மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி

அகத்தொலைக்காட்சி (மூடிய மின்சுற்று தொலைக்காட்சி) சி.சி.டிவி (CCTV) குறைந்த அளவிலான கணினித்திரைகளைக் கொண்டு, குறிப்பலைகளை வீடியோ கேமிராக்களின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தொடர்புபடுத்துவதாகும்.

கண்காணிப்பு கேமிராக்கள்

இவை தொலைக்காட்சி அலைபரப்பிலிருந்து வெளிப்படையாக அனுப்பப்படுகின்ற குறிப்பலைகளிலிருந்து வேறுபட்டு உள்ளன. இருப்பினும் கம்பியால் இணைக்கப்படாத தொடர்புகளை புள்ளிக்குப்புள்ளி அமர்த்தலாம். வங்கிகள், சூதாட்டரங்கம், விமான நிலையங்கள், இராணுவ பகுதிகள், மற்றும் வசதியான கடைகள் போன்ற கண்காணிப்பு தேவையான பகுதிகள் சி.சி.டிவிகள் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளை பொருத்தவரை மையக் கட்டுபாட்டு அறையிலிருந்து வேலை செய்யும் பகுதிகளை கண்காணிக்க சி.சி.டிவி கருவிகள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனிதருக்கு எற்பில்லாத இடங்களில் உபயோகிப்பது. சி.சி.டிவி அமைப்புகள் தொடர்ச்சியாக இயங்கக் கூடிய அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் கண்காணிக்க பயன்படுகிறது. சி.சி.டிவியின் மேம்பட்ட வடிவமான டிஜிட்டல் வீடியோ பதிவிகள் (DVRகள்) மூலம், பதிவுகளை பல ஆண்டுகளுக்கு பதிவு செய்யவும், தரமான மற்றும் செயல்திறனுள்ள வகையிலும் மற்றும் புதிய சிறப்புக்கூறுகளுடனும் (இயக்கம்-கண்டறிவது மற்றும் மின்னஞ்சல் அறிவிப்பு) கிடைக்கிறது.

அகத்தொலைக்காட்சியின் மூலம் பொது மக்கள் கண்காணிப்பு இங்கிலாந்தில் பொதுவான ஒன்று, உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு மனிதருக்குப் பல கேமிராக்கள் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.[1] அங்கும், இங்கும் மற்றும் எங்கும் என்று அதிகமாக உபயோகிக்கப்படுவதால் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை இடையே வேறுபட்ட விவாதங்கள் தோன்றுகின்றன.

வரலாறு

சி.சி.டிவி கேமிராக்கள் மூலம் வளாகம் கண்காணிக்கப்படுகிறது என்பதை விளக்கும் பலகை

V-2 ஏவுகணை தொடக்கத்தைக் கண்காணிக்க ஜெர்மனியின் பினிமுண்டேவில் உள்ள டெஸ்ட் ஸ்டாண்டு VIIயின் சைமன்ஸ் AG யில் முதல் சி.சி.டிவி அமைப்பானது 1942 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2] ஜெர்மன் பொறியாளர் வால்டர் புருச் அமைப்பின் திட்டம் மற்றும் பொருத்துதலுக்கு முக்கிய காரணமாவார்.

அகத்தொலைக்காட்சி பதிவு அமைப்புகள் தற்போதும் ஏவுகணைகள் தொடங்கும் போது ஏற்படும் பிழைகளை[3][4] கண்டறிய உபயோகிக்கப்படுகின்றன. பெரிய ஏவுகணைகளில் சி.சி.டிவி அமைப்புகள் இணைக்கப்பட்டு ரேடியோ தொடர்பு மூலம் படங்களை மீண்டும் பூமிக்கு அனுப்பப் பயன்படுகிறது.[5]

வியாபாரத் தெருக்களில் ஏற்படும் வன்முறைக் குற்றங்களைத் தீர்க்க 1968 ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஒலனில் முதன் முதலில் வீடியோ கேமிரா நிறுவப்பட்டது. ஒலன் காவல்துறையில் மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி படங்கங்களுடன் இணைக்கப்பட்ட படங்கள் குற்றங்களுக்கு எதிரான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்தது.

பின்னாளில் குற்ற நடவடிக்கைகளின் ஆதாரமாகப் பதியப்பட்ட பதிவைக் காட்டவும், வங்கிகள் மற்றும் கடைகளில் திருடர்களை பயமுறுத்தவும் சி.சி.டிவிகள் பொதுவாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் பயன்பாடானது அதனை மிகவும் பிரபலப்படுத்தியது. இங்கிலாந்தில் முதன் முதலாக சி.சி.டிவி உபயோகப்படுத்தப்பட்ட பகுதியாக கிங்ஸ் லைனின் நார்ஃபோல்க் இருந்தது.[6]

1990கள் மற்றும் 2000களில் பொதுக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நேரங்களில், பொது இட கண்காணிப்புக் கேமிராக்கள் இங்கிலாந்தைப் போன்று சில நாடுகளில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பயன்பாடுகள்

இங்கிலாந்தில் குற்றத் தடுப்பு மற்றும் குற்றப் பரவல்

அரசாங்கத்தை தவிர்த்த மக்கள் அதிகம் வரும் இடங்களான, வங்கிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஜானட் சி.சி.டிவி உருவாக்கப்பட்டது. 1970கள் மற்றும் 1980களில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட சோதனைகளின் படி சி.சி.டிவி கேமிரா பதிவுகள் (1985 ஆம் ஆண்டில் ஃபோர்ன்மவுத் வெளிப்புற சி.சி.டிவிகள் உட்பட), அந்தக் காலகட்டத்தி நிகழ்ந்த பெரிய நிகழ்ச்சிகளுக்கு தீர்ப்பு வழங்கக் காரணமானது.[6]

1994 ஆம் ஆண்டில் ஹோம் ஆபீஸ் வெளியிட்ட "சி.சி.டிவி: லுக்கிங் அவுட் ஃபார் யூ"என்ற அரசாங்க அறிக்கையானது, அகத்தொலைக்காட்சி அமைப்புகள் அதிகமாக நிறுவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கருதப்படுகின்றது. இன்று, இந்த சி.சி.டிவி அமைப்பானது பல நகரங்கள் மற்றும் நகர மையங்கள், பல முனையங்கள், கார் நிறுத்துமிடங்கள் மற்றும் பண்ணைத் தோட்டங்கள் போன்றவற்றில் கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

தற்போது இங்கிலாந்தில் உள்ள சி.சி.டிவி கேமிராக்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் 2002 ஆம் ஆண்டில் அர்பன்ஐயை [7] சேர்ந்த, மைக்கேல் மெக்கஹில் மற்றும் நோரிஸ் பட்நே ஆகிய பெரிய தெருக்களில் நடத்திய சிறிய முன்னோடி ஆய்வில், லண்டனில் தனியார் இடங்களில் ஏறத்தாழ 500,000 கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளதாகவும், இங்கிலாந்தில் உள்ள மொத்த கேமிராக்களின் எண்ணிக்கை சுமார் 4,200,000 என்றும் கணக்கிட்டனர். ஸ்காட்டிஷ் குற்றம் மற்றும் நீதி ஆய்வுகள் துறையின் சார்பில் ஸ்காட்டிஷ் உள்ளூர் அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, ஸ்காட்லாந்தில் 2,200 சி.சி.டிவி கேமிராக்கள் பொது இடங்களில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.[8]

இந்தக் கணக்கீட்டின் படி இங்கிலாந்தில் ஒவ்வொரு 14 பேருக்கும் ஒரு கேமிரா உள்ளது. ஆனால் இந்த முறைக்கு பின்னால் உள்ள செய்முறையானது ஐயத்திற்கிடமான கருத்துக்களைப் பிரதிபலிக்கிறது.[9] நகரின் மையப்பகுதிகள், நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கியமான வர்த்தக இடங்கள் என 1.5 மில்லியன் சி.சி.டிவிகள் உள்ளதாக சி.சி.டிவி உபயோகிப்பவரின் குழு கணக்கிட்டுள்ளது. உள்ளூர் மூலைக் கடைகளில் (Corner Shops) காணப்படும் சிறிய கண்காணிப்பு அமைப்புகளை இந்த ஆய்வின் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.[10]

அகத்தொலைக்காட்சிகள் குற்றங்களை பின்னடையச் செய்கிறது என்பதற்குச் சிறு ஆதாரம் இருந்தாலும், குற்றங்களைப் பின்னடையச் செய்வது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத் தக்க ஆதாரங்கள் உள்ளன.[11] முற்போக்கு ஜனநாயக அறிக்கையின் படி, லண்டனிலுள்ள காவலர்கள் அந்த பகுதிகளில் உள்ள பல நூறு கேமிராக்களின் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடிக்கிறார்களே தவிர, அவர்களாக முயன்று பிடிப்பதில்லை."[12] 2008 ஆம் ஆண்டில் இங்கிலாந்து காவல் உயர் அதிகாரிகள் அறிக்கையில் சி.சி.டிவியின் உதவியுடன் 3% குற்றங்கள் மட்டுமே தீர்க்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.[13] லண்டன் பெருநகர காவல் துறையின் 2008 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 1000 கேமிராக்களைக் கொண்டு ஒரே ஒரு குற்றம் மட்டுமே தீர்க்கப்படுகிறது.[14] சி.சி.டிவிகளை விரிவான பாதுகாப்பு திட்டமாக உபயோகிப்பதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய பல காரணங்கள் இருந்தாலும், குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது அவற்றின் சிறப்புகளில் ஒரு பகுதியாக இல்லை.

