ராபின்சன் குரூசோ

ராபின்சன் க்ரூஸோ (ROBINSON CRUSOE [a] / ˌrɒbɪnsən kruːsoʊ /) டானியல் டீஃபோவின்  ஒரு நாவலாகும், இது முதலில் ஏப்ரல் 25, 1719 அன்று வெளியிடப்பட்டது. முதல் பதிப்பானது, கதாநாயகன் ராபின்ஸன் க்ரூஸோவை அதன் எழுத்தாளர் என்று பதிப்பிட்டது, இதனால் பல வாசகர்கள் அவர் உண்மையான நபராகவும், இப்புத்தகம் உண்மையான சம்பவங்களின் பயணப் பயணம் என எண்ணினர். [2] கடிதம், ஒப்புதல், மற்றும் நீதிபோதனை வடிவங்களில், இந்தப் புத்தகம் தலைப்பு பாத்திரத்தின் சுயசரிதையாகும் (அவரின் பிறந்த பெயர் ராபின்சன் கிரெட்ஸன்னர்) - ஒரு கப்பல் விபத்தில் சிக்கியவர்.

கலை பிரதிநிதித்துவம்

டிரினிடாட் அருகே ஒரு தொலைதூர வெப்பமண்டல பாலைவனத் தீவில் இருபத்தி எட்டு ஆண்டுகள் செலவழிக்கிறார். இறுதியில் மீட்கப்படுவதற்கு முன் இவர் தன்னின உண்ணிகள், கைதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டார். இக்கதையானது, சிலி பகுதியின் "மாஸ் அ டைரெரா" என்றழைக்கப்படும் பசிபிக் தீவில் கப்பல் விபத்தில் சிக்கி நான்கு ஆண்டுகள் உயிர் பிழைத்த ஸ்காட்டிஷ் நாட்டவரான அலெக்ஸாண்டர் சேல்கிர்க் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக கருதப்படுகிறது, 1966 ஆம் ஆண்டில் இந்த தீவானது ‘ராபின்சன் க்ரூஸோ தீவு’ என மறுபெயரிடப்பட்டது [ 3] எளிய கதைநடையைக் கொண்டிருந்த போதிலும், இலக்கிய வரலாற்றில் யதார்த்தமான கற்பனைக் கதைகளின் தோற்றத்திற்கு வழிவகுத்ததற்கான பெருமையைப் பெற்றது. இது ‘முதல் ஆங்கில நாவல்’ என்ற சிறப்பிற்கு ஒரு போட்டியாளராக கருதப்படுகிறது. [4] 1719 ஆம் ஆண்டின் முடிவில், இந்தப் புத்தகம் ஏற்கனவே நான்கு பதிப்புகள் மூலம், வரலாற்றில் மிகவும் பரவலாக வெளியிடப்பட்ட புத்தகங்களில் ஒன்றானது. திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ என்று பல பரிமாணங்களில் வெளிவந்து பிரபலமானது.

குறிப்புகள்

  • Boz (Charles Dickens) (1853). Memoirs of Joseph Grimaldi. London: G. Routledge & Co. 
  • Findlater, Richard (1955). Grimaldi King of Clowns. London: Magibbon & Kee. OCLC 558202542. 
  • McConnell Stott, Andrew (2009). The Pantomime Life of Joseph Grimaldi. Edinburgh: Canongate Books Ltd. ISBN 978-1-84767-761-7. 
  • Ross, Angus, ed. (1965), Robinson Crusoe. Penguin.
  • Secord, Arthur Wellesley (1963). Studies in the narrative method of Defoe. New York: Russell & Russell. (First published in 1924.)
  • Shinagel, Michael, ed. (1994). Robinson Crusoe. Norton Critical Edition. ISBN 0-393-96452-3. Includes textual annotations, contemporary and modern criticisms, bibliography. = BY KOGUL, MARIAPAN.
  • Severin, Tim (2002). In search of Robinson Crusoe, New York: Basic Books. ISBN 0-465-07698-X

Hymer, Stephen (1971) Robinson Crusoe and the Secret of Primitive Accumulation Monthly Review. https://monthlyreview.org/2011/09/01/robinson-crusoe-and-the-secret-of-primitive-accumulation/

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.