ரஹ்மான்கான்

க. ரஹ்மான்கான் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரவையில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும், 1989 இல் பூங்காநகர் தொகுதியிலும், 1996 இல் இராமநாதபுரம் தொகுதியிலும்[1][2][3][4] வெற்றி பெற்று, திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை கழக செய்தி தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். தேனி மாவட்டம், கம்பம் இவரின் சொந்த ஊராகும்.

ஆதாரம்

  1. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.