ஓட்டுனருக்கு எதிராக நிகழும் வன்முறைகளைக் குறைக்க வாடகை உந்து வண்டிகள்[15][16] மற்றும் காவல் கண்காணிப்பு உந்து வண்டிகளிலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.[17] சில நேரங்களில் தாக்குபவரின் குறிக்கோள் சி.சி.டிவியின் மேல் இருக்கலாம்.[18] பேசும் சி.சி.டிவி கேமிராக்களை மிடில்ஸ்ஃபோரோ மன்றம் தங்களது ஓய்வில்லாத நகர-மையங்களில் தற்போது நிறுவியுள்ளது.[19] வில்ட்ஷைரில் உள்ள அமைப்பில் சி.சி.டிவி இயக்குனர்கள் தாங்கள் கண்டறியும் குற்றவாளியுடன் நேரடியாக பேசும் வகையில் உள்ளது.[20]

2005 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று ஜீன் சார்லஸ் டி மெனிசெஸ் என்பவர் ஸ்டாக்வெல் டியூப் காவல்நிலையத்தில் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாநகரக் காவல் துறை தவறாக ஒரு அப்பாவி மனிதரை சுட்டுக் கொன்றுவிட்டதாக சி.சி.டிவி பதிவுகள் துறைக்கு எதிராக உரிமைக்கோரிக்கை செய்யக் காரணமாக இருந்தது.[21]

முந்தைய நாட்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சி.சி.டிவியின் சில பகுதிகள் நீக்கப்பட்டு இருந்தன, ஆனால் இவை நடைமுறைக்கு சார்ந்தது இல்லை.[22] DVR தொழில்நுட்பத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் தற்போதைய அமைப்புகள் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற விளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.[23]

NEP ஒலிபரப்பின் ஒரு பிரிவான NEP- ரோல் டு ரெக்கார்ட் மூலம் இங்கிலாந்தில் உள்ள கேமிராக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப் படுகின்றன.[24]

இங்கிலாந்தில், அகத்தொலைக்காட்சிகள் சமூக-எதிர்ப்பு நடத்தைகளைக் குறிவைத்தும் உபயோகிக்கப்படுகின்றன. சில பகுதிகளில், உள்ளூர் சி.சி.டிவி இயக்க அலுவலர்கள் காவல் துறையுடன் இணைந்து வேலை செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, நகரின் மையங்களில் ஏற்படும் குடிபோதை சார்ந்த சமூக-எதிர்ப்பு நடத்தைகள் அல்லது பண்ணை வீடுகளில் நடைபெறும் இளைஞர்-சார்ந்த சமூக-எதிர்ப்பு நடத்தைகள்.

2009 ஆம் ஆண்டு அக்டோபரில், "இண்டர்நெட் ஐஸ்" என்ற வலைத்தள அமைப்பு பொது மக்களுக்கு வீட்டிலிருந்தே சி.சி.டிவி கேமிரா படங்களை பார்த்தாலோ அல்லது அவர்கள் கண்ட குற்றங்களைப் பற்றிய அறிக்கை அளித்தாலோ அவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக அறிவித்தது. குறைந்த அளவு கண்காணிக்கப்படும் கேமிராக்களை "அதிக கண்கள்" மூலம் காண வைக்க இந்த தளம் முயற்சி செய்தது. ஆனால் உரிமைச்சாசனம் சார்ந்த இயக்கத்தினர் " இது நலமற்ற மற்றும் வருந்ததக்க முன்னேற்றம்" என்று குற்றம் சாட்டினர்.[25]

வெட்டுதல் மற்றும் நிகழ்படக் கலை

வீடியோ ஸ்னிஃப்பிங்[26][27] முறையில் கொரில்லா மற்றும் கொந்தர் கலைஞர்கள் வீடியோ அமைப்புகளை காயப்படுத்தும் வகையில் தங்களது பதிவுகள் மற்றும் சொந்த வீடியோகள் மற்றும் அடியளவு வீடியோக்களை கலையாற்றல் காரணங்களுக்காக பயன்படுத்தினர்.

தொழிலக செயல்முறைகள்

மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய தொழிலகச் செயல்முறைகளை சி.சி.டிவியின் மூலம் கண்காணிக்கலாம். சி.சி.டிவிகள் பெரும்பாலும் இரசாயன தொழிற்சாலைகளில், அணு உலை அல்லது அணுஎரிபொருள் தயாரிக்கும் வசதிகளை செயல்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது. வெப்பமாற்ற கேமிரா உதவியைக் கொண்டு செயல்முறைகளின் வெப்பத்தை இயக்குபவர் கணக்கிடலாம். சி.சி.டிவிகளை இந்த முறையில் உபயோகப்படுத்த சில சட்டங்கள் தேவைப்படுகிறது.

போக்குவரத்துக் கண்காணிப்பு

மூடிய-மின்சுற்று தொலைக்காட்சிகளின் மூலம் நகரங்கள் மற்றும் மோட்டார்வழிச் சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் நெரிசல்களைக் கண்டறிய விரிவான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன. இந்த கேமிராக்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு தகவல்களை GPS அமைப்புகளுக்கு அனுப்புகிறது.

இங்கிலாந்து பெருவழி முகமையானது 1200 கேமிராக்களை சி.சி.டிவி அமைப்புகளில் அமைத்து இங்கிலீஷ் மோட்டார்வழி மற்றும் பெருவழி சாலைகளைப் பொதுவாக நிர்வகிக்கிறது. இந்த கேமிராக்கள் பெரும்பாலும் போக்குவரத்து நிலைமைகளை கண்காணிக்க உபயோகப்படுகின்றன வேகத்தை கண்காணிக்கும் கேமிராக்களாக உபயோகிப்பது இல்லை. இயக்கத்திலுள்ள போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளுக்கான நிரந்தர கேமிராக்களுடன் பெருவழி முகமைகள் சி.சி.டிவி அமைப்புகளை வரும் ஆண்டுகளில் அதிகப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

லண்டன் நெரிசல் அதிகாரப் பகிர்வு எல்லைகளில் அமைக்கப்படுள்ள கேமிராக்கள் மூலம் அமல்படுத்தப்பட்டு நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ளே வரும் சீருந்துகளின் பதிவு பலகையில் உள்ள எண்களை தானாக பதிவு செய்கிறது. ஒட்டுனர் தகுந்த பதிவை செய்யவில்லை என்றால் அபராதம் சுமத்தப்படும். இந்த அமைப்புகளானவை திருடப்படுவதாகக் கூறப்படுகின்ற சீருந்துகளைக் கண்டறியும் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.

போக்குவரத்து பாதுகாப்பு

போக்குவரத்திற்கான டிஜிட்டல் வீடியோ பதிவு

இயந்திர இயக்குபவரால் நேரடியாகக் கண்காணிக்க இயலாத இடங்களில் எதிர்பாராமல் இயக்கப்படும் இயந்திர இயக்கத்தினால் காயமடையும் மக்களைக் கண்டறிய சி.சி.டிவி அமைப்புகளை நிறுவலாம். எடுத்துக்காட்டாக, சுரங்கவழி தொடர்வண்டியில், கதவுகளை மூடும் போது கதவருகில் யாரும் இல்லை என்பதைக் காணவும், வண்டியை இயக்கவும் இயக்குபவருக்கு சி.சி.டிவி கேமிராக்கள் உதவுகின்றன.

கேளிக்கை பூங்காக்களில் சவாரிகளை இயக்குபவர்கள், சவாரிகளை ஆரம்பிக்கும் போது மக்களுக்கு ஏதேனும் இடர்கள் உண்டாகிறதா என்பதை கண்காணிக்க சி.சி.டிவி அமைப்புகளை நிறுவலாம். சி.சி.டிவி கேமிரா மற்றும் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்புகள் மூலம் தெளிவாக இல்லாத பொருட்கள் மற்றும் மக்களைக் கண்டறிந்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்ட ஒட்டுனருக்குத் துணை புரிகிறது.

