ரமோன் மக்சேசே

ரமோன் டெல் பியேரோ மக்சேசே (Ramón del Fierro Magsaysay Sr., ஆகத்து 31, 1907 – மார்ச் 17, 1957) பிலிப்பீன்சு அரசியல்வாதி ஆவார். இவர் பிலிப்பீன்சின் ஏழாவது அரசுத்தலைவராக 1953 முதல் 1957 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். 1957 மார்ச் 17 இல் இவர் வானூர்தி விபத்தொன்றில் இறந்தார்.[3] தானுந்து இயந்தியக் கைவினைஞராகப் பணியாற்றிய மக்சேசே பசிபிக் போரில் கெரில்லாத் தலைவராக சிரப்பாகப் பணியாற்றியதை அடுத்து சம்பேலஸ் இராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் லிபரல் கட்சியின் சம்பேலசு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசுத்தலைவர் எல்பீடியோ கிரீனோவின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தேசியவாதக் கட்சியின் அரசுத்தலைவராக 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

ரமோன் பக்சேசே
Ramón Magsaysay Sr.
பிலிப்பீன்சின் 7-வது அரசுத்தலைவர்
பதவியில்
திசம்பர் 30, 1953  மார்ச் 17, 1957
துணை குடியரசுத் தலைவர் கார்லோசு கார்சியா
முன்னவர் எல்பீடியோ கிரீனோ
பின்வந்தவர் கார்லோசு கார்சியா
தேசிய பாதுகாப்பு செயலாளர்
பதவியில்
சனவரி 1, 1954  மே 14, 1954
குடியரசுத் தலைவர் இவரே
முன்னவர் ஆசுக்கார் காஸ்டெல்லோ
பின்வந்தவர் சொட்டேரோ கபாகக்
பதவியில்
செப்டம்பர் 1, 1950  பெப்ரவரி 28, 1953
குடியரசுத் தலைவர் எல்பீடியோ கிரீனோ
முன்னவர் ருப்பெர்டோ காங்கிலியன்
பின்வந்தவர் ஆசுக்கார் காசுடெல்லோ
சம்பேலஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 28, 1946  செப்டம்பர் 1, 1950
முன்னவர் வலெண்டின் அபாப்லி
பின்வந்தவர் என்றிக் கோர்ப்பசு
தனிநபர் தகவல்
பிறப்பு ரமோன் டெல் பியெரோ மக்சேசே
ஆகத்து 31, 1907(1907-08-31)
சம்பேலஸ்
இறப்பு மார்ச்சு 17, 1957(1957-03-17) (அகவை 49)
பாலம்பான், பிலிப்பீன்சு
இறப்பிற்கான
காரணம்
வானூர்தி விபத்து
அடக்க இடம் மணிலா
அரசியல் கட்சி தேசியக் கட்சி (1953–1957)
லிபரல் கட்சி[1][2] (1946–1953)
வாழ்க்கை துணைவர்(கள்) லசு மக்சேசே (1933-1957, இறப்பு)
பிள்ளைகள் டெரெசீட்டா,
மிலாகுரொசு
ரமோன்
படித்த கல்வி நிறுவனங்கள் ஒசே ரிசால் பல்கலைக்கழகம்
தொழில் பொறியாளர், இராணுவ வீரர்
சமயம் கத்தோலிக்கம்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  பிலிப்பீன்சு
கிளை பிலிப்பீன்சு இராணுவம்
பணி ஆண்டுகள் 1942–1945
தர வரிசை கப்டன்
படையணி 31-வது காலாள் பிரிவு

மேற்கோள்கள்

  1. "Ramon Magsaysay." Microsoft Student 2009 [DVD]. Redmond, WA: Microsoft Corporation, 2008.
  2. Molina, Antonio. The Philippines: Through the centuries. Manila: University of Sto. Tomas Cooperative, 1961. Print.
  3. Associated Press (1957-03-18). "Magsaysay Dead With 24 In Plane; Garcia Successor (pay site)" (PDF). பார்த்த நாள் 2008-03-21.
  4. Gleeck, Jr., Lewis E. (1993). The Third Philippine Republic: 1946–1972. Quezon City: New Day Publishers. பக். 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:971-10-0473-9.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.