யிங்லக் சினாவத்ரா

யிங்லக் சினாவத்ரா (Yingluck Shinawatra, தாய்:ยิ่งลักษณ์ ชินวัตร}}; பிறப்பு 21 சூன் 1967) என்பவர் தாய்லாந்தின் அரசியல்வாதியும் தாய்லாந்தின் 28வது பிரதமராக 2011 முதல் 2014 வரை பதவியில் இருந்தவரும் ஆவார். இவர் தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.[[1]

யிங்லக் சினாவத்ரா
ยิ่งลักษณ์ ชินวัตร
தாய்லாந்து நாட்டின் 28வது பிரதமர்
பதவியில்
5 ஆகஸ்ட் 2011  7 மே 2014
அரசர் பூமிபோல் அடுல்யதேஜ்
முன்னவர் அபிஷித் வெஜ்ஜாஜீவா
பின்வந்தவர் நிவாத்தம்ரோங்க் பூன்சோங்பைசன் (பொறுப்பு)
தனிநபர் தகவல்
பிறப்பு 21 சூன் 1967 (1967-06-21)
சான் காம்பெங், சியாங் மாய், தாய்லாந்து
அரசியல் கட்சி பியூ தாய்க் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அனுசோம் அமோர்ன்சத்
பிள்ளைகள் சுபாசெக் அமோர்ன்சத்
படித்த கல்வி நிறுவனங்கள் சியாங் மாய் பல்கலைக்கழகம்
கென்டக்கி அரசுப் பல்கலைக்கழகம்
சமயம் தேராவட பௌத்தம்
கையொப்பம்

சியாங் மாயில் பிறந்த யங்லக் பொது நிர்வாகத்தில் பட்டப்படிப்பை சியாங் மாய் பல்கலைக்கழகத்திலும் பட்டமேற்படிப்பை கென்டக்கி அரசுப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். அவரது அண்ணன் தக்சின் சினாவத்ரா நிறுவிய சின் வர்த்தகக் கழகத்தில் இணைந்து இருபதாண்டுகளில் மனை மேம்படுத்துனர் எஸ்சி அசெட் தலைவராகவும் தாய்லாந்தின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனம் அட்வான்ஸ்டு இன்ஃபோ சர்வீசஸ் மேலாண்மை இயக்குனராகவும் முன்னேறினார். இடையில் தாய்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தமையன் தட்சின் ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ புரட்சியின் போது, தாய்லாந்து நாட்டில் இருந்து தப்பி ஓடி துபாயில் தஞ்சம் அடைந்தார்.

யிங்லக்கின் சகோதரரும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமருமான தட்சினுடன் தொடர்புடைய பியூ தாய்க் கட்சி மே 2011 தாய் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக யிங்லக் சினாவத்ராவின் பெயரை அறிவித்திருந்தது.[2][3] முன்கட்ட முடிவுகளின்படி பினி தாய் கட்சி அமோக வெற்றி பெற்று 500 இடங்கள் உள்ள தாய்லாந்து நாடாளுமன்றத்தில் 263 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இவ்வாறு ஒரு தனிக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவது தாய்லாந்து வரலாற்றில் இது இரண்டாம் முறையாகும்.[4]

2013 கலவரம்

யங்லக் சினாவத்ராவின் (பியூ தாய் கட்சி) ஆட்சியில் 2013 நவம்பர் மாதம் ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக போராட்டம் வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[5] பிறகு ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யிங்லக் பதவியை இழந்தார். பிறகு அவர் நாட்டில் இருந்து தப்பியோடிவிட்டார். அதைத்தொடர்ந்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
அபிஜித் வெஜ்ஜாஜீவா
தாய்லாந்து பிரதமர்
அறிவிப்பு

2011–இற்றை
பதவியில் உள்ளார்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.