மெய்சி மீள்விப்பு

மெய்சி மீள்விப்பு (明治維新 Meiji Ishin?) என்பது, 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், சப்பானிய அரசியல், சமூக அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை உருவாக்கிய தொடரான நிகழ்வுகளைக் குறிக்கின்றது. இந்நிகழ்வுகள் இடம்பெற்ற காலம், எடோ காலப்பகுதியின் பிற்பகுதியையும், மெய்சி காலப்பகுதியின் முற்பகுதியையும் உள்ளடக்கியது.

சப்பானின் வரலாறு

The Meiji Emperor,
moving from Kyoto to Tokyo, end of 1868.

  • பழையகற்காலம் 35000–14000 BC
  • சோமோன் காலம் 14000–400 BC
  • யயோய் காலம் 400 BC–250 AD
  • கொஃபுன் காலம் 250–538
  • அசுக்கா காலம் 538–710
  • நாரா காலம் 710–794
  • எய்யன் காலம் 794–1185
  • கமக்குரா காலம் 1185–1333
  • நன்போக்கு-சோ காலம்1333–1392
    • கென்மு மீள்விப்பு 1333–1336
  • முரோமச்சி காலம் (Ashikaga period)
    1336–1573
    • செங்கோக்கு காலம்
  • அசூச்சி-மொமோயாமா காலம்
    1568–1603
    • நன்பான் வணிகம்
  • எடோ காலம் (Tokugawa period)
    1603–1868
    • பாக்குமட்சு 1853–1868
  • பாக்குமட்சு (Prewar Japan) 1868–1945
    • மெய்சி காலம் 1868–1912
    • தாய்சோ காலம் 1912–1926
      • உலகப்போர் 1 இல் சப்பான்
    • சோவா காலம் (constitutional:1926–1945.
      nominal:1926-1989)
      • சப்பானிய இராணுவவாதம்
  • போருக்குப் பிந்திய சப்பான் 1945–present
    • Occupation of Japan 1945–1952
    • Post-Occupation Japan 1952–1989
    • எய்செய் காலம் 1989–present
  • பொருளாதார வரலாறு
  • கல்வி வரலாறு
  • படைத்துறை வரலாறு
  • கடற்படை வரலாறு
  • நிலநடுக்க வரலாறு
Glossary

கூட்டணி

1866 ஆம் ஆண்டில், சட்சுமா பகுதியின் தலைவரான சாய்கோ தாக்காமோரியும், சோசூ பகுதியின் தலைவர் கிடோ தக்கயோசியும் இனைந்து உருவாக்கிய சட்சுமா-சோசூ கூட்டணியே மெய்சி மீள்விப்புக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். இவ்விரு தலைவர்களும் பேரரசர் கோமேய்க்கு ஆதரவு வழங்கினர். சாக்கோமோட்டோ ரியோமா என்பவர் அப்போது ஆட்சியில் இருந்த தொக்குகாவா சொகுனாட்டே அரசை எதிர்ப்பதற்காகவும், பேரரசரின் ஆட்சியை மீள்விப்பதற்காகவும் இவர்களை ஒன்றிணைத்தார். 1867 ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி பேரரசர் கோமெய் காலமானதைத் தொடர்ந்து அதே ஆண்டு பெப்ரவரி மூன்றாம் தேதி அவரது மகன் பேரரசர் மெய்சி அரியணை ஏறினார். இக் காலப்பகுதியில் சப்பான் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பிலிருந்து, முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்கு மாற்றம் பெற்றதுடன் அதனை மேனாட்டுச் செல்வாக்குக்குள் கொண்டுவந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.