ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார் ஒரு தமிழக எழுத்தாளர். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும் 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.[1][2] 1980களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர். தமிழின் காகிதக்கூழ் புனைவின் ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ல் கல்கண்டு இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார். இவரது முதல் புதினம் “வாடகைக்கு ஒரு உயிர்” 1980ல் வெளியானது. பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் சோடிப் பாத்திரங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

படைப்புகள்

(பட்டியல் முழுமையானதல்ல)

  1. அபாய நோயாளி
  2. குறிஞ்சிப் பூக்கள்
  3. மீண்டும் மீண்டும்
  4. அகல்யா
  5. அஞ்சாதே அஞ்சு
  6. அது ஒரு நிலாக்காலம்
  7. அந்த சந்திரனே சாட்சி
  8. அபயம் அபாயம் அருணா
  9. அமரர் பதவி அக்டோபர்
  10. அவசரம் விவேக் அவசரம்
  11. அவன் அவள் அவர்கள்
  12. இது தான் இந்தியா
  13. இந்த ரோஜாவுக்கு நிறமில்லை
  14. இந்தியன் என்பது என் பேறு
  15. இந்தியனாய் இரு
  16. இரண்டாவது உயிர்
  1. இரவு நேர வானவில்
  2. இருட்டில் ஒரு வானம்பாடி
  3. இருள் பொருள் இன்பம்
  4. இனி மின்மினி
  5. இனிமேல் சாருமதி
  6. உயிர்த் திருடர்கள்
  7. உன்னால் முடியும் விவேக்
  8. உன்னுடைய கண்களுக்கு மட்டும்
  9. உன்னை விட்டால் யாரும் இல்லை
  10. ஊசி முனையில் ஒரு உயிர்
  11. ஊதா நிறத் தீவு
  12. ஊமத்தம் பூக்கள்
  13. எந்த நேரத்திலும்
  14. என் இனிய விரோதியே
  15. என் வானம் மிக அருகில்
  16. ஏழாவது டெஸ்ட் டியூப்
  17. ஐந்து கிராம் நிலவு
  18. ஒரு தப்பு தாளம் ஒரு சரியான ராகம்
  19. ஒரு தீப்பந்தம் தீபமாகிறது
  20. ஒரு துளி கடல்
  21. ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்
  22. ஒரு நாள் ஒரு கனவு
  23. கடைசி எதிரி
  24. கண்ணிமைக்க நேரமில்லை
  25. கண்ணுக்குள் எத்தனை கள்ளமடிகண்ணுக்குள்எத்தனை கள்ளமடி
  1. கற்றது டைமண்ட் களவு
  2. கறுப்பு மல்லிகை
  3. காகிதப்பூ தேன்
  4. காற்று உறங்கும் நேரம்
  5. குற்றம் குற்றமே
  6. கூடவே ஒரு நிழல்
  7. கொலை வள்ளல்
  8. கோகிலாவும் ஒரு கோடைகாலமும்
  9. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொல்
  1. சாம்ராஜ்ஜியம்
  2. சிகப்பு ரோஜக்கள்
  3. சித்தர்களா பித்தர்களா
  4. சிம்லா ரம்யா
  5. சிவப்பாய் ஒரு பௌர்னமி
  6. சொர்க்கம் என் கையில்
  7. டிசம்பர் இரவுகள்
  8. டைனமைட்
  9. தங்க சொர்க்கம்
  10. தடுத்தால் கூட தருவேன்
  11. தப்பு தப்பாய் ஒரு தப்பு
  12. தலை நகரம்
  13. திக் திக் திலகா
  14. திகில் ரோஜா
  15. திலகா
  16. தீ தீபா தீபாவளி
  17. தீப்பிடித்த தென்றல்
  18. தீமையைச் சுடு
  19. தூங்காத கண் ஒன்று
  20. தென்றல் வரும் ஜன்னல்
  21. நகராத நிழல்
  22. நாளைய தேசம்
  23. நான் நளினா நள்ளிரவு
  24. நில் கவனி கொல்
  25. நிழல்கள்
  26. நீ இன்றி நான் ஏது?
  27. நீல நிற நிழல்
  28. நீலம் என்பது நிறமல்ல
  29. நீலம் என்பது நிறமல்ல
  30. பம்பாய்க்கு பத்தாவது மைலில்
  31. பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்
  32. பாதி ராஜ்ஜியம்
  33. பாஸ்பரஸ் பூக்கள்
  34. புத்தம் புது பூமி வேண்டும்
  35. பூவில் ஒரு சூறாவளி
  36. பெண்ணால் முடியும்
  37. போக போகத் தெரியும்
  38. மஞ்சள் டயரி
  39. மற்றவை நள்ளிரவுக்கு
  40. மனசெல்லாம் மாயா
  41. மாண்டவன் கட்டளை
  42. முதல் நிமிஷம்
  43. முள் இல்லாத கடிகாரம்
  44. முள் கிரீடம்
  45. முள் நிலவு
  46. மெழுகுவர்த்திகள்
  47. மென்மையாய் ஒரு வன்முறை
  48. மேனகாவின் மே மாதம்
  49. யமுனாவின் மணி நேரம்
  50. ராணிக்கு செக்
  51. ராஜாளி
  52. ரோசாப் பூவு லேசா சாவு
  53. வசந்த காலம்
  54. வணக்கத்துக்குறிய குற்றம்
  55. வளைவுகள் அபாயம்
  56. வாய்மையே கொல்லும்
  57. விட்டு விடு விவேக்
  58. விலகு விபரீதம்
  59. வினயா ஒரு விடுகதை
  60. வெண்ணிலவே விடை சொல்லு
  61. வெல்வட் குற்றம்
  62. வென்று வா விவேக்
  63. வேங்கை வெளியே வருது
  64. வைகறை நிழல்கள்
  65. ஜன்னல் நிலா
  66. ஹாலோ டெட் மார்னிங்
  67. அறுபத்தைந்தாவது கலை
  1. ஒன்பதாவது திசை பத்தாவது கிரகம்


மேற்கோள்கள்

  1. Chakravarthy, Pritham (2008). The Blaft Anthology of Tamil Pulp Fiction. Chennai, India: Blaft Publications. பக். 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-906056-0-1.
  2. Samanth Subramaniam (2008-09-07). "Meet Rajesh Kumar, Author of 1500 Novels". பார்த்த நாள் 2008-09-11.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.