மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம்
மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம் (Melbourne Rectangular Stadium) என்பது ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ண்னில் அமைந்துள்ள ஒரு விளையாட்டரங்கம் ஆகும். இவ்விளையாட்டரங்கம் தற்போது ஏஏஎம்ஐ பூங்கா (AAMI Park) என்ற பெயரில் அதன் தற்போதைய விளம்பரதாரரின் பெயரில் அழைக்கப்படுகிறது.[4]
மெல்பேர்ண் நார்சதுர விளையாட்டரங்கம் Melbourne Rectangular Stadium | |
---|---|
AAMI பூங்கா | |
இடம் | எட்வின் ஃபிளாக் தரை, ஒலிம்பிக் புலெவார்ட், மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா |
அமைவு | 37°49′31″S 144°59′2″E |
எழும்பச்செயல் ஆரம்பம் | 2007 |
எழும்புச்செயல் முடிவு | 2010 |
திறவு | 7 மே 2010[1] |
உரிமையாளர் | விக்டோரியா மாநில அரசு |
ஆளுனர் | மெல்பேர்ண், ஒலிம்பிக் பூங்காக்கள் அறக்கட்டளை |
தரை | StaLok புற்தரை |
கட்டிட விலை | A$268 மில். |
கட்டிடக்கலைஞர் | கொக்சு ஆர்க்கிடெக்ட்சு |
குத்தகை அணி(கள்) | |
அமரக்கூடிய பேர் | மொத்தம்: 30,050[2] |
பரப்பளவு | 136 x 85மீ[3] |
மெல்பேர்ன் நாற்சதுர விளையாட்டரங்கம் என அழைக்கப்பட்ட இது ஏஏஎம்ஐ காப்பீட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட 8-ஆண்டு ஒப்பந்தத்தின் படி ஏஏஎம்ஐ பூங்கா என்ற பெயரில் 2010 மார்ச் 16 முதல் அழைக்கப்படுகிறது.[4] மெல்பேர்ணில் தேவைக்கென-நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பெரிய நாற்சதுர-வடிவ விளையாட்டரங்கம் இதுவாகும். இவ்வரங்கத்தில் ஆசியக் கிண்ணம் கால்பந்து 2015 போட்டிகளின் ஏழு ஆட்டங்களும், காலிறுதி ஆட்டமும் விளையாடப்பட்டது. மெல்பேர்ணின் நீள்வட்ட விளையாட்டரங்குகளான எம்சிஜி, டொக்லாந்து விளையாட்டரங்கு, பிரின்சசு பார்க் ஆகியன அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் அல்லது துடுப்பாட்டம் விளையாடுவதற்கு ஏற்றவை ஆகும். மெல்பேர்ணின் பெரிய நாற்சதுர விளையாட்டரங்கம் ஒலிம்பிக் பூங்கா விளையாட்டரங்கம் ஆகும். இது தடகள விளையாட்டிற்கு உகந்தது.
மேற்கோள்கள்
- {{cite web | last = Gough|first=Paul | url = http://sportal.com.au/league-news-display/anzac-test-opener-81759
- Reed, Ron (8 May 2010). "Bubbling with excitement on opening night". Herald Sun. News. பார்த்த நாள் 18 மே 2010.
- "Melbourne Rectangular Stadium (AAMI Park)". Major Projects Victoria. பார்த்த நாள் 18 மே 2010.
- McMahon, Stephen (16 மார்ச் 2010). "Lucky new stadium's called AAMI". Herald Sun. News. பார்த்த நாள் 18 மே 2010.