மேல்நாட்டு மருமகன்

மேல்நாட்டு மருமகன் (Melnaattu Marumagan), எம்எஸ்எஸ் இயக்கத்தில், ராஜ்கமல், ஆண்ட்ரினா நௌரிகட், லொள்ளுசபா மனோகர், முத்துகாளை ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் வி. கிஷோர்குமாரின் இசையில், கௌதம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், ராஜ் கீர்த்தி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் 16, பெப்ருவரி 2018 இல் வெளியானது.

மேல்நாட்டு மருமகன்
இயக்கம்எம்எஸ்எஸ்
தயாரிப்புமனோ உதயகுமார்
இசைவி. கிஷோர்குமார்
நடிப்புராஜ்கமல்
ஆண்ட்ரினே
ஒளிப்பதிவுகௌதம் கிருஷ்ணா
படத்தொகுப்புராஜ் கீர்த்தி
கலையகம்உதயா கிரியேசன்ஸ்
வெளியீடு16 பெப்ருவரி 2018
ஓட்டம்134
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

  • ராஜ்கமல்
  • ஆண்ட்ரினா நௌரிகட்
  • லொள்ளுசபா மனோகர்
  • முத்துகாளை

கதை

ஒவ்வொரு மனிதருக்கும் காசு, பணம், காதல், திருமணம் என்று ஆசை. வேற்றுநாட்டுப் பெண்மணி ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து அயல்நாட்டில் வாழ வேண்டும் என்பது இப்படத்தின் கதைநாயகனின் விருப்பம். திருமணத்தில் உள்ள பண்பாட்டுக் கூறுகளை இப்படம் அணுகியுள்ளது. நாயகனின் கனவு என்னவாயிற்று என்பதே இந்த படத்தின் கதை.[1]

இசை

Untitled

இத்திரைப்படத்திற்கு  வி. கிஷோர்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை  22 ஆகத்து 2016இல் ஆரா மியூசிக்கால் வெளியிடப்பட்டது. இப்படத்திலு ள்ள யாரோ இவள் நா. முத்துக்குமாரால் அரைமணிநேரத்தில் ஒரு மகிழுந்துப் பயணத்தில் வானூர்திநிலையத்திற்குச் செல்லும்போது எழுதப்பட்டது.[2]

இசைக்குறிப்புகள்
எண் தலைப்புபாடலாசிரியர்பாடகர்(கள்) நீளம்
1. "யாரோ இவள்"  நா. முத்துக்குமார்கார்த்திக் 4:56
2. "தவிலு"  அக்கட்டி ஆறுமுகம்அக்கட்டி ஆறுமுகம் 3:58
3. "பத்துகிலோ"  நாஞ்சில் ராஜன்ஜித்தின், அனிதா 5:39
4. "கட்டிவிடவா"  எம்எஸ்எஸ்முகேஷ், அனிதா 4:20

படப்பணிகள்

இப்படத்தின் படப்பணிகள் சனவரி 2015இல் நிறைவடைந்தன. மூன்றாண்டுகளுக்குப் பிறகு 2018இல் இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாயின.[3][4] இப்படம் பிரான்சிலும் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர்.[5]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.