ராபர்ட் பாட்டின்சன்

ராபர்ட் பாட்டின்சன் (பிறப்பு 13 மே 1986) இவர் ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட விளம்பர நடிகர், இசைக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.

ராபர்ட் பாட்டின்சன்
Robert Pattinson

பிறப்பு 13 மே 1986 (1986-05-13)
இலண்டன், இங்கிலாந்து
தொழில் நடிகர்
விளம்பர நடிகர்
இசைக் கலைஞர்
நடிப்புக் காலம் 2004 இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கை

ராபர்ட் பாட்டின்சன் 13 மே 1986ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவரது தாயார் கிளேர் ஒரு மாடலிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார், தந்தையான ரிச்சர்ட் அமெரிக்காவிலிருந்து வின்டேஜ் கார்களை இறக்குமதி செய்கிறார்.

தொழில் வாழ்க்கை

விளம்பர நடிகர்

பாட்டின்சன் தனக்கு பனிரெண்டு வயதாகும்போது மாடலிங் செய்யத் தொடங்கினார், ஆனால் இது நான்கு வருடங்களுக்குள்ளாகவே குறைந்துபோனது. ஒரு ஆண்மகன் தோற்றமுள்ள மாடலாக தான் பணியாற்றத் தவறிவிட்டதாக அவர் தன்னை குற்றம்சாட்டிக்கொண்டார்.

2008 ஆம் ஆண்டில் பாட்டின்சன் இவ்வாறு விளக்கமளித்தார் "நான் முதன்முறையாக தொடங்கியபோது நான் அதிக உயரமாகவும் பெண்ணைப்போன்றும் தோன்றினேன், அதனால் எனக்கு நிறைய வேலைகள் கிடைத்தன, ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஆண் போன்றும் பெண் போன்றும் தோன்றுவது சாதாரணமாக இருந்தது. பின்னர்தான் நான் ஒரு ஆணைப் போல் தோன்ற ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன், இதனால் எனக்கு வேலையே கிடைக்கவில்லை. எனக்கு மிக வெற்றிகரமான மாடலிங் வாழ்க்கை அமையவில்லை என்றார்.

நடிப்பு

இவர் 2004ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேர் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஹாரி பாட்டர் அண்டு த கோப்லட் ஆஃப் ஃபயர், ட்விலைட், தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

சொந்த வாழ்க்கை

கிளாமர் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் அவர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஆண் என்று பீப்பிள் பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டது.

திரைப்படங்கள்

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

பார்வைக் குறிப்புகள்

    வெளிப்புற இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.