ரங்கூன் (2017 திரைப்படம்)

ரங்கூன் (Rangoon)என்பது 2017 இல் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தயாரித்தார்.கௌதம் கார்த்திக் (நடிகர்), சானா மக்புல் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இதே பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1]

ரங்கூன்
இயக்கம்ராஜ்குமார் பெரியசாமி
தயாரிப்புஏ. ஆர். முருகதாஸ்
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
கதைராஜ்குமார் பெரியசாமி
இசைபாடல்கள்:
விக்ரம் ஆர்ஹச்
விசால் சந்திரசேகர்
பின்னிசை:
விஷால் சந்திரசேகர்
நடிப்புகௌதம் கார்த்திக் (நடிகர்)
சானா மக்புல்
ஒளிப்பதிவுஅனிஷா தரூண் குமார்
படத்தொகுப்புபிரசண்ணா ஜி. கே
விஜய் வெங்கடராமன்
கலையகம்முருகதாஸ் தயாரிப்பு
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடு9 சூன் 2017 (2017-06-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

சிறு வயதில் தொலைத்த வாழ்க்கையை வாழ வெங்கட்(கௌதம் கார்த்திக் (நடிகர்))டின் குடும்பம் ரங்கூனிலிருந்து சென்னை வருகிறது. தந்தை இறந்த பின் வெங்கட் தனது தாயார்(ஸ்ரீபிரியா) மற்றும் அவனது சகோதரி(உபாசனா) வை கவனித்டு வருகிறார். நண்பனான குமாருடன் (சித்திக்) சேர்ந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தும் குண்சீலனுடன் பணிபுரிகின்றனர். வெங்கட் சீக்கிரமாகவே குணசீலனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகின்றான். மேலும் நடாஷாவுடன் காதலில் விழுகிறான் வெங்கட் இதற்கிடையில் அதிகாரி சயத் இந்தக் கடத்தலை தடுத்து குணசீலனையும் அவனது கூட்டத்தையும் கைது செய்ய முயல்கிறார். குணசீலன் தான் கடைசியாக ஒரு பெரிய கடத்தலை செய்ய எண்ணி அதன் பொறுப்பை வெங்கட்டிடம் ஒப்படைக்கிறான். இதற்கிடையில் அந்தத் தங்கம் வெங்கட்டிடமிருந்து பறிக்கப்படுகிறது. தங்கத்தை பறித்தவர் யார்? தங்கம் மீட்கப்பட்டதா? குணசீலனும் அவனது ஆட்களும் கைது செய்யப்பட்டனரா? என்பதும் மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

கௌதம் கார்த்திக் -வெங்கட்
சானா மக்புல் - நடாசா
டேனியல் ஆன்னி போப் - சசி
சித்திக் (நடிகர்)|சித்திக் -குணசீலன்
ஆனந்த் (நடிகர்)|ஆனந்த]] -சயத் நியாசுதின்
ஸ்ரீகுமார்]] -கேசவன்

தயாரிப்பு

2004 இல் ஏ. ஆர். முருகதாஸ் தன்னுடைய உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி என்பவரைக் கொண்டு முதலில் ரங்கூன் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அதே போல ஜி. வி. பிரகாஷ் குமார்க்கு பதிலாக அறிமுக இசையமையார் விக்ரம் இப்படத்தின் உள்ளே வந்தார்.[2] அனிஷ் தருண் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.[3][4] இப்படத்தின் படபிடிப்பு மியான்மர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டது.[5]

ஒலித்தொகுப்பு

5 பாடல்கள் கொண்ட இப்படத்தின் இசை விஷால் சந்திரசேகர்.

Rangoon
Soundtrack by
வெளியீடு2017
ஒலிப்பதிவு2017
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்15:08
மொழிTamil
இசைத் தயாரிப்பாளர்Vishal Chandrasekhar
விஷால் சந்திரசேகர் chronology
7 நாட்கள்
(2017)
Rangoon
(2017)
Kathalo Rajakumari
(2017)
எண் தலைப்புபாடியோர் நீளம்
1. "யாத்ரீகா"  நவீன் ஐய்யர் 4:08
2. "என்னை மறக்கிறேனே"  கவிதா தாமஸ் 2:53
3. "நீ இல்லா ஆகாயம்"  யாஸின் நசிர் 3:59
4. "ஏ ஜஜ்ஜபோர்"  கிராவன் 2:38
5. "தொட்டில் மடியில்"  சின்மயி 1:30
மொத்த நீளம்:
15:08

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.