இங்கிலாந்திற்கு வெளியே

பொதுவாக நிகழும் கடுமையான எதிர்ப்புகளால் சி.சி.டிவிகளின் உபயோகம் அமெரிக்காவில் குறைவாக உள்ளது. நியூயார்க் நகரத்தில் 1998 ஆம் ஆண்டில் 3,000 சி.சி.டிவி அமைப்புகள் கண்டறியப்பட்டன.[28] சிக்காகோவில் 2,200 சி.சி.டிவி அமைப்புகள் உள்ளன.[29]

கடந்த சில வருடங்களாக, அமெரிக்காவில் பாதுகாப்புக் கேமிராக்களைப் பொருத்தும் மக்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் (IP அமைப்புகளின் முன்னோடி) கூட்டணியுடன் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் ஜோன் டெக் சிஸ்டம்ஸ் க்ளோபல் செக்ரியூட்டி சொல்யூசன்ஸ் உதவியுடன் முதல் IP கண்காணிப்பைப் பொருத்தப் போவதாக அறிவித்தது. இன்றைய சி.சி.டிவி சந்தையானது IP-சார்ந்த பாதுகாப்புத் தயாரிப்புகள் மற்றும் அமைப்புகளுக்கு மாறியுள்ளது. மேலும் மின்னணுவியல் என்பது பாதுகாப்புத் துறையை முற்றிலும் சீர்குலைக்கும் தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கும் துறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[30]

உடைமைகள் சார்ந்த குற்றங்கள் அதிகரிப்பு காரணமாக லத்தின் அமெரிக்காவில் சி.சி.டிவி சந்தையானது அதிவேகமாக வளர்கிறது.[31]

குற்றம் தொடர்புடைய பயன்

கண்காணிப்பு கேமிராக்களை குற்றவாளிகளும் உபயோகப்படுத்தலாம், எடுத்துக்காட்டாக ATM செண்டர்களில் உள்ள மறைவு கேமிராக்கள் மூலமாக மக்களின் PINகளை அவர்களுக்கு தெரியாமல் கைப்பற்றலாம். இந்த கருவிகள் சிறியதாக கண்களுக்கு தெரியாமல் இருந்தாலும், மக்கள் PINகளை செலுத்தும் போது எந்திரங்களின் அழுத்துப்பலகையில் உள்ள எண்களை எளிதாகக் கணடறியலாம். படங்கள் கம்பியால் இணைக்கப்படாமல் குற்றவாளிகளுக்குச் செலுத்தப்படலாம்.[32]

தனியுரிமை

கண்காணிப்பு அறை
சந்தை வீதியை கண்காணிக்கும் நடமாடும் மூடிய-மின்சுற்று டிவி கூடுகொண்ட வண்டி

கண்காணிப்பில் இருக்கும் போது மக்களின் தனியுரிமை இழப்பதாகவும், உரிமையியல் விடுதலையில் எதிர்மறை விளைவுகளை கண்காணிப்புகள் ஏற்படுத்துவதாகவும், சி.சி.டிவிகளை எதிர்ப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் குற்றங்களைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகமாக்குகிறது என்ற வாதமும் ஏற்படுகிறது. "பிக் ஃபிரதர் சர்வீலன்ஸ்", ஜார்ஜ் ஓர்வெலின் நைண்டின்-எய்ட்டிஃபோர் நாவலில், ஒவ்வொரு வீடுகளிலும் கேளிக்கைகளில் மக்களை கண்காணிப்பதை விட இரட்டை வழி தொலைதிரையில் கண்காணிக்கின்றனர் என்று சி.சி.டிவி திறனாய்வாளர் கருத்து கூறுகின்றனர்.

கேமிராக்கள் மக்களின் தனியுரிமையை பாதிப்பது இல்லை என்றும், மக்கள் தனியாக கண்காணிக்கப்படவில்லை என்றும், பொது இடங்களில் மக்களின் தனியுரிமையானது களங்கமில்லாத மக்களின் பாதுகாப்பை விட உயர்ந்தது அல்ல என்றும் சி.சி.டிவியின் நேர்நிலைப் பார்வை கருத்துகள் மூலம் விவாதிக்கப்பட்டன.[33]

வீட்டுப் பகுதிகளில் சி.சி.டிவியின் தற்போதைய வளர்ச்சியானது குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதைக் காட்டிலும் சமூக கட்டுபாட்டை அளவிடுவதற்கு பயன்படுவதாகக் கருதப்படுகிறது. எனினும், 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த நிகழ்வுக்குப் பிறகு, சி.சி.டிவிகளின் தேவையைப் பற்றிய பொதுக் கருத்து அவைகளுக்கு சாதகமாக உள்ளது. லண்டனில் பூமிக்கு அடியில் வெடிகுண்டு நிகழ்வுக்குப் பிறகு நடத்தப்பட்ட விசாரணைக்குக் காரணமாக அமைந்த சி.சி.டிவி பொருத்திய இடங்களை ஒரு சான்றாக சி.சி.டிவி ஆதரவாளர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்ட நிகழ்வுக்குக் காரணமாகக் கூறுகின்றனர்.

அரசு அனுமதி பெற்று பயன்படுத்துதல் (அல்லது தவறாகப் பயன்படுத்துதல்) என்ற நிலையிலிருந்து சி.சி.டிவி பதிவுகள் தவறான செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. சி.சி.டிவி பதிவுகளின் உபயோகத்தை முறையாக தடை செய்யவும், சி.சி.டிவி உபயோகிப்பவர்கள் கண்டிப்பாக தகவல் பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்றவை இங்கிலாந்தின் தகவல் பாதுகாப்பு சட்டம் 1998 ஆம் ஆண்டில் உள்ளன. 2004 ஆம் ஆண்டில், தகவல் பாதுகாப்பு துறையின் பின்னோடியான தகவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து சி.சி.டிவி அமைப்புகளும் ஆணையருடன் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கு முந்தைய பழைய பதிவுகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்றும் விளக்கியது.

மேற்கூறிய விதிகளின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பை பின்வரும் விதிகள் (டுரண்ட் vs. FSA) குறைத்து விடுகின்றன, தற்போது உள்ள அனைத்து சி.சி.டிவி அமைப்புகள் முறையானவை அல்ல.[34] இங்கிலாந்தில் தனியார் துறையில் சி.சி.டிவி அமைப்புகளை இயக்குபவர்கள் அல்லது கண்காணிப்பவர் தற்போது பாதுகாவலர் என்றும் நகர உரிமம் பெற வேண்டும் என்றும் கருதப்படுகின்றனர்.

கண்காணிப்பு உபகரணங்களின் உபயோகத்தினால் தங்களது உரிமையியல் சுதந்திரத்தில் ஏற்படும் அத்துமீறல் தொய்வுகளை அதிகமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் தகவல் ஆணையர் அலுவலகம் பொதுமக்களுக்கு வலியுறுத்தியது. ஒரு வருடத்திற்கு முன்பு தகவல் ஆணையர் ரிச்சர்ட் தாமஸ் பிரிட்டன் அதன் கண்காணிப்பு சார்ந்த சமூகத்தில் தூக்கத்தில் நடப்பதாக கூறினார்.

இங்கிலாந்தில் அதிகமான சி.சி.டிவி கேமிராக்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகவும் தனியுரிமை விதிகளை அத்துமீறுவதாகவும் 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வாட்ச்டாக் கேமிராவாட்ச் குறை கூறியது. தகவல் ஆணையர் அலுவலகம் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து, மேலும் தகவல் பாதுகாப்பை மீறுவதாக கூறப்பட்டால் உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் பதிலளித்தது.[35]

அமெரிக்காவில் இதுபோன்ற தகவல் பாதுகாப்பு வழிமுறைகள் இல்லை. தேவையில்லாத தேடல்கள் மற்றும் பிடிப்புகளை குறைப்பதினால் சி.சி.டிவி ஆதாரங்கள் நான்காவது சட்டத் திருத்தின் படி ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நீதிமன்றங்கள் இவற்றை பார்வைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

கனடாவில் வீடியோ கண்காணிப்பின் பயன்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஓண்ட்ரியோவில் நகராட்சிக்குரிய மற்றும் மாநிலத்திற்குரிய பகுதிகளில் தனியுரிமை சட்டத்தின் தகவல் மற்றும் பாதுகாப்பு சுதந்திரங்களின்[36] படி எவ்வாறு படங்கள் மற்றும் தகவல்கள் வெளிவிட வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறைகள் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளன.

தொழில் நுட்பவியல் முன்னேற்றங்கள்

மழை நேரங்களில் படங்களை தெளிவாக காட்டும் லண்டன் (ஹீத்ரோ) விமான நிலையத்தில் உள்ள துடைப்பானுடன் கூடிய கண்காணிப்பு கேமிரா
லீட்ஸ் எலாண்ட் ரோட்டில் உள்ள கால் பந்து விளையாட்டு மைதானத்தில் வெஸ்ட் யார்க்சையர் போலீஸால் இயக்கப்படும் சி.சி.டிவி கண்காணிப்பு நிலையம்.

