ரக்பி (நகரம்)

இரக்பி (Rugby) இங்கிலாந்தின் வார்விக்சையரில் உள்ளதோர் சந்தைப் பட்டினம் ஆகும். ஏவான் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. நகரத்தின் மக்கட்தொகை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70,628 ஆகும்.[1]) இது வார்விக்சையர் கௌன்ட்டியில் இரண்டாவது மக்கட்தொகை மிகுந்த நகரமாகும். இதை அடக்கியுள்ள இரக்பி பரோவின் மக்கட்தொகை 91,600 (2005 மதிப்பீடு).

இரக்பி

தேவாலயத் தெருவிலிருந்து மேற்கில் காண்கையில் இரக்பி சந்தையிடம்
இரக்பி

 இரக்பி அமைவிடம் the United Kingdom
மக்கட்தொகை 70,628 (ஐக்கிய இராச்சிய கணக்கெடுப்பு 2001)
OS grid reference SP5075
District இரக்பி
Shire county வார்விக்சையர்
Region
நாடு இங்கிலாந்து
இறையாண்மையுள்ள நாடு ஐக்கிய இராச்சியம்
அஞ்சல் நகரம் RUGBY
அஞ்சல் மாவட்டம் CV21, CV22, CV23
தொலைபேசிக் குறியீடு 01788
காவல்துறை
தீயணைப்பு  
Ambulance  
ஐரோப்பிய பாராளுமன்றம்
ஐக்கிய இராச்சிய பாராளுமன்றம் இரக்பி
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம்

கவன்ட்ரியிலிருந்து கிழக்கே இரக்பி 13 மைல்கள் (21 கிமீ) தொலைவில் வார்விக்சையரின் கிழக்கு மூலையில் உள்ளது. நார்த்தாம்ப்டன்சையர் மற்றும் லீசெஸ்டர்சையர் கவுன்டிகளின் எல்லைகளின் அண்மையில் உள்ளது.

இரக்பி காற்பந்தின் பிறப்பிடமாக இது கருதப்படுகிறது.

சுவையான இடங்கள்

ரக்பி காற்பந்து கண்டுபிடிக்கப்பட்ட இடமாக கருதப்படும் மைதானத்திலிருந்து இரக்பி பாடசாலை.

நகரத்தில் காணவேண்டிய சில இடங்கள்:

  • இரக்பி பாடசாலை அருங்காட்சியகம் - இரக்பி பாடசாலை மற்றும் நகரத்தின் வரலாறு குறித்த ஒலி-ஒளிக் காட்சிகள் உள்ளன.
  • இரக்பி கலைக் காட்சியகமும் அருங்காட்சியகமும் - கலைக்கூடத்தில் தேசியளவில் புகழ்பெற்ற தற்கால கலைப்படைப்புக்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தில் மற்றவற்றுடன், அருகிலுள்ள உரோமானிய குடியிருப்பான டிரிபோன்டியத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட உரோம தொல்பொருட்கள் காட்சிப்படுத்துள்ளன.
  • ஜேம்சு கில்பர்ட்டு ரக்பி காற்பந்து அருங்காட்சியகத்தில் மரபுப்படியாக ரக்பி பந்துகள் கைகளால் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பல ரக்பி காற்பந்து நினைவுப்பொருட்கள் உள்ளன.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.