யோகா பாலச்சந்திரன்

யோகா பாலச்சந்திரன் ( பி. 1938, கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர்.

யோகா பாலச்சந்திரன்
பிறப்புயோகா வல்லிபுரம்
1938 (அகவை 8081)
கரவெட்டி, யாழ்ப்பாணம்
இருப்பிடம்கனடா
பணிஎழுத்தாளர், ஊடகவியலாளர்
வாழ்க்கைத்
துணை
கே. பாலச்சந்திரன்

1960களில் வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவின் " சருங்கலே" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு கரவெட்டியில் இடம்பெறக் காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். Never mind Silva, bye bye Raju, Broken Promise போன்ற ஆங்கில நாடகங்களை எழுதினார். இவரது கணவரான கே. பாலச்சந்திரன் "ரைம்ஸ்" பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு நல்கியவர். யோகா எழுதிய நாடகங்களை பாலச்சந்திரன் மேடையேற்றினார்.

எழுதிய நூல்கள்

  • மாவீரன் செண்பகராமன்

வெளி இணைப்புக்கள்

மாவீரன் செண்பகராமன்- நூலகம் திட்டம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.