கணினிவழி நெறிப்படுத்தல்

பொது இடங்களில் முதன் முதலில் உபயோகப்படுத்தப்பட்ட மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி கேமிராக்கள் தெளிவற்ற, கண்ணில் தெரிகின்ற, கறுப்பு மற்றும் வெள்ளை குறைந்த அமைப்புகளாகவும் பெருக்கம் மற்றும் சிறுக்கம் செய்ய இயலாத அளவிலும் இருந்தன. தற்போதைய சி.சி.டிவி கேமிராக்கள் சிறிய வரையறை கொண்ட வண்ண கேமிராக்களுடன் ஒரு நிமிட நிகழ்வுகளை உறுதி செய்வதற்கு மட்டும் அல்லாமல், கணினிகளுடன் கேமிராக்களை இணைப்பதற்கும், பொருள்களை தனி-பகுதிகளாக காட்டவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறைகளை நிறைவேற்றும் தொழில்நுட்பம் பெரும்பாலும் VCA என்று கூறப்படுகிறது (வீடியோ உள்ளடக்க பகுப்பாய்வு) மேலும் இந்த தொழில்நுட்பத்தை தற்போது உலகில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த தொழில்நுட்பம் நகரும் பொருளானது நடக்கும் மனிதனா, தவழும் மனிதனா அல்லது வாகனமா என்பதை அறிவதற்கு அமைப்புகளுக்கு உதவுகிறது. பொருளின் வண்ணத்தையும் இவை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதனின் படத்தைக் கொண்டு அவருடைய வயதைக் கண்டறியும் அமைப்புகளை NEC உரிமையாக்கியுள்ளது. மற்ற தொழில்நுட்பங்கள் மக்களின் மரபணுவைக் கொண்டு கண்டறியும் முறையை பெற்றுள்ளன.

இந்த அமைப்புகளில் உள்ள சிக்கல் என்னவென்றால், இவை "அதிகம்விற்கப்பட்டவை", தொழில்நுட்பங்களின் மீதுள்ள நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு மோசமாக இயங்ககூடிய இந்த அமைப்புகள் அதிகம் விற்கப்பட்டுள்ளன என்று பொருள். இந்த தொழில்நுட்பங்கள் அதிகமான கூட்டங்களில் சிறப்பாக வேலை செயவது இல்லை, விமான நிலையங்களில் பயணப்பெட்டிகளை கண்டறிய அதிகம் விற்கப்பட்டதனால் விமான நிலையங்களில் பயணப்பெட்டியின் ஒரு பகுதியை சோதனையிடாமல் இருந்தால் வரும் சிக்கல்களை தீர்மானிப்பது இல்லை.

மனிதர்களை அடையாளம் காணவும், எவ்வாறு அவன் செல்கின்றான் அவன் மனிதன் தானா அல்லது சிற்றுந்து நிகழ்வா என்பதை கண்டறிய இந்த அமைப்புகளினால் முடியும். கேமிரா மூலம் படம் எடுப்பதிலிருந்து தடை செய்வதால் வரும் தெளிவற்ற முகங்கள் அல்லது "மாய சுவர்களை" இந்த தகவல்களைக் கொண்டு அமைப்பு உருவாக்குநர்கள் நிறைவேற்ற முடியும். இந்த அமைப்புகளை சில விதிமுறைகளுடன் அமைக்க முடியும் எடுத்துக்காட்டாக "ஒரு மனிதன் பாதுகாப்பு வேலியை நெருங்கும் போது ஒலி எழுப்பும் படியும்" அல்லது அருங்காட்சியகத்தில் "சுவற்றிலிருந்து ஒரு ஓவியத்தை எடுத்தால் எச்சரிக்கை செய்யும் வண்ணமும்" அமைக்க இயலும்.

VCA வின் மூலம் எடுக்கப்பட்ட படங்களை தடயவியலுக்கும் உபயோகப்படுத்த முடியும். பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் மூலம் குறிப்பிட்ட தேடல் செயல்களை ச்செய்ய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு குற்றவாளி மஞ்சள் நிற சிற்றுந்தில் பயணித்தால், இந்த அமைப்பில் மஞ்சள் நிற சிற்றுந்தை தேடுமாறு நிறுவினால் இந்த அமைப்பானது எங்கே எல்லாம் மஞ்சள் நிற சிற்றுந்து காணப்படுகிறதோ அங்கு எல்லாம் ஒரு பட்டியலை அளிக்கும். இந்த நிபந்தனைகள் துல்லியமான தேடலுக்கு வழிவகுக்கும் "ஒரு மனிதன் ஒரே இடத்தில் தேவையில்லாமல் அதிக நேரம் சுற்றினால்", எடுத்துக்காட்டாக ATM இயந்திரத்தை உபயோகிக்காமால் ஒருவர் அதை சுற்றி நின்று கொண்டிருத்தல்.

குற்றம் நிகழ்ந்த பிறகு தடயவியல் சோதனை தேவைப்பட்டால் சி.சி.டிவி அமைப்புகளை பராமரிப்பது முக்கியமாகும்.

கூட்டங்களில் இந்த அமைப்புகள் முரண்பாடு நிகழ்வுகளை அறிவதில் வரம்புக்குட்பட்டது, ஒரு மனிதன் கூட்டத்தில் எதிர் திசையில் நகரும் போது, விமான நிலையங்களில் விமானத்திலிருந்து வரும் பயணிகள் ஒரே திசையில் நடக்க வேண்டி இருக்கும், அல்லது சுரங்கப்பாதையில் நுழைவு இடங்களில் வெளியேற மக்களை அனுமதிக்காத போது.

படங்களிலிருந்து மக்களின் நிலைகளைக் கணக்கிட்டு வரைபடங்களில் மக்களின் நிலைகளை காட்டும் முறை VCAவில் உள்ளது. இவைகளின் மூலம் பல கேமிராக்களை இணைத்து கட்டிடம் முழுவதும் உள்ள மக்களை கண்டறிய இயலும், பல மணி நேரப் படங்களில் கேமிராக்களுக்கு இடையே செல்லும் மனிதனை கண்டறிய தடயவியல் துறைக்கு இந்த முறை பயன்படுகிறது. தற்போதைய நிலைகளில் தனிநபரை கண்டறிவதில் கேமிராக்கள் சிறப்பாக செயல்படுவதில்லை, உள்ளீட்டு அட்டைகள் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அவற்றின் மூலம் நபரின் அடையாளங்களை கண்டறியலாம் மற்றும் எஸ்.எஸ்.என்.ஆர் (ssnr) அமைப்பின் மேல் படப்பிடிப்பு பொருளானது இருக்க வேண்டும்.

VCA தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படும் இடங்களில் தகவலானது ஒரே கேமிரா மூலம் இயக்கப்படுகிறதா அல்லது மையப்படுத்தப்பட்ட சர்வர் மூலம் இயக்கப்படுகிறதா என்ற வேறுபாடுகளும் உள்ளன. இரண்டு தொழில்நுட்பங்களும் அவைகளுக்கான முன்பின் விளைவுகளைக் கொண்டுள்ளன.

தானியக்க எண்பலகை அறிந்து கொள்ளலின் விரிவாக்கம் மக்கள் மற்றும் குழுக்களின் தகவல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஆற்றல் மிக்க ஆதாரமாக உள்ளது.

மெக்டோனல்ட்ஸ் ஹைவே டிரைவ்-இன் வெளியே உள்ள கண்காணிப்பு கேமிரா

தனி நபர் நடமாட்டங்களை தொடரும் கேமிராக்களின் வலையமைப்பை தடுக்கும் தொழில்நுட்ப குறைபாடுகள் இல்லை. எண்பலகை அடையாளத்தில் தவறாக எடுக்கப்படும் எண்களின் அறிக்கைகள் தவறான மனிதர்களைப் பற்றிய தகவல்களை பட்டியலிட காரணமாகிறது.[37] இங்கிலாந்தில், சிற்றூந்துகளின் அமைப்பை மாற்றுவது, எண்பலகைகளை மாற்றுவது அல்லது உருக்குலைப்பது குற்றமாகும், வண்டிக்கொட்டகையிலிருந்து பெட்ரோல் திருடுவது மற்றும் தீயன செய்பவர்கள் வேகம் அல்லது நெருக்கடிக்காக அபராதம் விதிக்க முயற்சிப்பர்.

அதிக-வரையறை கொண்ட சி.சி.டிவி படங்களிலிருந்து முகங்களை கண்டறிவது இந்த தொழில்நுட்பத்தின் குழப்பமான நீட்டிப்பாக சி.சி.டிவி திறனாய்வாளர்கள் பார்கின்றனர். அடையாளம் கண்டறியப்பட்டு முடிவு செய்யப்பட்ட நிலையில் எந்த வித மாற்றமும் இல்லாத மனிதரின் அடையாளங்களை கண்டறியவதை இந்த முறை தீர்மானிக்கிறது. ஒரு நொடியில் தரவுதளத்தில் உள்ள ஆயிரக்கணகான முகங்களை இந்த அமைப்பால் சரிபார்க்க இயலும்.

