மோகவதைப் பரணி

மோகவதைப் பரணி என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.

இதன் மறுபெயர் ஏடுகளில் விடுபட்டுள்ளது. இதில் 850 கண்ணிகள் உள்ளன. இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். மோகத்தை எப்படி வதைத்தார் என்று இது விளக்குகிறது. மோகத்தை மோகன் என இது உருவகம் செய்துகொள்கிறது.

திருமுடி அடைவு

இந்த நூலில் வரும் ”திருமுடி அடைவு”ப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, கீதை சொன்ன கண்ணன், நம்மாழ்வார், காழிச்சிறு பாலகன் (ஞானசம்பந்தர்), நாவின் அரசன் (திருநாவுக்கரசு), சுந்தரன், வாதவூரன் என்பவர்களைப் போற்றிய பின்னர் சிவப்பிரகாசரையும், சொரூபானந்தரையும் இணைத்து வரிசைப்படுத்துகிறார்.

கதை

போர்முகத்து 1000 களிறுகளை வென்ற மானவீரனுக்குப் பாடும் பரணியைப் பற்றற்றிருந்த சொரூபானந்தர் மேல் பாடலாமா என மாணாக்கர் பலர் வினவினர். மோகம் ஒருவர் மனத்திலுள்ள ஒரு மதயானை. அதனை வென்றவர் குரு சொரூபானந்தர். ஆயிரம் யானைகளை வென்றார் என்பது எப்படி என அவர்கள் வினவினர். தத்துவராயர் விடை பகராது சில நாள் காலம் கடத்தினார். பின்னர் அவர்கள் அவரவர் மனத்திலுள்ள மோகங்களும் அடங்கக் கண்டு ஆசிரியர் ஆயிரக்கணக்கானோர் மோகத்தை அடக்கிய வெற்றியை உணர்ந்து கொண்டார்களாம்.

கருவிநூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.