யானை ஆண்டு

யானை ஆண்டு (Year of the Elephant, அரபு மொழி: عام الفيل, ʿஆமு இ-ஃபில்) என்பது இசுலாமிய வரலாற்றில் அண்ணளவாக பொ.ஆ. 570 ஆம் ஆண்டைக் குறிக்கும் பெயர் ஆகும். இசுலாமிய வழக்கப்படி, இவ்வாண்டிலேயே இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்த முகம்மது நபி பிறந்தார்.[1] மக்கா நகரில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை இவ்வாண்டின் பெயர் குறிக்கிறது: எதியோப்பியாவின் ஆக்சம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஏமனின் கிறித்தவ ஆட்சியாளர் அப்ரகா என்பவர்,[2][3] மக்கா நகரை அழிக்கும் நோக்கோடு ஒன்று அல்லது பல யானைப் படையுடன் காபாவை நோக்கி சென்றார். ஆனாலும், தலைமை தாங்கிச் சென்ற மகுமுது என்ற பெயர் கொண்ட யானை,[4] மக்காவைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிக்குச் சென்று அதனைத் தாண்டிச் செல்ல மறுத்து நின்று விட்டது. பெரியம்மை போன்ற தொற்றுநோயே அவரை மெக்காவைக் கைப்பற்ற முடியாமைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோட்பாடும் நம்பப்படுகிறது.[5] அராபியத் தீபகற்பத்தில் இவ்வாண்டு "யானையின் ஆண்டு" எனப் பெயரிடப்பட்டு ஆண்டுகளை அழைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. உமறு இப்னு அல்-கத்தாப்பின் ஆட்சிக் காலத்தில் (634-644) இசுலாமிய நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

தெற்கு அராபியாவில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற ஆய்வுகளின்படி, யானை ஆண்டு கிபி 569 அல்லது 568 ஆக இருக்கலாம் எனப்படுகிறது. சசானியப் பேரரசு யெமனின் பைசாந்திய அரசை கிபி 570 இல் கைப்பற்றியது.[6] ஆனாலும், முகம்மது நபியின் பிறப்பிற்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம் என இன்றைய வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[7]

மேற்கோள்கள்

  1. Hajjah Adil, Amina, "Prophet Muhammad", ISCA, Jun 1, 2002, ISBN 1-930409-11-7
  2. "Abraha." Dictionary of African Christian Biographies. 2007. (அணுக்கம் 11 ஏப்ரல் 2007)
  3. Walter W. Müller, "Outline of the History of Ancient Southern Arabia," in Werner Daum (ed.), Yemen: 3000 Years of Art and Civilisation in Arabia Felix. 1987.
  4. ʿAbdu r-Rahmān ibn Nāsir as-Saʿdī. "Tafsir of Surah al Fil - The Elephant (Surah 105)". Translated by Abū Rumaysah. Islamic Network. பார்த்த நாள் 15 March 2013. "This elephant was called Mahmud and it was sent to Abrahah from Najashi, the king of Abyssinia, particularly for this expedition."
  5. Marr JS, Hubbard E, Cathey, JT (2015). "The Year of the Elephant". Wikiversity Journal of Medicine 2 (1). doi:10.15347/wjm/2015.003. https://en.wikiversity.org/wiki/The_Year_of_the_Elephant.
    In turn citing: Willan R. (1821). "Miscellaneous works: comprising An inquiry into the antiquity of the small-pox, measles, and scarlet fever, now first published; Reports on the diseases in London, a new ed.; and detached papers on medical subjects, collected from various periodical publi" 488.. Cadell.
  6. William Montgomery Watt (1974), p.7
  7. Esposito (2003). The Oxford Dictionary of Islam, ISBN 0-19-512558-4, Oxford University Press
  • முகம்மது - மார்டின் லிங்ஸ்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.