மொங் மக்கள்

மொங் (Hmong, அல்லது Mong) எனப்படுவோர் ஆசிய இன மக்கள். இவர்கள் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் பர்மா ஆகிய நாடுகளின் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மொங் இனத்தவர்கள் தெற்கு சீனாவில் வாழும் மியாவோ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அரசியல் திரமின்மை காரணமாகவும், தமது வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் கிபி 18ம் நூற்றாண்டளவில் இவர்கள் ஆசியாவின் தெற்குப் பகுதி நோக்கி புலம் பெயர ஆரம்பித்தனர்.

மொங்
Hmong/Mong
வியட்நாமின் "சா பா" நகரில் மொங் மக்கள் தமது பாரம்பரிய உடையில்
மொத்த மக்கள்தொகை
4 முதல் 5 மில்லியன்[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சீனா3 மில்லியன்
 வியட்நாம்790,000
 லாவோஸ்450,000
 ஐக்கிய அமெரிக்கா250,000~300,000
 தாய்லாந்து150,000
 ஆத்திரேலியா2,190 [2]
 பிரெஞ்சு கயானா2000
 கனடா600
 செருமனி500
மொழி(கள்)
மொங் மொழி
சமயங்கள்
ஷாமானியம், பௌத்தம், கிறித்தவம், ஏனைய

1950கள் முதல் 70கள் வரை லாவோசில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கம்யூனிசத் தேசியவாதிகளான பதெட் லாவோயினருக்கு எதிராக மொங் மக்கள் போரிட்டார்கள். 1975 ஆம் ஆண்டில் பதெட் லாவோ அந்நாட்டைக் கைப்பற்றியதை அடுத்து வஞ்சம் தீர்ப்பதற்காக மொங் இனத்தவர்கள் ஏனைய லாவோ மக்களிடம் இருந்து வேறுபடுத்தப்பட்டார்கள். இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கில் அரசியல் தஞ்சம் கோரி தாய்லாந்து சென்றார்கள். 1970களின் பிற்பகுதியில் இவர்களில் பெரும்பான்மையானோர் மேலை நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரெஞ்சு கினி, கனடா போன்ற நாடுகளில் குடியமர்த்தப்பட்டார்கள். மீதமிருந்தோரில் பலர் ஐநாவின் உதவித்திட்டத்துடன் லாவோசிற்குத் திரும்பினார்கள். கிட்டத்தட்ட 8,000 மொங் மக்கள் இன்னமும் அகதிகளாக தாய்லாந்தில் தங்கியிருக்கிறார்கள்[3].

ஊடகக் காட்சியகம்

குறிப்புகள்

  1. Lemoine, Jacques (2005), "What is the actual number of the (H)mong in the world?" (PDF), Hmong Studies Journal, 6
  2. ABS Census - ethnicity
  3. Borders, Doctors without (2008), Thailand Forcibly Returns Hundreds of Hmong Refugees to Laos

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.