மெய்நிகர் வலையமைப்பூடான கணினி

மெய்நிகர் வலையமைப்பூடான கணினி அதாவது Virtual Network Computing (VNC) அமெரிக்காவின் பெல் ஆய்வுகூடத்தால் திறந்த மூலநிரலில் உருவாக்கப்பட்ட ஓர் மென்பொருளாகும். இம் மென்பொருளானது ஒரு கணினியில் இருந்து பிறிதோர் கணினியை (பொதுவாக சேவர்களை) இயக்குவதாகுப் பயன்படுகின்றது.. கணினி வழங்கி அல்லது சேவரிற்கு 24 மணிநேரமும் வல்லுனர்களை வைத்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காது தேவையேற்படும் சமயத்தில் இவ்வாறான பிரச்சினைகளை இணைய இணைப்பின் மூலம் பெரும்பாலும் அலுவலகத்திற்கு வராமலே வீட்டில் இருந்தே சரிசெய்ய வழிவகுக்கும் மென்பொருளாகும். இதில் விசைப்பலகைகளின் தட்டச்சு மற்றும் மவுஸ் கிளிக் போன்றவை இம்மென்பொருளூடாக (VNC கிளையண்ட்) மற்றக் கணினிக்கு வழங்கப்படும் (VNC சேவர்) அந்தக் கணினியின் திரையானது (பொதுவாக சேவரின்) VNC கிளையண்டிற்கு அனுப்பப்படும். இதில் முக்கிய ஓர் அம்சம் என்னவென்றால் இது இயங்குதளத்தைச் சாராது அதாவது விண்டோஸ் இயங்குதளத்தின் திரையை லினக்ஸ் இயங்குதளத்திலும் லினக்ஸ் இயங்குதளத்தின் திரையை விண்டோஸ்ஸிலும் பார்க்கவியலும். சில சந்தர்பங்களில் விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete ஓர் விசேட செய்கை என்பதால் இச் செயற்பாட்டிற்கான தட்டச்சுச் செயன்முறையை மற்றைய கணினிக்கு அநுப்ப விசேட வழிமுறைகள் கையாளப்படும் இது பாவிக்கும் மென்பொருளில் தங்கியுள்ளது (Real VNC இல் F8 விசைப்பலகையை அழுத்தி send Ctrl+Alt+Delete என்பதைத் தெரிவுசெய்யவும்).

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புக்கள்

  • RealVNC - ஓர் VNC பதிப்பு அமெரிக்காவின் பெல் ஆய்வு கூடத்தில் இருந்து
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.