மூலம் திருநாள்

மூலம் திருநாள் 1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 25'ம் தேதி சங்கனேசரி ராஜ குடும்பத்தை சேர்ந்த, ராஜ ராஜ வர்மா தம்புரான் மற்றும் மகாராணி லட்சுமி பாய் அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இளவயதிலேயே தாயையும் சகோதரனையும் இழந்த இவர் அன்னாஜி ராவ் (BA) மற்றும் ரகுநாத் ராவ் (BA) ஆகியோரிடம் கல்வி பயின்றார். ஸ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ இராமவர்மா 1885-1924 வரை ஆட்சி செய்த போது, பல கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் நிறுவப்பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில் கல்வி, மருத்துவம், சட்ட ஒழுங்கு ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பெண்கள் கல்வியும் அனுமதிக்கப்பட்டது. ஆயுள் காப்பீடும் இவரது காலத்தில் கொண்டு வரப்பட்டது. இவரது சேவைகளைப் பாராட்டி 1898 ஆண்டு முதல் ஆங்கிலேய அரசு இவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளித்து கவுரப்படுத்தியது.

ஆறாம் இராம வர்மா
திருவிதாங்கூர் மன்னர்
முன்னிருந்தவர்விசாகம் திருநாள்
சேது லட்சுமி பாய்
துணைவர்வடசேரி அம்மாச்சி பானப்பிள்ளை அம்மா லட்சுமி பிள்ளை கார்த்தியாயனி பிள்ளை கோச்சம்மா
முழுப்பெயர்
திருவிதாங்கூர் மகாராஜா சிறீ பத்மநாபதாச வாஞ்சிபால சர் இராம வர்மா VI
சமக்கிருதம்ஆங்கிலம்
மரபுவேணாடு சுவரூபம்
அரச குலம்குலசேகர
தந்தைசங்கனேசரி ராஜ ராஜ வர்மா
தாய்ராணி லட்சுமி பாய்
பிறப்புசெப்டம்பர் 25, 1857(1857-09-25)
இறப்புமார்ச்சு 7, 1924(1924-03-07) (அகவை 66)
சமயம்இந்து சமயம்

இவருக்கு இரு மனைவிகள் ஆவர். முதலாமானவர் நாகர்கோயில் அம்மவீட்டைச் சேர்ந்த அனந்தலட்சுமி பிள்ளை கொச்சம்மா ஆவார்.1882'ம் ஆண்டு ஒரு மகனைப் பெற்ற பிறகு இவர் மரணம் அடைந்தார். இரண்டாமானவர் வடசேரி அம்மவீட்டைச் சேர்ந்த கார்த்தியாயினி கொச்சம்மா ஆவார். மருமக்கள்தாய முறைப்படி இவருக்கு பெண் பிள்ளைகள் இல்லாதபடியால், மாவேலிக்கரை வீட்டைச் சேர்ந்த இரு ராஜகுமாரிகளான சேது லட்சுமி பாய் மற்றும் சேது பார்வதி பாய் ஆகிய இருவரையும் தத்தெடுத்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.