யூடிஎஃப்ஜே-39546284

யூடிஎஃப்ஜே-39546284 (UDFj-39546284) என்பது 13.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு விண்மீன் பேரடை ஆகும். இது பெரு வெடிப்புக்கு 480 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2011, சனவரி 26 ஆம் நாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட பேரடைகளுள் இதுவே மிகப் பழமையானதாகும்[4]. நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அவதானிக்கப்பட்ட இப்பேரடையின் சிவப்புவரி இடப்பெயர்வு (z) ~10 ஆகும். ஆனாலும், முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட யூடிஎஃப்வை-38135539 என்ற பேரடை போன்று யூடிஎஃப்ஜே-39546284 என்ற இப்பேரடை நிறமாலை மூலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.[5]

UDFj-39546284
UDFj-39546284
கண்டறிந்த தகவல்கள்
விண்மீன் குழுபோர்னாக்சு
வல எழுச்சிக்கோணம்03h 32m 39.54s[1]
பக்கச்சாய்வு-27° 46 28.4[1]
செந்நகர்ச்சி~10.3[1]
தூரம்~13.2 கிகா-பில்லியன்]] ஒளி ஆண்டுகள்[2]
~31.7 billion light-years
(present comoving distance)[3]
தோற்றப் பருமன் (V)V 30.1 இலும் மெலிதானது[1]
H160 = 28.92 ± 0.18[1]
J125 - H160 > 2[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

ஒப்பீட்டளவில் மிகச் சிறிய காலப்பகுதியில் பேரடைகளின் எண்ணிக்கை வளர்ந்து வந்துள்ளமை இக்கண்டுபிடிப்பின் மூலம் அறியப்பட்டுள்ளது. பெரு வெடிப்புக்குப் பின்னர் 500 மில்லியன் ஆண்டுகளாக ஒரு பேரடையே இருந்துள்ளது. அதற்குப் பின்னர் 150 மில்லியன் ஆண்டுகளில் 10 பேரடைகள் உருவாயின. இது 100 மில்லியன் ஆண்டுகளில் இரட்டிப்பாகியது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. R.J. Bouwens, G.D. Illingworth, I. Labbe, P.A. Oesch, M. Carollo, M. Trenti, P.G. van Dokkum, M. Franx, M. Stiavelli, V. Gonzalez, D. Magee. "A candidate redshift z ~ 10 galaxy and rapid changes in that population at an age of 500 Myr". Astrophysical Journal.
  2. Rychard Bouwens, Garth Illiingworth & Dan Magee. "Galaxies at redshift 10". University of California Santa Cruz. பார்த்த நாள் 2011-01-27.
  3. Edward L. (Ned) Wright. "Cosmology Calculator I". Astronomy @ UCLA. பார்த்த நாள் 2011-01-27.
  4. Dr Emily Baldwin. ""Hubble pushes to the limit"". www.astronomynow.com.
  5. "Hubble finds a new contender for galaxy distance record". Space Telescope (heic1103 - Science Release) (26 January 2011). பார்த்த நாள் 2011-01-27.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.