சி.சி.டிவி மற்றும் முகம் சார்ந்த அங்கீகரித்தல் முறையானது பரவலான கண்காணிப்பு வடிவ உருவாக்கத்திற்கு காரணமானது, முகம் சார்ந்த அங்கீகரித்தல் தொழில்நுட்பத்தின் குறைந்த பாகுபாடு சக்தி மற்றும் அதிகமான பொய் நிலை உருவங்களை உருவாக்குவதினாலும் திறமையற்றதாக உள்ளது. இந்த வகை அமைப்புகளானது விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் வரும் சந்தேகத்திற்குரிய தீவரவாதிகள் அல்லது எதிர்பாராமல் புதிதாக வருபவர்களின் முகங்களை ஒப்பிட உருவாக்கப்பட்டதாகும்.

உயரமான ஸ்டீல் கம்பத்திலிருந்து ஐ-இன்-தி-ஸ்கை கண்காணிப்பு காமிராவின் பார்வை.

சி.சி.டிவி படங்களின் கணினி வழி கண்காணிப்பு தற்போது உருவாக்கத்தில் உள்ளது, இதன் மூலம் சி.சி.டிவிகளை இயக்கும் மனிதர்கள் எல்லா திரைகளையும் முடிவில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை, இந்த அமைப்பின் மூலம் இயக்குபவர் பல சி.சி.டிவி கேமிராக்களை கண்காணிக்க அனுமதிக்கிறது. இந்த அமைப்புகள் மக்களை நேரடியாக கண்காணிப்பதில்லை. குறிப்பிட்ட வகையில் ஆடை அணிந்துள்ள அல்லது பொருட்களை வைத்துள்ள, குறிப்பிட்ட உடல் இயக்க அமைப்புகளைக் கொண்ட மக்களின் நடத்தைகளை கண்காணிக்கிறது.

முன்னறிந்து கொள்ளக் கூடிய வழிகளில் பொது இடங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவது இந்த அமைப்புகளின் கோட்பாடாகும். 'கூட்டத்தின்' ஒரு பகுதியாக இல்லாத மக்கள் இந்த வழிகளில் நடக்க மாட்டார்கள் எடுத்துக்காட்டு கார் திருடர்கள். கணினி அவர்களின் நடத்தைகளை கண்டறிந்து, இயல்பானவர்களிடம் இருந்து நடவடிக்கைகள் வேறுபட்டு இருந்தால் இயக்குபவர்களை எச்சரிக்கும். 2006 ஆம் ஆண்டின் இறுதியில், சி.சி.டிவிகள் மைக்ரோஃபோனுடன் இணைந்து செயல்படுவது போல் புதிய தொழில்நுட்பத்தை இங்கிலாந்து தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் வாங்கி இந்த தொழில்நுட்பத்திற்கு புத்துயிர் அளித்தது.

ஒரு மனிதர் துப்பாக்கியால் கொடூரமான முறையில் சுடுவதாக கண்டறியப்பட்டால்(எ.கா., சண்டை தூண்டும் வகையில்), கேமிரா தானாக பெரிதாகி அந்த மனிதரை மட்டும் குறிப்பிட்டு கேமிரா இயக்குபவருக்கு எச்சரிக்கை செய்யும். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிகழும் தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை இந்த முறையானது பதிவு மற்றும் ஒட்டுக் கேட்பது என்ற விவாதங்களுக்கு இந்த முறைகள் வழிவகுக்கின்றன (எ.கா., 100 மீட்டர் அல்லது 330 அடி தூரத்திற்கு).

சி.சி.டிவி வைக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் கண்டறியப்பட்ட தனிமனிதரின் இயக்கத்தை இதே மாதிரியான அமைப்பின் மூலம் கண்டறியலாம். அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த செயல்முறைகள் 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு இடத்தின் முப்பரிமாண மாதிரிகள் மூலம், அந்த இடத்தில் நகரும் பொருளின் இயக்கத்தை கண்காணிக்க மற்றும் தொடர, இந்த அமைப்புகளின் மென்பொருள் கருவிகளை கொண்டு உருவாக்கலாம்.

பொது இடங்களில் சி.சி.டிவிகளின் தாக்கம், மக்களின் படங்கள் மற்றும் அடையாளங்களை கணினி தரவு தளத்தில் இணைப்பது போன்ற செயல்கள் உரிமையியல் சார்ந்த சுதந்திரத்தில் அத்துமீறலை உருவாக்குகிறது. இந்த முறையால் ஒருவர் தனியாக பொது இடங்களில் மற்றொருவரை காண இயலாத நிலை அல்லது தனியாக நகரத்தை சுற்றி நடந்து செல்லும் நிலை நிகழாது என்று இந்த அமைப்பைக் கண்டிப்பவர் அஞ்சுகின்றனர். பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் அல்லது கூட்டங்களில் பங்கேற்கும் தலைவர்கள், அவற்றில் பங்கு கொள்பவர்கள், அல்லது தெருக்களில் கண்டனம் செய்பவரிடம் பேசும் நிலைகள் பாதிக்கப்படும்.

நினைவாற்றல், சேமிப்பு மற்றும் பாதுகாத்தல்

சி.சி.டிவி அமைப்புகளின் உருவாக்கத்தில் நீண்ட கால சேமிப்பு மற்றும் சி.சி.டிவி பதிவுகளின் ஆவணக்காப்பு கருத்தில் கொள்ளப்படுகிறது. நாடா போன்ற மறு-உபயோக ஊடகங்களின் மூலம் பதிவு செய்யும் முறையானது குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றப்படுகிறது. தகவலை பாதுகாக்க சட்டப்படியான வரம்புகள் உள்ளன.

பதிவுகள் பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. முதலாவதாக, எந்த காரணத்திற்காக உருவாக்கபடுகிறதோ அதற்காக (எ.கா., வசதிகளை கண்காணிக்க) இரண்டாவதாக, இதற்கு முன்பு நடைபெற்ற செய்கைக்கான ஆதாரமாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு பாதுகாக்கப்பட வேண்டும் (எ.கா., குற்றம் நிகழ்ந்த இரவில் அந்த இடத்தை சுற்றி நகர்ந்த மக்களின் குழு) இறுதியாக, பதிவுகள் வரலாறு சம்பந்தமான, ஆராய்ச்சி அல்லது நீண்ட நாள் தேவைப்படும் தகவல்கள் இருக்கலாம் (எ.கா., தொழில் அல்லது ஒரு சமூகத்தை பற்றி அறிய வைத்து இருக்கும் மாதிரிகள்).

பொதுவாக வீடியோ கேசட் ரெக்கார்டர்ஸ்கு பதிலாக வன் தட்டுகள் பதிவுகளை பதிவு செய்ய உபயோகப்படுகின்றன. சுருக்க விகிதம், ஒரு நிமிடத்திற்கான படங்கள், படங்களின் அளவு மற்றும் மீண்டும் பதிவு செய்யும் வரை இருக்கும் படத்தின் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து டிஜிட்டல் பதிவுகளின் தரமானது இருக்கும். பல வகையான சுருக்க மதிப்பீடுகள் மற்றும் மாறுபடும் சுருக்க விகிதங்களை பல டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்ஸ் உபயோகம் செய்கின்றனர்.

மூடிய-மின்சுற்று டிஜிட்டல் ஒளிப்படக்கலை (CCDP)

சி.சி.டிவி உலகில் முன்னேற்றமாக (2005 ஆம் ஆண்டு அக்டோபரில்) 1600 x 1200 பிக்சல் திறன் கொண்ட படங்களை மெகாபிக்சல் டிஜிட்டல் ஸ்டில் கேமிராக்களின் மூலம் நேரக் குறைபாடு அல்லது இயக்க கண்டறிதல் முறைகளில் உபயோகப்படுத்தியது. வீடியோ கேமிராக்களில் எடுக்கப்பட்ட படங்களை காட்டிலும் டிஜிட்டல் ஸ்டில் கேமிராவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக நுணுக்கங்களுடன் இருந்தன. குறைந்த-விலையுள்ள ஸ்டில் கேமிராக்களும் சி.சி.டிவி களில் உபயோகப்படுத்தப்பட்டன, PCயிலிருந்து கேமிராவை CCDP மென்பொருள் கட்டுப்படுத்தும்.

கேமிராவில் எடுக்கப்பட்ட கேமிரா படங்கள் குறுகிய மணித்துளிகளில் தானாக கணினிக்கு மாற்றப்படும். கணினி வலையமைப்பில் இருக்கும் போது படங்கள் தூரத்திலிருந்து கண்காணிக்கப்படும்.

