்தான் நாடுகளுக்கானச் சிறப்புத் தூதராகப் பணியாற்றினார்.

ரிச்சர்ட் ஆல்புரூக்
ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானுக்கான சிறப்பு அமெரிக்கத் தூதர்
பதவியில்
சனவரி 22, 2009  திசம்பர் 13, 2010
குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா
முன்னவர் (பணியிடம் புதியது)
பின்வந்தவர் பிராங்க் ரக்கியிரோ (இடைப்பட்டநிலை; ஆல்புரூக்கின் துணை அதிகாரி)
22வது ஐ.நாவிற்கான அமெரிக்கத் தூதர்
பதவியில்
ஆகத்து 25, 1999  சனவரி 20, 2001
குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன்
முன்னவர் பில் ரிச்சர்ட்சன்
பின்வந்தவர் ஜான் டி. நீக்ரோபோன்ட்
செருமனிக்கான அமெரிக்கத் தூதர்
பதவியில்
1993–1994
குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன்
முன்னவர் ராபர்ட் எம். கிம்மிட்
பின்வந்தவர் சார்லசு ஈ. ரெட்மான்
ஐரோப்பிய கனடிய விவகாரங்களுக்கான வெளியுறவு துணைச்செயலர்
பதவியில்
ஞெப்டம்பர் 13, 1994  பிப்ரவரி 21, 1996
குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன்
முன்னவர் இசுடீபன் ஏ. ஆக்சுமன்
பின்வந்தவர் ஜான் சி. கோர்ன்ப்ளம்
15வது கிழக்காசிய மற்றும் பசிபிக் விவகார வெளியுறவுத் துணைச்செயலர்
பதவியில்
மார்ச்சு 31, 1977  சனவரி 13, 1981
குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர்
முன்னவர் ஆர்தர் டபுள்யூ. அம்மல் ஜூனியர்
பின்வந்தவர் ஜான் கச். ஆல்ட்ரிட்ஜ்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 24, 1941(1941-04-24)
நியூயார்க் நகரம், நியூயார்க்
இறப்பு திசம்பர் 13, 2010(2010-12-13) (அகவை 69)
வாசிங்டன், டி.சி.
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லாரைன் சல்லிவன் (தி. 1964)
ப்ளைத் பாப்யக் (தி. 1977)
கத்தி மார்டன் (தி. 1995-2010) (மறைவுவரை)
படித்த கல்வி நிறுவனங்கள் ப்ரௌன் பல்கலைக்கழகம்
பிரின்சுடன் பல்கலைக்கழகம்

1993ஆம் ஆண்டு முதல் 1994வரை செருமனிக்கான அமெரிக்கத்தூதராகப் பணியாற்றினார். இதற்கு முன்னரே வெளியுறவுத்துறையிலும் இதழியல் துறையிலும் பிரபலமடைந்திருந்த போதிலும் இந்தப் பணியில் இருந்தபோது இவரும் சுவீடனின் பிரதமர் கார்ல் பில்ட்டும் இணைந்து 1995ஆம் ஆண்டு போசுனியாவின் உள்நாட்டுப் போரில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்படுத்திய டேடன் அமைதி உடன்பாட்டை அடுத்து உலகளவில் கவனிக்கப்பட்டார். இக்காலத்தில் இவர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்படுவார் என்று பெரிதும் ஊடகங்களில் எதிர்பார்க்கப்பட்டார்.1999ஆம் ஆண்டு முதல் 2001வரை ஐ.நா அவைக்கான அமெரிக்கத்தூதராக பணியாற்றினார்.

2008ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இலரி கிளின்டனின் முகாமில் இணைந்து வெளியுறவு ஆலோசகராக இருந்தார். இலரி வெற்றி பெற்றால் வெளியுறவுத்துறைச் செயலர் பதவிக்கு இவரே வருவார் என எண்ணப்பட்டது.

சனவரி 22, 2009 அன்று ஆல்புரூக் பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தானிற்கான சிறப்பு அமெரிக்கத்தூதராக நியமிக்கப்பட்டார். கிழிபட்ட தமனி சிக்கலால் திசம்பர் 13, 2010 அன்று இறக்கும்வரை இப்பணியில் இருந்தார்.

எழுத்துக்கள்

  • 1991: Clifford, Clark, with Richard Holbrooke. – Counsel to the President: A Memoir. – New York, New York: Random House. – ISBN 9780394569956.
  • 1998: To End a War. – New York, New York: Random House. – ISBN 9780375500572.

மேற்கோள்கள்

    வெளியிணைப்புகள்

    வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.