ரவுல் பிக்டே

ரவுல்-பியேர் பிக்டே (Raoul-Pierre Pictet, 4 ஏப்ரல் 1846 27 சூலை 1929) என்பவர் சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆவார். இவரே முதன் முறையாக நைதரசனை வெற்றிகரமாகத் திரவமாக்கியவர்.

ராவுல்-பியேர் பிக்டே
Raoul-Pierre Pictet
பிறப்புஏப்ரல் 4, 1846(1846-04-04)
ஜெனீவா
இறப்பு27 சூலை 1929(1929-07-27) (அகவை 83)
பாரிஸ்
தேசியம்சுவிட்சர்லாந்து
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஜெனீவா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதிரவ நைதரன்
விருதுகள்டேவி விருது (1878)
கையொப்பம்

வாழ்க்கைச் சுருக்கம்

ஜெனீவாவில் பிறந்த பிக்டே ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுதலிலும், வளிமங்களைத் திரவமாக்குவதிலும், திண்மமாக்குவதிலும் இருந்தன.[1]

1877 டிசம்பர் 22 இல், பாரிசில் உள்ள அறிவியல் கழகத்திற்கு ஜெனீவாவில் இருந்து பிக்டே அனுப்பியிருந்த ஒரு தந்தியில் பின்வருமாறு குறிக்கப்பட்டிருந்தது: சல்பூரசு மற்றும் கார்போனிக் காடிகளைப் பயன்படுத்தி 320 வளிமண்டல அழுத்தத்திலும், 140 பாகை குளிரிலும் இன்று ஆக்சிசன் திரவமாக்கப்பட்டது. இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட அதே காலகட்டத்தில் பிரான்சைச் சேர்ந்த லூயி பால் காயில்டேட் என்பவர் முற்றிலும் வேறான முறையொன்றில் ஆக்சிசனைத் திரவமாக்கியிருந்தார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.