PIR ஒளிவெள்ளங்கள் உள்ளடக்கிய 1.3மெகாபிக்சல் மற்றும் சிறந்த கேமிராக்கள் தற்போது உள்ளன. கருவியின் பொருந்து துளையில் இணைக்கப்பட்டுள்ள ஃபளாஷ் மெம்மரி கார்டில் படங்களை சேமிக்கிறது. ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால் ஃபளாஷ் கார்டு கணினியில் பார்ப்பதற்காக நீக்கப்படுகிறது. நேரடி பார்வைகளுக்கு இந்த முறைகள் உகந்தவை அல்ல, எனினும் மலிவாக மற்றும் எளிமையாக கிடைக்க கூடிய "இன்ஸ்டால் அண்ட் ஃபர்காட்" அணுகுமுறையை வெளியிடுகிறது.

மூடிய-மின்சுற்று டிஜிட்டல் ஒளிப்படக்கலை (CCDP) பதிவு செய்யப்பட்ட படங்களை படிக்க மற்றும் சேமிக்க சிறந்த முறையாகும், மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி நேரடி கண்காணிப்பு குறிக்கோள்களுக்கு சிறந்தவையாகும்.

IP கேமிராக்கள்

சுலபமாக இணைக்க கூடிய கம்பியில்லா IP கேமிரா

சி.சி.டிவிகளில் வளரக்கூடிய பிரிவாக இணைய நெறிமுறை (internet protocol) கேமிராக்கள் (IP கேமிராஸ்) உள்ளது, இந்த வகைகளின் மூலம் வீட்டு உரிமையாளர் மற்றும் வணிகர்களை கணினி அல்லது 3G தொலைபேசியில் உள்ள இணைய இணைப்பின் மூலம் தங்களது கேமிராக்களை இயக்க முடியும்.[38]

இணைய நெறிமுறை என்பது ஒரு நெறிமுறை தகவலை இணைய நெறிமுறை குழுக்களின் மூலம் பாக்கெட்-ஸ்விச்சுடு வலையமைப்பில் தொடர்புக் கொள்ளப் பயன்படுகிறது, மேலும் TCP/IP என்றும் அழைக்கப்படுகிறது.

ஆற்றல்மிக்க பயன்கள்

பின்வருவன வழக்கமான கேமிராக்களை விட IP கேமிராக்களின் ஆற்றல்மிக்க பயன்பாடுகளாகும்:

  • ஒற்றை வலையமைப்பு கம்பிகளின் வழியாக இரட்டை-வழி ஆடியோ, என்ன பார்க்கிறார்களோ அவற்றுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் (எ.கா., எரிவாயு நிலைய அலுவலகர் முன்செலுத்து குழாயை எவ்வாறு உபயோகிப்பது என்று வாடிக்கையாளருக்கு உதவுதல்)
  • மேலான பட நுணுக்கம்: IP கேமிராக்கள் குறைந்தது 640x480 நுணுக்கங்களுடன் மல்டி-மெகாபிக்சல் நுணுக்கங்கள் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 30 சட்டங்களை கொண்ட HDTV படத் தரங்களை கொண்டவை.
  • நெகிழ்வு தன்மை: IP கேமிராக்கள் IP வலையமைப்பில் எங்கு வேண்டுமானாலும் மாறக் கூடிய இயல்புடையவை (கம்பி இணைப்பு இல்லாமலும்)
  • விரவல் அறிவாற்றல்: பகுப்பாய்வு தீர்வுகளில் வரையறுக்கப்பட்ட அளவுகளுக்காக, வீடியோ கேமிராவுடன் IP கேமிராக்கள் இணைக்கப்படுகின்றன.
  • ஒற்றை வலையமைப்பு கம்பியில் கேமிராவிற்கான PTZ (பான்,டில்ட்,ஜூம்) கட்டளைகளை செலுத்துதல்.
  • குறிமுறையாக்கம் & சான்றளிப்பு: குறிமுறையாக்கம் மற்றும் சான்றளிப்பு முறைகளான WEP, WPA, WPA2, TKIP, AES போன்றவற்றின் மூலம் IP கேமிராக்கள் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்றன.
  • தொலைத் தூர இயக்கத் தன்மை: நேரடி வீடியோக்களை கணினிகள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கேமிராக்களில் மூலம் ஐபோன், ஐபாட் டச் மற்றும் Windows Live Messenger போன்ற மோபைல் கருவிகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் காணலாம்.[39]
  • பெரிய அமைப்புகளுக்கான விலைப் பயன்பாடு 16 கேமிரா அமைப்புகளுக்கு அனலாக் தொழில்நுட்பம் மலிவாகவும், 16 முதல் 32 கேமிராக்கள்,அல்லது 32 கேமிராக்களுக்கு மேல் உள்ளவைகளுக்கு IP-சார்ந்த அமைப்பு விலை-பயனுள்ளதாகவும் இருக்கும்.[40]
  • கம்பியில்லா வலையமைப்பிலும் IP கேமிராக்கள் இயங்க கூடியவை. வழிபடுத்தி மூலம் முதன்மை அமைவடிவங்கள் நிறுவப்பட்டு; IP கேமிராக்கள் கம்பியில்லா வலையமைப்பில்[41] நிறுவப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன இந்த கேமிராக்கள் பாதுகாப்பு படைகளில் வழிநடத்துதல் குறிக்கோளுக்காக பயன்படுகின்றன.
  • PoE - ஈதர்நெட் வழியாக மின்திறன். கூடுதலான மின்திறன் இல்லாமலே நவீன IP கேமிராக்கள் இயங்க கூடியவை. PoE-நெறிமுறைகளின் மூலம் இயங்க கூடியவை PoE-நெறிமுறைகள் ஈதர்நெட்-கம்பிகளின் மூலம் மின்திறன் அளிக்கும்.

ஆற்றல்மிக்க பயன் குறைவுகள்

பின்வருவன மற்ற சி.சி.டிவி கேமிராக்களுடன் ஒப்பிடும் போது IP கேமிராக்களின் ஆற்றல் மிக்க பலவீனங்கள்:

  • ஒரு கேமிராவிற்கான விலை மிகவும் அதிகம், வெப்கேமிராக்கள் உபயோகிக்கும் போது மட்டும் குறைவு.
  • மதிப்பீடுகளில் பற்றாக்குறை. பலதரப்பட்ட IP கேமிராக்கள் வீடியோக்களை பலவகைகளில் குறியீடலாம் அல்லது பலதரப்பட்ட செய்நிரல் இடைமுகங்களை உபயோகிக்கலாம், இந்த நிலையில் கேமிராக்கள் ரெக்கார்டருடன் பொருந்த வேண்டும்.
  • அதிகமான வலையமைப்பு பட்டையகல தேவைகள்: 640x480 பிக்சல் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 10 சட்டங்களைக் கொண்டு MJPEG மாதிரியில் உள்ள சி.சி.டிவி கேமிராவுக்கு 3 Mbit/s தேவைப்படுகிறது.[42]
  • தொழில்நுட்பத் தடை. IP முகவரிகள், DDNS, நெறிமுறை அமைப்புகள் மற்றும் துறை முன்னோக்கிக்கு ஆகியவை IP கேமிராக்களை நிறுவத் தேவைப்படுகிறது, எனவே LAN தொழில்நுட்பம் அல்லது சி.சி.டிவி தொழில்நுட்பம் படித்தவர்களின் உதவி மூலமே IP கேமிராக்களை நிறுவ முடியும்.
  • சி.சி.டிவி அமைப்புகளை விட இணைய அமைப்புகளில் மின்சுற்றுகள் குறைந்த அளவே மூடி இருக்கும். எனவே இந்த அமைப்புகளானது இணையம வழியாக வெட்டுவதல் மற்றும் இழுப்பதற்கு திறந்த இடமாகும் ( வலையத்தில் இழுப்பவர்கள் பார்க்கும் போது பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் அழைக்கப்படும்). சி.சி.டிவி அமைப்புகளின் வசதிகள் உள்ள இடங்களில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பணியாளர்களைப் பற்றி குற்றவாளிகள் எடுக்க இயலும், இதனால் குற்றவாளிச் சட்டங்கள் மற்றும் மீள்தருகை ஆகியவற்றால் IP தொழில்நுட்பங்களின் பரிமாற்ற ஆக்கமாக உள்ளது.

சி.சி.டிவி கேமிராக்களின் வலையமைப்பு

சிக்காகோ நகரத்தில் வீடியோ கண்காணிப்பு அமைப்புகளின் வலையமைப்பானது அரசாங்க முகமைகள் மற்றும் தனியார் துறைகளான நகரப் பேருந்துகள், வணிகங்கள், பொதுப் பள்ளிகள், சுரங்கப்பாதை நிலையங்கள், வீட்டுத் திட்டங்கள் போன்ற சி.சி.டிவி வீடியோ உள்ளீடுகளின் கூட்டாகும். வீட்டு உரிமையாளர்களும் அடியளவுகளை பங்கிட முடியும். 15,000 கேமிராக்களின் வீடியோ உள்ளீடுகளை ஒன்றினைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பானது சிக்காகோவின் அவசரநிலை மேலாண்மை அலுவலகத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது அவசர அழைப்பின் போது: இது அழைப்பவரின் இடத்தை தானாக அறிந்து உடனடியாக ஒரு வீடியோ உள்ளீட்டை அருகில் உள்ள பாதுகாப்பு கேமிரா மூலமாக இயக்குபவருக்கு, உபயோகிப்பவரின் எந்த வித குறுக்கீடும் இல்லாமல் அனுப்புகிறது. இந்த அமைப்பானது மிகுந்த தொலைவில் இருந்தால் நிகழ்-நேர முழுப் பாதுகாப்பில் ஈடுபட்டு, வீடியோ பதிவுகளை பின்னர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஏற்றுக் கொள்ள கூடிய ஆதாரமாக உபயோகிக்க சேமிக்கிறது.[43]

ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள்

ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு பிரிவு.

