மூடிய கடல்

வரலாறு

கி.மு. 30 முதல் கி.பி 117 வரை மத்திய கடலை சுற்றி வளைத்து பெரும்பான்மையான இடங்களை இரோம பேரரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இரோமானியரிகள் இக்கடலுக்கு நமது கடல் என்று பெயர் வைக்கத் தொடங்கினார்கள்[4]. அக்காலத்தில் நவம்பர் மற்றும் மார்ச்சு மாதத்துக்கு இடைப்பட்ட காலம் கப்பல் பயணம் செய்ய மிகவும் ஆபத்தானது என்று கருத்தப்பட்டது, அதனால் அப்பொழுது மூடிய கடல் என்று அறிவிக்கப்பட்டது, எனினும் கடல் பயணம் செய்ய தடையும் இல்லை. பழங்கால சட்டப்படி பெருங்கடல் வரையரையறுக்கப்படவில்லை[5]. எனினும் மத்திய காலத்திலிருந்து கடல்வழி குடியரசுகளான வேனிசு குடியரசு மற்றும் சனோய குடியரசு மத்தியத்தரைக் கடலில் மூடியகடல் கொள்கைக்கு உரிமை கோரியது. நார்டிக் முடியரசு மற்றும் இங்கிலாந்தும் கூட தங்கள் நெருங்கிய கடல் பகுதிகளில் செல்வழிக் கட்டணம், மீன் பிடிக்கத் ஏகபோக உரிமை மற்றும் வெளிநாட்டு கப்பல்களுக்கு தடை ஆகியவற்றுக்கு உரிமை கோரின.

கண்டுபிடிப்பகளின் காலத்தில் மூடியகடல்

கண்டுபிடிப்பகளின் காலத்தில், 15 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளின் இடையில், கடலோரமாக இருந்த கப்பல் பயணம் பெருங்கடல் பயணமாக மாறியது. ஐபீரியன் தீபகற்பத்திலுள்ள நாடுகள் இந்த செயல்முறையில் முன்னோடிகளாக, கண்டுபிடித்த மற்றும் கண்டுபிடிக்க போகும் நிலங்களின் மீது பிரத்தியேகமான சொத்து மற்றும் முற்றாய்வு உரிமையை வேண்டின. புதிய நிலங்களின் இருப்பு மற்றும் சொத்துக்களின் குவிப்பின் விளைவாக, போச்சுகல் முடியாட்சி மற்றும் ஐக்கிய குடியரசின் காச்டில் மற்றும் அரகாம் ஆகியவை வெளிபடையாக போட்டிப் போட துவங்கின. பகைமையை தவிர்க்கும் பொருட்டு, 1479-இன் அல்ககோவாச் ஒப்பந்தம் மற்றும் 1494-இன் தோர்டிசிலா ஒப்பந்தங்களை கையெழுத்திட்டனர்.

16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டிகளில் ஸ்பெயின் பசிபிக் பெருங்கடலை மூடிய பெருங்கடலாக கருதின, மற்ற கப்பற்படைகளுக்கு இது மூடிய கடல் ஆகும். பசிபிக் பெருங்கடலின் மேற்கே டச்சுப் படைகள் அச்சிருத்தின.

மேற்கோள்கள்

  1. Robert McKenna, "The Dictionary of Nautical Literacy", p.225 McGraw-Hill Professional, 2003, ISBN 0-07-141950-0
  2. Gabriel Adeleye, Kofi Acquah-Dadzie, Thomas J. Sienkewicz, James T. McDonough, "World dictionary of foreign expressions: a resource for readers and writers", p.240, Bolchazy-Carducci Publishers, 1999, ISBN 0-86516-423-1
  3. The licensing of vessels by the Portuguese was initiated by Prince Henry the Navigator in 1443, after Prince Pedro granted him the monopoly of navigation, war and trade in the lands south of Cape Bojador. Later this law would be enforced by the Bulls Dum Diversas (1452) and Romanus Pontifex (1455), more buls and treaties followed, the most significant being the Treaty of Tordesillas.
  4. Tellegen-Couperus, Olga (1993). Short History of Roman Law, p.32. Routledge. ISBN 0-415-07251-4.
  5. Conrad Gempf, "The Book of Acts in Its Graeco-Roman Setting", p.23, Volume 2, Wm. B. Eerdmans Publishing, 1994, ISBN 0-8028-4847-8
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.