மெங்கிஸ்து ஹைலி மரியாம்

மெங்கிஸ்து ஹைலி மரியாம் (Mengistu Haile Mariam, பிறப்பு: 1937[1]) எத்தியோப்பியா வின் தலைவராக 1977 முதல் 1991 வரையில் ஆட்சியில் இருந்தவர். 1977 முதல் 1987 வரையில் அப்போதைய இராணுவ ஆட்சியில் மிகவும் பலம் வாய்ந்த இராணுவத் தலைவராகவும் இருந்தார். 1977-1978 காலப்பகுதியில் நாட்டில் எழுந்த மக்கள் எழுச்சியை இராணுவத்தின் உதவியுடன் முறியடித்தார். பல்லாயிரக்கணக்கானோர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்[2]. பனிப்போர் முடிவில் 1991 இல் அரசுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து மெங்கிஸ்து சிம்பாப்வேக்குத் தப்பி ஓடினார். எத்தியோப்பிய நீதிமன்றம் அவரில்லாமலேயே நீதி விசாரணை நடத்தி மெங்கிஸ்துவுக்கு ஆயுள் சிறைத்தண்டனையை விதித்தது[3].

மெங்கிஸ்து ஹைலி மரியாம்
Mengistu Haile Mariam
எத்தியோப்பியாவின் அரசுத் தலைவர்
பதவியில்
பெப்ரவரி 3, 1977  செப்டம்பர் 10, 1987
முன்னவர் டஃபாரி பென்டி
பின்வந்தவர் அவரே, எத்தியோப்பிய மக்கள் சனநாயகக் குடியரசின் தலைவராக
எத்தியோப்பியாவின் 1வது அதிபர்
பதவியில்
செப்டம்பர் 10 1987  மே 21 1991
பின்வந்தவர் டெஸ்பாயே கிடான்
தனிநபர் தகவல்
பிறப்பு 1937[1]
அரசியல் கட்சி எத்தியோப்பிய தொழிலாளர் கட்சி

மேற்கோள்கள்

  1. "Profile: Mengistu Haile Mariam" (in English). BBC News Online. December 12, 2006. http://news.bbc.co.uk/1/hi/world/africa/6171927.stm. பார்த்த நாள்: 2006-12-13.. Other accounts state May 21 1941, May 27, 1941
  2. BBC, "Mengistu found guilty of genocide," 12 December 2006.
  3. "Profile: Mengistu Haile Mariam" (in English). BBC News Online. December 12, 2006. http://news.bbc.co.uk/2/hi/africa/6251095.stm. பார்த்த நாள்: 2007-01-11..

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.