யாகூ! விடைகள்

யாகூ விடைகள் சமூகத்தினால் முன்னெடுன்னெடுத்துவரப்படும் வேறு பயனர்களால கேட்கப் படும் கேள்விகளிற்குப் பதிலளிக்கவும் கேள்விகளைக் கேட்கவும் உதவும் சேவையாகும். இதன் போட்டியாளர்களாக கூகிள் விடைகள் விளங்கினாலும் இவை கூகிள் விடைகள் போன்று பணரீதியாக சம்பந்தப் பட்டதல்ல. இதன் பிரதான போட்டியாளராக மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் லைவ் வினாக்களும் விடைகளுமே இருக்குமென எதிர்பார்க்கப் படுகின்றது. கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெறுவதற்கு இருக்கவேண்டியது யாகூ பயனர் கணக்கு மாத்திரமே.

யாகூப் பாவனையாளர்கள்(பயன்படுத்துபவர்கள்) இச்சேவையினால் மிகவும் கவரப்பட்டுள்ளனர். யாகூ அங்கத்தவர்கள் யாகூவின் சமுதாய வழிகாட்டல்களை மீறாத எந்தக் கேள்வினையும் கேட்கமுடியும். நல்ல விடைகளைத் தொடர்ச்சியாக அளிக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கிழமையும் அல்லது ஒன்று விட்டொரு கிழமை யாகூ 360 வலைப்பதிவில் பங்களிப்பார்கள்.

புள்ளித்திட்டம்

இத்தளம் புள்ளிகளை வழங்குகின்றது. ஒவ்வொரு விடைகளும் 1 புள்ளியைப் பெறுகின்றன நல்ல விடைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை 10 புள்ளிகளைப் பெறுகின்றன. கேள்விகளைக் கேட்கும் போது 5 புள்ளிகள் கழிக்கப் படும். பெறும் புள்ளிகள் அடிப்படையில் பல்வேறு நிலைகளைப் பயனர்கள் அடைவர். ஒவ்வொரு நிலையும் கூடுதலான வசதிகளை அளிக்கும்.

முரணான கருத்துக்கள்

புள்ளித்திட்டமானது கூடுதல் விடைகளை அளிக்கத் தூண்டுவதோடு கருதாழம் மிக்க விடைகளை அளிக்காது என்று குறைகூறப்படுகின்றது. சிலகேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப் படுகின்றன.

சில பயனர்கள் விடையளிக்கும் போது விக்கிப்பீடியா பக்கங்களில் இருந்து விடைகளை எடுத்துவிட்டு அப்பக்கத்திற்கான இணைப்பை விடைகளில் கொடுக்காமல் தங்களது விடைபோல் விடையளிக்கின்றார்கள். இவ்வாறா நகல் எடுப்பவர்கள் பெரும்பாலும் சிறந்த விடைகளைகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவதோடு உண்மையாகக் கேள்விகளை அலசி ஆராய்ந்து விடையளிப்பவர்கள் சிறந்த விடைகளாகத் தீர்மானிக்கப் படுவது குறைவாகவே உள்ளது.

கூடுதலாக கேள்விகள் ஏறத்தாழ 20 வினாக்கள் 1 நிமிடத்திற்குத் இவ்விணையத்தில் தோன்றுவது அரட்டை அரங்கள் போன்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றன. இக்கேள்விகள் அண்மையில் கேட்கப்பட்ட கேள்விகள் பகுதியில் தோன்றினால் அவை ஒரு சில நிமிடங்களில் விடையளிக்கப் படுகின்றது.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.