மெக்னாஸ்
மெக்னாஸ் (அரபு:مكناس) என்பது மொரோக்கோ நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகரமான ராபாத்தில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், ஃபெஸ் இலிருந்து 60 கி.மீ தொலைவிலும் உள்ளது. மெக்னாஸ் இவ்விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள A2 வீதியில் உள்ளது. இது மௌலே இஸ்மாயிலின் (1672-1727) ஆட்சிக் காலத்தில் மொரோக்கோவின் தலைநகரமாக இருந்தது. பின்னர் தலைநகரம் ராபாத்துக்கு மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக் கணப்பெடுப்பின்படி, 536,322 மக்கள்தொகை கொண்ட மெக்னாஸ், மெக்னாஸ் தஃபிலாலெத் பகுதியில் தலைநகராகவும் விளங்குகிறது.
மெக்னாஸ் வரலாற்று நகரம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iv |
உசாத்துணை | 793 |
UNESCO region | அரபு நாடுகள் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1996 (20ஆவது தொடர்) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.