சி.சி.டிவி அமைப்பு வடிவமைப்புகளின் தற்போதைய உருவாக்கங்களில் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள்.[44] இந்த அமைப்புகளில் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (DVR), வெளியீட்டுத் திரை, மற்றும் அமைப்பின் உள்சேர்ந்த நெட்வொர்க் கார்ட் ஆகியவை சேர்ந்ததாகும். ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் LCD திரைகளைப் போன்றே பார்வைக்கு இருக்கும். இவைகளை திரையாக மட்டும் உபயோகிக்கலாம், எனினும் இவற்றின் அடக்கமான அளவு சி.சி.டிவி உபயோகிப்பவர்களுக்கு கவர்ச்சியாக உள்ளது. அதிக நுணுக்கமான பதிவுகளின் மூலம் 14 நாட்களின் அடியளவு பதிவுகளை ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளில் உபயோகிக்கப்படும் DVRகள் பதிவு செய்யும் திறன் கொண்டவை.

ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளில் USB வெளியீடுகளும் உள்ளன USB திறவுகோள் அல்லது வெளிப்புற வன் தட்டு மூலம் பதிவுகளானது மாற்றப்பட்டு தேவை என்றால் DVDகளில் பதிவு செய்யலாம். குற்றம் நடைபெற்ற பிறகு காவல் விசாரணைகளுக்கு இந்த சி.சி.டிவி பதிவுகளின் நகல் விசாரணையாளர்களிடம் இருக்க வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளில் உள்சேர்ந்த நெட்வொர்க் கார்ட் பயனாளிகளை தானாக இணையத்தில் இணைத்து அவர்களுடைய கேமிராக்கள் எதை பார்க்கின்றன என்பதை நேரடியாகப் காண இயலும். ஒரு கணினி மற்றும் இணைய இணைப்பு வைத்து இருந்தால் போதும் உலகின் எந்த இடத்திலுருந்தும் கண்காணிப்பை திரையிட அனுமதிக்கிறது. இந்த சிறப்பியல்பு IP கேமிராக்களின் சிறப்பியல்புகளைப் போன்றது. இந்த அமைப்பின் புகழ்பெற்ற நிகழ்வு ஃபுளோரிடா, பாய்ண்டன் பீச்சை சேர்ந்த ஜென்னி தாமஸ் என்ற பெண் தனது வீடு திருடப்படுவதை அலுவலகத்திலிருந்த படி கண்டு காவல் துறையுடன் தொடர்பு கொண்டார்.[45]

சிறிய வணிக உரிமையாளர்கள் மற்றும் சிறிய அலுவலகங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளின்[46] செல்வாக்கு உயர்ந்துள்ளது.[47] கடினமான ups மற்றும் கடினமான பயனாளி இடைமுகங்கள் இல்லாமல் பயனாளிகள் தங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கான தீர்வுகளை விரும்புகின்றனர்.[48]

சூழ்நிலைக்கூறு பயன்பாடுகள்

இங்கிலாந்து, இஸ்ப்விச்சில் ஒலி பெருக்கிகளுடன் இணைக்கப்பட்ட சி.சி.டிவி கேமிராவிற்கான எடுத்துக்காட்டு
  • ஹெஸ்டாலென் AMS இல் உபயோகப்படுத்தப்படும் சி.சி.டிவிகள் அடையாளங்கண்டுபிடிக்கப் படாத பறக்கும் பொருள்களை கண்டறியப் பயன்படுகிறது.
  • தொலைக்காட்சியின் முந்தைய காலங்களில், சில நிகழ்ச்சிகள், நேரடி விளையாட்டு சம்பவங்கள், மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி மூலம் அமெரிக்காவின் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் மெட்ரோபோலிட்டன் ஆப்ராவின் தயாரிப்பான பைஜெட்டின் கார்மென் நிகழ்ச்சி முழுவதையும் NBC மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி மூலம் ஒலிபரப்பியது. பல்வேறு திரைப்பட திரையரங்குகளில் 1965 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இண்டியானபோலிஸ் 500 நிகழ்ச்சி நேரடியாக மூடிய-மின்சுற்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. ரசெல்மேனியாவின் முதல் பகுதிகள் சில இந்த முறையில் தான் காண்பிக்கப்பட்டன. சூப்பர் பவுல்ஸ் விளையாட்டின் முதல் ஆறு பகுதிகள் அதை வழங்கும் நகரங்களில் நடைபெறுவதை சிறப்பான மூடிய-மின்சுற்று TVகளில் திரட்டும் போது சர்வதேச கால்பந்து சங்கங்களின் விதிமுறைகள் இருந்ததால் விளையாட்டு ஒளிபரப்ப இயலவில்லை.
  • இங்கிலாந்தின் சில பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ள பேசும் சி.சி.டிவிகளின் மூலம் இயக்குபவர் தான் கண்காணிக்கும் நபருடன் நேரடியாக பேச இயலும்.
  • "வேர்ட்ஸ் ரூடஸ்ட் ட்ரங்ஸ் அவுட்சைட் நைட்க்ளப்ஸ் இன் த நார்த் ஆப் இங்கிலாந்து" என்ற நிகழ்ச்சியை இங்கிலாந்து முழுவதும் வெளிவர குறைந்த-செலவில் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுக்கு மூடிய-மின்சுற்று தொலைக்காட்சிகள் பெரிதும் உதவி செய்ததாக பிரிட்டிஷ் எழுத்தாளர் க்ரிஷ் ராபர்ட்ஸ் பேசும் போது நகைச்சுவையாக குறிப்பிட்டார்.[49]

சி.சி.டிவி சமநிலை நடவடிக்கைகள்

முறையாக பாதுகாக்கபட்டாலும், சி.சி.டிவி கேமிராக்கள் பல காரணங்களுக்காக (அதிகமாக சட்டவிரோதமான) பாதிக்கப்படக்கூடிய வகையில் உள்ளது:

  • சில மக்கள் வேண்டுமென்றே கேமிராக்களை அழிக்கின்றனர். சிக்காகோ காவல் துறையால் இயக்கப்படும் கேமிராக்களைப் போன்ற சில வெளிப்புற கேமிராக்கள், குண்டு துளைக்காத வகையில் பராமரிக்கப்படுகின்றன.
  • லென்ஸ்களில் தெளிக்கப்படும் நீர்மங்கள் படங்களை பார்ப்பதற்கு மங்கலாக்குகிறது.
  • லேசர் பாயிண்டர்கள் கேமிராக்களை தற்காலிகமாக பார்வையற்றதாகவும்,[50] அதிக திறனுள்ள லேசர்கள் அவற்றை சேதாரமும் செய்கின்றன. எனினும், பல லேசர்கள் ஒற்றை நிறமாக உள்ளது, நிற வடிகட்டிகள் லேசர் பாயிண்டர்களின் விளைவுகளை குறைக்கின்றன. எனினும் வடிகட்டிகள் படத்தின் தரம் மற்றும் கேமிராக்களின் ஒட்டுமொத்த உணர்திறனையும் அழிக்கின்றன (வடிகட்டிகள் பற்றிய அறிய லேசர் சேஃப்டி என்ற கட்டுரையைப் பார்க்க) மேலும், அகச் சிவப்பு, சிவப்பு, பச்சை, நீளம் மற்றும் UV லேசர்களிடமிருந்து முழுமையாக பாதுகாக்க கருப்பு வடிகட்டிகள் முழுமையாகத் தேவைப்படுகிறது, இல்லையெனில் கேமிராக்களை உபயோகம் செய்ய முடியாமல் செய்து விடுகிறது.
  • கம்பியில்லா வலையமைப்பில் செலுத்தப்படும் குறியீடானது சி.சி.டிவி வலையமைப்பில் ஒரே அலைவரிசையில் வரும் போது நெரிசல் ஏற்படுவதாக அறிக்கை கூறுகிறது.

