முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி

வித்தியானந்த கல்லூரி வன்னி, முல்லைத்தீவில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்று. இது 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இப்பாடசாலையின் 1 ஆவது அதிபராக இருந்தவர் AFK ஞானப்பிரகாசம்.[1] இந்தக் கல்லூரியின் வளாகம் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு 6 தொடக்கம் உயர்தர வகுப்பு (ஆண்டு 12) வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இப்பாடசாலையில் 702 மாணவர்கள் கல்வி பயின்றனர்.


கல்லூரி அதிபர்களாக கடமையாற்றியோர்

  1. AFK ஞானப்பிரகாசம்
  2. தியாகராசர்
  3. கனகையன்
  4. A.K. மகாலிங்கம்
  5. இ. தங்கராசா
  6. ச.வே. பாலசிங்கம்
  7. சு. திருஞானம்
  8. P. கணேஷ்
  9. K. சிவலிங்கம்

மேற்கோள்கள்

  1. "Vidyananda’s Contribution to Vanni’s Education". Ilankai Tamil Sangam. பார்த்த நாள் 20 ஆகத்து 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.