மேகன் ஃபாக்சு

மேகன் டெனிசு ஃபாக்சு (Megan Denise Fox) (மே 16, 1986) ஒரு அமெரிக்க நடிகை. அவர் 2001வது ஆண்டு தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் பல சில்லறை வேடங்களுடன் தமது நடிப்புத் தொழிலைத் துவங்கினார். பிறகு ஓப் அண்ட் ஃபெய்த் என்னும் நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப வரும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். 2004வது ஆண்டு, கன்பெசன்சு ஆஃப் எ டீனேஜ் டிராமா க்வீன் என்னும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்ததுடன் தனது திரை வாழ்க்கையைத் துவங்கினார். 2007வது வருடம், அவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்னும் மாபெரும் வெற்றித் திரைப்படத்தில் சியா லாபிவௌஃப் கதாபாத்திரத்தின் காதலியாக மிக்கேலா பேன்சு என்னும் வேடம் அளிக்கப் பெற்றார். இது அவருக்கு ஒரு கட்டுடைத்த வெற்றிக் கதாபாத்திரமான அமைந்து பல டீன் சாய்ஸ் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். 2009 வது வருடம் டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் திரைப்படத்தில், ஃபாக்சு தமது வேடத்தை மீண்டும் ஏற்று நடித்தார். 2009வது வருடத்தின் பிற்பகுதியில், செனிபர்சு பாடி என்னும் திரைப்படத்தில் முதன்மையானகதாபாத்திரத்தில் நடித்தார்.

மேகன் ஃபாக்சு

இயற் பெயர் மேகன் டெனிசு ஃபாக்சு
பிறப்பு மே 16, 1986 (1986-05-16)
ஓக் ரிட்சு, டென்னிசி, ஐக்கிய அமெரிக்க நாடு
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 2001–தற்போது வரை
வீட்டுத் துணைவர்(கள்) பிரையன் ஆசுடின் கிரீன் (2004–தற்போது வரை)

2007, 2008 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் மாக்சிம் பத்திரிகையின் வருடாந்திர கவர்ச்சியான 100 பேர் பட்டியலில் இவர் முறையே #18, #16, மற்றும் #2-ம் இடங்களைப் பெற்றார்; 2008வது வருடம், எஃப் எச் எம் வாசகர்கள் இவருக்கு "உலகிலேயே மிகுந்த பாலியல் கவர்ச்சி கொண்ட பெண்" என்று வாக்களித்தனர்.[1] 2008-வது வருடம் மூவிஃபோன் பத்திரிகையின், "25 வயதுக்கு உட்பட்ட 25 கவர்ச்சி மிகு நடிகர்கள்" பட்டியலில் முதலாம் இடத்தை அடைந்தார்.[2] 2004 வது வருடம், ஃபாக்சு பெவர்லி ஹில்ஸ் 90210 புகழ் பிரையன் ஆசுடின் கீரின் என்னும் நடிகரை ஓப் அண்ட் ஃபெய்த் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்ததாகக் கூறப்பட்டது முதல், அவருடன் ஒன்றாகச் சுற்றத் துவங்கினார்.[3][4] அதிலிருந்து, இவர்கள் இருவருக்கும் தொடர்வதும் முறிவதுமான ஒரு உறவு இருந்து வருகிறது.

மேற்கோள்கள்

  1. "Maxim". BBC News. 2008-04-24. http://news.bbc.co.uk/1/hi/entertainment/7364647.stm. பார்த்த நாள்: 2008-04-25.
  2. "Megan Fox is world's sexiest woman". News.com.au. 2008-04-24. Archived from the original on 2008-05-08. http://web.archive.org/web/20080508040824/http://www.news.com.au/dailytelegraph/story/0,22049,23591039-5006920,00.html. பார்த்த நாள்: 2008-04-25.
  3. "Megan Fox heats up talk about film, love life". Access Hollywood (2009-05-05). பார்த்த நாள் 2009-05-05.
  4. "On The Cover: Megan Fox". The Evening Herald. பார்த்த நாள் 2008-08-18.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.