மைக்கேல் பாலின்

மைக்கேல் எட்வர்டு பாலின் (Michael Edward Palin) மே 5 ஆம் தியதி 1943 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஒரு நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் மற்றும் பயணக்கட்டுரையாளர்.

மைக்கேல் எட்வர்டு பாலின்
இத்தாலியில் -பாலின் (2005)
பிறப்பு5 மே 1943 (1943-05-05)
இங்கிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்பிராஸினோஸ் கல்லூரி , ஆக்ஸ்போர்டு.
பணிநடிகர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர், நகைச்சுவையாளர்
அறியப்படுவதுபயண ஆவணங்கள் வழங்குபவர்
வாழ்க்கைத்
துணை
ஹெலன்
பிள்ளைகள்3
வலைத்தளம்
Palin's Travels

வாழ்க்கை

இவரது பெற்றோருக்கு பிறந்த ஒரே மகன் (குடும்பத்தின் இரண்டாவது குழந்தை). இவரது தந்தை ஒரு பொறியாளர். இவரது சகோதரி ஏஜ்ஜலா 1987 ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மைக்கேல் பாலின் தனது 5 வது வயதிலேயே பள்ளி நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். 1962 -ல் தற்கால வரலாறு எனும் பாடத்தில் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்று முடித்ததும் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தோன்றினார். 1959 -ல் கெலன் கிப்சனை சந்தித்து பின்னர் 1966-ல் மணந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள்.

பயண ஆவணப்படங்கள்

இவரது முதல் பயண ஆவணப்படம் கிரேட் ரயில்வே ஜர்னீஸ் ஆப் த வேர்ல்டு பிபிசி தொலைக்காட்சிக்காக எடுத்தார். இவரது பிற பயண ஆவணப்படங்களின் விவரம் கீழே:

  • மைக்கேல் பாலின்: உலகைச்சுற்றி 80 நாட்கள் (Michael Palin: Around the World in 80 Days) .
  • துருவத்திலிருந்து துருவத்திற்கு (Pole to Pole )1991-1992.
  • மைக்கேல் பாலினுடன் முழு வட்டம் (Full Circle with Michael Palin 1996-1997)
  • மைக்கேல் பாலினின் ஹெமிங்வே சாகசம்(Michael Palin's Hemingway Adventure) 1999
  • மைக்கேல் பாலினுடன் சகாரா (Sahara with Michael Palin) 2001-2002.
  • மைக்கேல் பாலினுடன் ஹிமாலயா (Himalaya with Michael Palin) 2003-2004
  • மைக்கேல் பாலின் புதிய ஐரோப்பா (Michael Palin's New Europe) 2006-2007
  • மைக்கேல் பாலினுடன் பிரேஸிலில் (Brazil with Michael Palin ) Palin 2012

சமூகச் செயல்கள்

2010 ஜூலையில் இந்தியாவின் ஒரிசாவிலுள்ள பழங்குடி இன மக்களுக்காக குரல் கொடுத்தார்.[1] 2011 ஜனவரி இரண்டாம் நாள் இலண்டனில் 'சிறந்த போக்குவரத்து நியாயமான கட்டணத்தில்' என்ற கையெழுத்து இயக்கத்தில் முதன் முதலில் கையெழுத்திட்டார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.