மேலும் காண்க

  • பிழை திருத்தம்
  • மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி கேமிரா
  • ஆவணப்படப் பயிற்சி
  • ஐ இன் தி ஸ்கை
  • போலிப் பாதுகாப்பு கேமிரா
  • தகவல் விழிப்புணர்வு அலுவலகம்
  • IP கேமிரா
  • புறநிலைப் பாதுகாப்பு
  • காவல்
  • தகவல் பாதுகாப்பு சர்வதேசம்
  • தனியுடைமையுடைய DVR
  • பாதுகாப்பு செயல்பாடு நிலையம்
  • சோஸ்வெல்லினஸ் (தலைகீழான கடுங் கண்காணிப்பு)
  • கடுங் கண்காணிப்பு
  • தொலைத்திரை
  • புதிய விடுதலையின் மரபு
  • TVNP (தொலைக்காட்சி வலையமைப்பு நெறிமுறை)
  • நிகழ்படம் பகுப்பாய்வு

குறிப்புகள்

  1. லீவிஸ், பால். ""எவரி ஸ்டெப் யு டேக்: UK அண்டர்கிரவுண்டு சென்டர் தட் இஸ் ஸ்பை கேபிட்டல் ஆப் தி வேர்ல்ட்", தி கார்டியன் , மார்ச் 2, 2009
  2. டோர்ன்பெர்ஜர், வால்டர்: V-2 , பாலண்டைன் புக்ஸ் 1954, ASIN: B000P6L1ES, பக்கம் 14.
  3. "ET_SRB Cam FS.indd" (PDF). பார்த்த நாள் 2009-07-22.
  4. "Ecliptic Enterprises Corporation". Eclipticenterprises.com. பார்த்த நாள் 2009-05-08.
  5. Brent D. Johnson. "Cameras Monitor Rocket Launch". Photonics.com. பார்த்த நாள் 2009-05-08.
  6. Staff (August 2007). "CCTV". Borough Council of King's Lynn & West Norfolk. பார்த்த நாள் 2008-12-14.
  7. "CCTV in London" (PDF). பார்த்த நாள் 2009-07-22.
  8. பனிஸ்ட்டர், J., மெக்கன்சி, S. அண்டு நோரிஸ், P. பப்ளிக் ஸ்பேஸ் சி.சி.டிவியின் ஸ்காட்லாந்து(2009), ஸ்காட்டிஷ் சென்டர் பார் கிரைம் அண்டு ஜஸ்டிஸ் ரிசர்ச் (ரிசர்ச் ரிப்போர்ட்)
  9. "FactCheck: how many CCTV cameras? - Channel 4 News". Channel4.com. பார்த்த நாள் 2009-05-08.
  10. "How many cameras are there?". CCTV User Group (2008-06-18). பார்த்த நாள் 2009-05-08.
  11. Baram, Marcus (2007-07-09). "Eye on the City: Do Cameras Reduce Crime?". ABC News. http://www.abcnews.go.com/US/Story?id=3360287&page=1. பார்த்த நாள்: 2007-07-10.
  12. "டென்ஸ் ஆப் தௌசண்ட்ஸ் ஆப் சி.சி.டிவி கேமராஸ், எட் 80% ஆப் கிரைம் அன்சால்வ்டு" பை ஜஸ்டின் டேவன்போர்ட் 2007
  13. "ஆர் சி.சி.டிவி கேமராஸ் எ வேஸ்ட் ஆப் தி மனி இன் தி பைட் அகைன்ஸ்ட் கிரைம்?" தி இண்டிபெண்டென்ட், 7 மே 2008
  14. Hughe, Mark (25 August 2009). "CCTV in the spotlight: one crime solved for every 1,000 cameras". Independent News and Media Limited. http://www.independent.co.uk/news/uk/crime/cctv-in-the-spotlight-one-crime-solved-for-every-1000-cameras-1776774.html. பார்த்த நாள்: 2009-08-27.
  15. "சி.சி.டிவி டு டிரைவ் டவுன் கேப் அட்டேக்ஸ்," BBC
  16. டாக்ஸி சி.சி.டிவி கேமிராஸ் ஆர் இன்ஸ்டால்டு," BBC
  17. சி.சி.டிவி பட்ரோல்ஸ் டூ மானிட்டர் எஸ்டேட்ஸ்," BBC
  18. "http://news.bbc.co.uk/," BBC
  19. "சி.சி.டிவி மாஸ்ட் டெஸ்ட்ராய்ட் பை வேண்டல்ஸ்," BBC
  20. "டாக்கிங் சி.சி.டிவி பயோனைரைட் இன் வில்ட்ஷைர்," BBC ,23 மார்ச் 2003
  21. "மெனிசஸ் பேமிலி வியூ சி.சி.டிவி புட்டேஜ்," BBC
  22. "மெனிசஸ் டெத் 'கவர்-அப்' டவுடேட்," BBC
  23. "டிஜிட்டல் சி.சி.டிவி ஸ்கீம் சுவிட்சஸ் ஆன்," BBC
  24. "NEP Broadcasting, LLC NEP Europe - NEP Visions - NEP Roll to Record". Guardian.nepinc.com. பார்த்த நாள் 2009-05-08.
  25. பப்ளிக் டூ மானிட்டர் சி.சி.டிவி ஃப்ரம் ஹோம், BBC
  26. கிரிஸ்டோபர் வேர்த் டூ வாட்ச் தி வாட்சர்ஸ் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 20, நியூஸ்வீக்
  27. நியூஸ்வீக்
  28. "யு'ஆர் பீயிங் வாச்சுடு, நியூ யார்க்!," 11 மார்ச், 2002 BBC
  29. "இஸ் சிகாகோ சேப் பிரம் எ டெரரிஸ்ட் அட்டாக்?," சிகாகோ சன்-டைம்ஸ்
  30. "துல்சா!," 11 மார்ச், 2009 GSS
  31. "லட்டின் அமெரிக்கன் பிசிக்கல் செக்யூரிட்டி மார்க்கெட் க்ரோவிங் ரேபிட்லி," 8 அக்டோபர் 2009, செக்யூரிட்டி மேகசின்
  32. "ATM Security". Dedham Savings. பார்த்த நாள் 2009-04-18.
  33. ஸ்மைல், தி கேமராஸ் ஆர் கியர் டூ வாட்ச் ஓவர் யு - தி நியூசிலாந்து ஹெரால்ட், செவ்வாய்க் கிழமை 18 மார்ச் 2008, பேஜ் A14
  34. "Information Commissioner's Office". Informationcommissioner.gov.uk. பார்த்த நாள் 2009-05-08.
  35. மெஜாரிட்டி ஆப் UK's சி.சி.டிவி கேமராஸ் 'ஆர் இல்லீகல்' Telegraph.co.uk
  36. ஃபிரிடம் ஆப் இன்பர்மேஷன் அண்டு புரடக்சன் ஆப் ப்ரிவசி ஆக்ட் டெக்ஸ்ட்
  37. "Congestion charge car '200 miles away'". BBC News. 2003-03-19. http://news.bbc.co.uk/1/hi/england/2865949.stm. பார்த்த நாள்: 2009-05-08.
  38. "Some IP Cameras can be remotely monitored with an iPhone and other compatible 3G devices" (PDF). பார்த்த நாள் 2009-07-22.
  39. "Advanced Remote Viewing Options on Lorex IP Cameras". Focusoncctv.lorextechnology.com. பார்த்த நாள் 2009-10-28.
  40. "Total Cost of Ownership study, Axis Communications". பார்த்த நாள் 2008-02-28.
  41. "Lorex camera's features and spec. to show how advanced IP cameras are now becoming". Focusoncctv.lorextechnology.com. பார்த்த நாள் 2009-05-08.
  42. நெட்வொர்க் பேண்ட்வித் அண்டு வீடியோ ஸ்ட்ரோஜ் ஸ்பேஸ் கால்குலேசன் பை JVSG, ஜனவரி 17, 2008
  43. "சிகாகோ' கேமரா நெட்வொர்க் இஸ் எவரிவேர்", தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
  44. "A spec sheet from a Lorex All-In-One LCD DVR System to show tan example of this type of technology" (PDF). பார்த்த நாள் 2009-07-22.
  45. By Kim Segal CNN (2009-04-10). "How IP Cameras can help protect your home. Real CNN report". Cnn.com. http://www.cnn.com/2009/CRIME/04/10/webcam.home.invasion/index.html#cnnSTCVideo. பார்த்த நாள்: 2009-05-08.
  46. Post a comment (2008-08-06). "All-in-one LCD DVR is so simple, you can install and run it yourself". Smallbiztechnology.com. பார்த்த நாள் 2009-05-08.
  47. "All-in-one LCD DVR has additional functions for store owners". 2sbdigest.com. பார்த்த நாள் 2009-05-08.
  48. "Lorex simplifies Observation Systems with All-in-one LCD DVR Systems". Lorexstore.lorextechnology.com. பார்த்த நாள் 2009-05-08.
  49. க்ரிஸ் ராபர்ட்ஸ், ஹெவி வோர்ட்ஸ் லைட்லி த்ரௌன்: தி ரீசன் பிகைண்ட் ரைம், தொர்ன்டிக் பிரஸ், 2006 (ISBN 0-7862-8517-6)
  50. michael naimark (2002-10-01). "http". //naimark.net/. பார்த்த நாள் 2009-05-08.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.