யோகான் எலர்ட் போடே

யோகான் எலர்ட் போடே (Johann Elert Bode) (இடாய்ச்சு: [ˈboːdə]; 19ஜனவரி 1747 – 23 நவம்பர் 1826) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் தித்தியசு- போடே விதியை மீள்வடிவமைத்து பரவலாக்கியவர் ஆவார். போடே யுரேனசின் வட்டணையை அறுதியிட்டு அதற்குப் பெயரும் இட்டார்.

யோகான் எலர்ட் போடே
யோகான் எலர்ட் போடே
பிறப்புஜனவரி 19,1747
அம்பர்கு
இறப்பு1826|11|23|1747|1|19|df=y
பெர்லின்
தேசியம்செருமனி
துறைவானியல்
ஆய்வு நெறியாளர்யோகான் ஜார்ஜ் பூசுச்சு
முனைவர் பட்ட 
மாணவர்கள்
யோகான் பாஃப்
அறியப்படுவதுதித்தியசு-போடே விதி

வாழ்வும் பணியும்

போடே அம்பர்கில் பிறந்தார். இவர் இளமையில் கண் நோய் தாக்கவே, தன் வலது கண்ணை இழந்தார்; தொடர்ந்து கண்சிக்கல்கள் இவரை வாழ்நாள் முழுதும் வாட்டின.[1]

இளமையில் இவரது கணித்த் திறமை இவரை யோகான் பூசுச்சுக்கு அறிமுகப்படுத்தி, போடே அவரது நூலகத்தைப் பயன்படுத்த உதவியது.

இவர் 1766 ஆகத்து 5 இல் நிகழ்ந்த சூரிய ஓளிமறைப்பைப் பற்றி இவர் எழுதிய குறுங்கட்டுரையின் வெளியீட்டோடு இவரது பணி தொடங்கியது. அடுத்து இவரது வானியல் குறித்த எளிய நூலாகிய Anleitung zur Kenntniss des gestirnten Himmels (1768, 10th ed. 1844) வெளியிடப்படவே,, அதுகண்ட வெற்றியால் இவரை யோகான் ஈன்றிச் இலாம்பர்ட் பெர்லினுக்கு அழைக்க வைத்தது[2]அப்போது இவருக்கு மேம்பட்ட திட்ட்த்தினால் கணிக்கும் பணி இலாம்பர்ட்டால் தரப்பட்டது. அங்கு இவர் 1774 இல் பெயர்பெற்ற Astronomisches Jahrbuch எனும் இதழின் 51 தொகுதிகளை ஆண்டுக்கு ஒன்றாகத் தொகுத்து வெளியிட்டார்.[3]

இவர் 1786 இல் பெர்லின் வான்கானகத்தின் இயக்குநரானார். இப்பணியில் இருந்து இவர் 1825 இல் ஓய்வு பெற்றார்.[3]

இவர் 1787 முதல் 1825 வரை Astronomisches Rechen-Institut நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவர் 1794 இல்சுவீடன் அரசு வானியல் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வானார். இவர் 1789 ஏப்பிரலில் அரசுகழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

போடே தன் 79 ஆம் அகவையில் 1826 நவம்பர் 23 இல் இறந்தார்.

தேர்ந்தெடுத்த எழுத்துகள்

ஓரியன் விண்மீன்குழுவைக் காட்டும் Uranographia ஒளித்தட்டின் பகுதி
  • 1768 (10th ed. 1844) Anleitung zur Kentniss des Gestirnten Himmels (The most famous of Bode's writings. In this work, he first announced Bode's law.)
  • 1774-1957 Berliner Astronomisches Jahrbuch für 1776-1959 (The astronomical yearbook published by Berlin Observatory.)
  • 1776 Sammlung astronomischer Tafeln (3 vols.)
  • 1776 (3rd ed. 1808) Erläuterung der Sternkunde, an introductory book on the constellations and their tales, which was reprinted more than ten times
  • 1782 Vorstellung der Gestirne ... des Flamsteadschen Himmelsatlas (Bode's revised and enlarged edition of Fortin's small star atlas of Flamsteed.)
Verzeichniss (Containing the above star atlas, and including 5,058 stars observed by Flamsteed, Hevelius, T. Mayer, de la Caille, Messier, le Monnier, Darquier and Bode himself.)
  • 1801 Uranographia sive Astrorum Descriptio (A large star atlas illustrated with twenty copper plates.)
Allgemeine Beschreibung und Nachweisung der Gestirne (A star catalogue listing 17,240 stars.)

His works were highly effective in diffusing throughout Germany a taste for astronomy.[3]

மேற்கோள்கள்

  1. "Johann Elert Bode (19 January 1747 - 23 November 1826)". பார்த்த நாள் 2008-05-20.
  2. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58177.html. பார்த்த நாள்: August 22, 2012.
  3.   "Bode, Johann Elert". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
  4. "Library and Archive Catalogue". Royal Society. பார்த்த நாள் 17 December 2010.

மேலும் படிக்க

  • Schwemin, Friedhelm (2006). Der Berliner Astronom. Leben und Werk von Johann Elert Bode (1747–1826). Frankfurt am Main: Verlag Harri Deutsch.- Acta Historica Astronomiae, Vol. 30 - A new, comprehensive biography and the source for some of the material on this page.
  • Sticker, Berhard (1970). "Bode, Johann Elert". in Gillispie, Charles Coulston. Dictionary of Scientific Biography. II. New York: Scribner. பக். 220–221

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.